வரலாறு
தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு
செய்கு அப்துல் காதிர் என்ற தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1191 ல் பிறந்தார்கள். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை முழுவதும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்கள் தமிழ் மற்றும் அரபி மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதில் 'அஹ்மதுல்லா' என்ற பைத் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்…
Read More »பெரிய முத்து வாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
பெரிய முத்துவாப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு: செய்யிது அஹ்மது வலி என்ற பெரிய முத்துவாப்பா அவர்கள் ஷெய்கு இஸ்மாயில் வலி அவர்களின் மகனாக ஹிஜ்ரி 1187 ல் பிறந்தார்கள். சிறுவயதிலேயே ஹாபிழாக திகழ்ந்தார்கள். இவர்கள் நாகூரில் உள்ள குத்பு வஜ்ஹுத்தீன் என்ற ஞானாசிரியடம் பைஅத் பெற்றார்கள். இவர்கள் 7 வருடம் காடுகளில் சுற்றித் திரிந்து தவம் செய்தார்கள். பின்பு முத்து வியாபாரம் செய்தார்கள். இவர்கள் ஹிஜ்ரி 1293 ல்…
Read More »ஆயிசா வலி(சொர்க்கத்துப் பெண்):
இவர்களின் அடக்கஸ்தலம் மேலப் பள்ளியில் உள்ளது. இவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு மச்சி முறையாகும். ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இவர்கள் பேரில் மர்திய்யா இயற்றியுள்ளனர்.
Read More »செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி காஹிரி ரலியல்லாஹு அன்ஹு
காயல்பட்டணத்தில் பெருமைக்குரிய கம்பெனியார் குடும்பத்தில் செய்யிதினா அபுபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் வமிசத்தில் 39 வது தலைமுறையில் ஹிஜ்ரி 1322 ல் சி.ஏ.கே. அஹ்மது முஹ்யித்தீன்-முஹம்மது இபுறாகீம் நாச்சி ஆகிய தம்பதிகளுக்கு கடைசிக் குழந்தையாக பிறந்தார்கள். காயல்பட்டணத்தில் 8 ஜுஸ்வு வரை ஹிப்ழு ஓதினார்கள். ஆலிமாக விருப்பம் கொண்டு அச் சமயம் நகருக்கு வருகை தந்திருந்த காதிரிய்யா தரீகாவின் பிரபலமான செய்கு ஸெய்யிது குடும்பத்தவரான ழியாவுல் ஹக்…
Read More »மகான் மாப்பிள்ளை லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு
காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் ஹிஜ்ரி 1232 முஹர்ரம் பிறை 18 (கி.பி.1816) செவ்வாய்க் கிழமை அன்று வெள்ளை அஹ்மது லெப்பை ஆலிம் அவர்களின் மகனாக, மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் வமிச வழியில் மகான் இமாமுல் அரூஸ் செய்யித் முஹம்மது ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பிறந்தார்கள். இவர்களது இரண்டாம் வயதில் இவர்களின் குடும்பம் கீழக்கரை சென்று குடியேறியது. ஞான மேதை கீழக்கரை தைக்கா…
Read More »உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள காயல்பட்டணத்தில் உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ ஹிஜ்ரி 1163 (கி.பி.1751) மஹான் மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகளார் கதீஜா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் மகனார் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகனாக பிறந்தார்கள். தாயார் ஃபாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ முதலில் முஹம்மது நுஸ்கி என்ற…
Read More »லெப்பை அப்பா வலிமார்கள் ரலியல்லாஹு அன்ஹுமா.
பெரிய லெப்பை அப்பா வலி நாயகம் ரலியல்லாஹு அன்ஹு. இவர்களின் முழுப் பெயர் செய்கு அப்துல் காதிறு. பட்டப் பெயர் கறுத்த சேக்னா லெப்பை ஆலிம். பிறப்பு ஹிஜ்ரி 1091. மறைவு ஹிஜ்ரி 1150. சின்ன லெப்பை அப்பா வலி நாயகத்தின் இயற் பெயர் முஹம்மது அப்துல் காதிறு. பிறப்பு ஹிஜ்ரி 1094. மறைவு ஹிஜ்ரி 1145. அடக்கஸ்தலம் நெய்னார் தெரு…
Read More »சேக்னா லெப்பை புலவர்ரலியல்லாஹு அன்ஹு
இவர்களின் இயற் பெயர் செய்கு அப்துல் காதிறு நெய்னா லெப்பை ஆலிம் புலவர் ஆகும். இவர்கள் தைக்கா சாஹிப் வலி நாயகம் அவர்களின் சீடர். கம்பருக்குப் பின் தோன்றிய கவிஞர்களில் இவர்களுக்கே முதல் ஸ்தானம் கொடுக்கப்படுகிறது. புதூஹ்ஷhம், நாகயந்தாதி, திருமணிமாலை, காரணபுராணம், சொர்க்க நீதி, கோத்திர மாலை, அட்டநாக பந்தம், மக்கா கலம்பகம் முதலிய கபவியங்களை இயற்றியுள்ளார்கள். மக்கா கலம்பகம் மக்கா சென்றபோது அங்கு பாடி ஸல்லல்லாஹு அலைஹி…
Read More »லுகவி முஹம்மது லெப்பை வலி ரலியல்லாஹு அன்ஹு
இவர்கள் நுஸ்கி வலி அவர்களின் வம்சாவழியில் வந்தவர்கள். உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு, சின்ன பாலப்பா, இரக்கை வெட்டி ஆலிம் ஆகியோர்களின் உஸ்தாது இவர்கள்.இவர்கள்தான் முதன் முதலில் அரபும், அரபுத்தமிழும் கொண்ட அகராதியை தொகுத்தவர்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1226 ரமலான் பிறை 18. அடக்கஸ்தலம் மொகுதூம் பள்ளி குத்துக்கல் தெரு பகுதி.
Read More »செய்யிது அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு.
இவர்களின் தந்தை பெயர் ஷாஹிது. பாட்டனார் முஹம்மது கரீம் மதனி ரலியல்லாஹு அன்ஹு அவர்களாவார்கள். செய்யிது அஹ்மது வலி அவர்கள் காயல்பட்டணம் கடற்கரை பள்ளியில் பல ஆண்டுகள் இமாமாக பணியாற்றியுள்ளார்கள். குர்ஆன் ஓதிக் கொடுத்து இருக்கிறார்கள். இவர்களின் மறைவு ஹிஜ்ரி 430 துல்ஹஜ் பிறை 8. அடக்கஸ்தலம் கோசுமறை பள்ளி அருகில்.
Read More »