பொது
ஒளு:
தண்ணீரால் உடலின் சில குறிப்பிட்ட உறுப்புக்களை சுத்தம் செய்வதற்கு ஒளு என்று பெயர். தொழுவதற்கு முன் உளு என்னும் அங்கசுத்தி செய்து கொள்ளல் வேண்டும். முஃமின்களே! நீங்கள் தொழுகைக்குச் சென்றால் உங்கள் முகங்களையும், முழங்கைகள் வரை உங்கள் கைகளையும், கணுக்கால் வரை உங்கள் கால்களையும் கழுவுவதோடு, நீரில் நனைத்த கைகளினால் உங்கள் தலையையும்(சிறு பகுதியைத்) தடவிக் கொள்ளுங்கள்'. -அல்-குர்ஆன் (5:6) இந்த ஒளு எடுப்பதற்கு ஷர்த்து, பர்ளுகள், சுன்னத்துக்கள் உண்டு.…
Read More »பாங்கின் அர்த்தம்
அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அல்லாஹு அக்பர் :அல்லாஹ் மிகப்பெரியவன் அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அல்(ன்)லாயிலாஹ இல்லல்லாஹ் :அல்லாஹ்வைத்தவிர வேறு இறைவன் இல்லை என்று உறுதி கூறுகிறேன். அஷ்ஹது அன்ன முஹம்மதர் ரசூலுல்லாஹ் :முஹம்மது(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள் என்று நான் உறுதி…
Read More »நபிமார்கள் தொழுத முதல் தொழுகைகள்
எந்த எந்தத் தொழுகையை எந்த எந்த நபி முதலில் தொழுதார்கள்: 1. பஜ்ர் – ஆதம் (அலைஹிஸ்ஸலாம்) 2. ளுஹர் – இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாம்) 3. அஸர் – யாகூப் (அலைஹிஸ்ஸலாம்) 4. மஃரிப் – தாவூது (அலைஹிஸ்ஸலாம்) 5. இஷா – யூனூஸ் (அலைஹிஸ்ஸலாம்)
Read More »தொழுகையின் குறிக்கப்பட்ட நேரங்கள்
நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிப்பிக்கப்பட்ட கடமையாகவுள்ளது. (ஆல்குர் ஆன் :4:103). ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும். நாள்தோறும் நிறைவேற்றப்படும் வாஜிபான தொழுகை மொத்தமாக பதினேழு ரகஅத்துகளாகும். சுபஹ் – இரண்டு ரகஅத்துகள் ளுஹர் – நான்கு ரகஅத்துகள் அஸர் – நான்கு ரகஅத்துகள் மஃரிப் – மூன்று ரகஅத்துகள் இஷா – நான்கு ரகஅத்துகள்…
Read More »தொழுகையின் ஒழுக்கங்கள்
தொழுகைக்கு இறையச்சம் இன்றியமையாததாகும். இறையச்சமற்ற தொழுகை குறையுடைய தொழுகையாகும். எனவே தொழுகையை மிகவும் அச்சஉணர்வுடன் நிறைவேற்றவேண்டும். நாம் அல்லாஹ்வை காணாவிட்டாலும் அவன் நம்மை பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் தொழவேண்டும். தொழுகை இறைவனுடன் உரையாடுவது போன்றதாகும். எனவே தொழுகையில் தொழுகையல்லாத மற்றவற்றை சிந்திப்பது, பேசுவது, ஏதேனும் சாப்பிடுவது, மேலே, வலது, இடது புறங்களிலே திரும்புவது, ஸலாத்திற்கு பதில் சொல்வது மேலும் இதுபோன்ற அனைத்தும் தடுக்கப்பட்டுள்ளது. ஆண்கள் பள்ளிவாயிலில் கூட்டாகத் தொழ…
Read More »தொழுகையின் சிறப்புக்கள்
இஸ்லாத்தை தழுவியபின் முதற்கடமை தொழுகையாகும். இது இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். பருவமடைந்த, ஆண், பெண் அனைவரின் மீதும் தொழுகை கடமையாகும். அல்லாஹ் நமக்களித்துள்ள எண்ணிலடங்கா அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தும் வணக்கமே இத்தொழுகை. எனவே அதனை கடமை உணர்வுடனும் நன்மையை எதிர்பார்த்தும் இறைவனுக்கு நன்றி செலுத்துவதற்காகவும் முறையாக நிறைவேற்றவேண்டும். இந்தக் கடமை மனிதன் மரணிக்கும் போதுதான் முடிவடைகிறது. ஊரில் இருக்கும் போதும் பயணத்தில் இருக்கும் போதும் ஆரோக்கியமாக இருக்கும் போதும்…
Read More »ஈமான்
அல்லாஹ்வையும் அவனுடைய அமரர்களையும், நபிமார்களையும், வேதங்களையும் இறுதி நாளையும், நன்மை தீமைகள் யாவும் அல்லாஹ்வின் நாட்டப்படியே நடக்கின்றன என்பதையும் உளமாற நம்பி உறுதி கொள்வது ஈமானின் அடிப்படையாகும். அல்லாஹ்: பரம்பொருளான அல்லாஹுதஆலா ஏகனாக, நித்திய ஜீவியாக இருக்கின்றான். அவன் ஆரம்பமும், முடிவும் இல்லாதவனாக எல்லா அம்சங்களிலும் படைப்பினங்களுக்கு வேறுபட்டவனாக தானாகவே இயங்குபவனாக, சிருஷ்டிகளைப் படைத்து இயக்குபவனாக, பிற பொருளின் பால் எவ்விதத் தேவையும் இல்லாதவனாக இருக்கிறான். இறைவனுக்கே உரிய முறையில்…
Read More »அல்லாஹ்வின் திக்ரின் சிறப்புகள்
தொகுப்பு:W.S.S. முஹம்மது முஹிய்யத்தீன் ஹஜ்ரத் அபூதர்தா ரழியல்லாஹு தஆலா அன்ஹு அறிவிக்கிறார்கள்,ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களை நோக்கி,உங்களுடைய இறைவன் அல்லாஹ்விடத்தில் மிகவும் உயர்வான,தூய்மையான ஒரு செயல்,அது உயர்ந்த தரஜாவை கொடுக்கும்,அல்லாஹ்வின் பாதையில் தங்கம்,வெள்ளி இவைகளை செலவு செய்வதை காட்டிலும்,எதிரிகளின் தலையை வெட்டி வீழ்த்துவதை விடவும் மிகவும் மேலானது.அப்படிபட்ட ஒரு செயலை உங்களுக்கு தெரிவிக்கட்டுமா?என வினவினார்கள். ஸஹாபாக்களும் ஆம்,யாரஸூலல்லாஹ்! கூறுங்கள் என்றனர். அது தான் “திக்ருல்லாஹ் “ (இறை தியானம்)…
Read More »விருந்து வைபவங்கள்
நமது நகர் விருந்தோம்பலுக்கு பெயர் பெற்ற ஊர் ஆகும். நமதூரில் விருந்துகள் திருமணத்தை ஒட்டி வைக்கப்படும் வலீமா, மருவுணம், தண்ணிக் குடி சாப்பாடு, குட்டி மருவுண விருந்துகளும், சுன்னத் மற்றும் பெண்கள் பாலிகானதை ஒட்டி வைக்கப்படும் விருந்துகளும், பிள்ளைகள் பெயர் விடும் வைபவம், மாப்பிள்ளை பேசியதற்கு வைக்கப்படும் விருந்துகளும்,கந்தூரியில் வைக்கப்படும் விருந்துகளும், நண்பர்கள் சேர்ந்து வைக்கும் பார்ட்டி என்ற விருந்துகளும், விருந்தாளிகள் வெளியூர்களிலிருந்து வருகை தந்தால் வைக்கப்படும் விருந்துகளும், ஹஜ்ஜிற்கு…
Read More »திசையான், பறை, அடாப்பு, கண்டு சொல்லல், ஜமாஅத் அழைப்பு
பொதுவிழாக்களுக்கு விடுக்கும் அழைப்பு: நகரில் அதிகமதிகமாக பொதுவான விழாக்கள் அப்போதப்பது நடத்தப்படுகிறது. கந்தூரி விழாக்களுக்கு ஆரம்பத்தில், பொதுமக்கள் கலந்து கொள்வதற்கு அழைப்பு கொடுப்பது எப்படி என்றால், அனைத்துப் பள்ளிவாயில்கள், சங்கங்களுக்கு கந்தூரி பற்றிய அறிவிப்பு கடிதம், நோட்டீஸ் போன்றவை கந்தூரி விழாக்கள் ஆரம்பிப்பதற்கு சுமார் 3 அல்லது 4 நாட்களுக்கு முன்னதாக அனுப்பி வைக்கப்படுகின்றன. முன் ஜும்ஆவிலும் விநியோகிக்கப்படுகிறது. பின்பு பெரிய கந்தூரிகளுக்கு – ஒருவர் கந்தூரி விபரங்களை கந்தூரி…
Read More »