வழக்கங்கள்
குழந்தைக்கு அணியாடை கிழிக்கும் விழா
குழந்தை உண்டாகி ஏழு மாதங்கள் ஆனதும் குழந்தை பெறுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்து விடுவார்கள். அப்போது சொந்தக்காரர்களை அழைத்து, குழந்தைக்கு பயன்படும் துணிகள் – வாய் துடைக்கும் துணி, இடுப்புக்கு கீழே உள்ள துணி, குளித்தால் துடைத்தபிறகு குழந்தையை கையில் வைத்திருக்க பயன்படும் துணிகள் (இதற்கு பெயர் அணியாடை) போன்றவற்றை உருவாக்கி கொள்வதற்காக விழா போல் எடுத்து மௌலிது, ஸலவாத்து, பைத்துகள் ஓதி புதிய பருத்தி(காட்டன்) துணி நைஸானதை கிழித்து…
Read More »சமுதாய கட்டமைப்பு
ஒவ்வொரு சமுதாயமும் ஒரு கட்டுக்கோப்பைக் கொண்டுள்ளன. அதன்படி இஸ்லாமிய சமுதாயம் ஒரு கட்டுக் கோப்பை கொண்டுள்ளது. அந்த கட்டுக்கோப்பு ஒழுக்கம் நிறைந்ததாகவும், அறிவாண்மையானதாகவும், அறிவியல் பூர்வமானதாகவும் இருப்பதை நாம் பார்க்கிறோம். அந்த இஸ்லாமிய கட்டுக் கோப்புடன் கூடிய ஒரு கட்டுக்கோப்பை காயல்பட்டணம் மக்கள் கொண்டுள்ளனர். அந்தக் கட்டுக் கோப்புதான் நகர மக்கள் முன்னேறுவதற்கும், மாற்று சமுதாயத்தினர்களுடன் ஒற்றுமையாக வாழ்வதற்கும் வழிவகுத்துள்ளது. மக்களை ஒழுக்க சீலர்களாகவும், மகான்களாகவும் மேம்படுத்தியுள்ளது. காயல்பட்டணம் பெரும்பான்மையான…
Read More »புள்ளி மாற்றும் வழக்கம்.
மாப்பிள்ளை பெண் வீட்டிற்கு சென்று குடியேறுவது வழக்கமாக இருப்பதால், பெண் வீட்டார் தங்கள் பெண்ணுக்கு வீடு கொடுப்பது என்ற நடைமுறை வந்து இதனுடன் ஒட்டிக் கொண்டது. அதன்படி பெண்ணிற்கு ஒரு வீடு கொடுக்க வேண்டும். அதில்தான் பெண்ணும் பெண்ணின் தாயார், தந்தை, அண்ணன், தம்பி, தங்கைமார்கள் இருப்பார்கள். ஒருவருக்கு ஒரு பெண்ணிற்கு மேல் இருந்தால் கடைசியாக இருக்கும் பெண்ணிற்கு கொடுக்கும் வீட்டில்தான் பெண்ணின் தாய், தந்தை, அண்ணன்,…
Read More »திருமண பழக்கவழக்கம்
உலகில் ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியாக பழக்கவழக்கங்கள் உள்ளன. அப்பழக்கவழக்கங்கள் உலக நடைமுறை பழக்கத்திற்கு மாற்றமாகவோ ஒத்துப்போயோ இருக்கலாம்.சில பழக்கவழக்கங்கள்வித்தியாசமாகவும், ஆச்சரியப்படத்தக்க அளவிலும் இருக்கும். அவ்வாறு உள்ள பழக்கவழக்கங்களில் காயல்பட்டண மக்களுக்கு என்று தனியாக உள்ள பழக்க வழக்கங்களை இங்கே நாம் விவரித்துக் காட்ட வேண்டியுள்ளது. திருமண பழக்கவழக்கம்: ஒரு ஆணுக்குத் திருமணம் முடிந்தவுடன் அவன் தன்னுடைய வீட்டிற்கு தனது மனைவியை அழைத்து வந்து இல்லறவாழ்வில் ஈடுபடுவதுதான் வழக்கம். இவ்வழக்கம் மற்ற சமுதாயத்திலும்…
Read More »உறவினர்கள்
குடும்பம் என்று வந்துவிட்டால் பல்வேறு நபர்கள் இருப்பார்கள். அவர்களின் உறவு முறை ஒன்றாகவே இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் அதை அழைக்கும் விதம் பல்வேறாக இருக்கின்றன. காயல்நகரில் அந்த உறவு முறைகளை அழைக்கும் விதத்தை இங்கு குறிப்பிடுகிறோம். உம்மா – தாய் வாப்பா-தந்தை கம்மா-தாயைப் பெற்ற தாயார் மாமி-பெண்சாதியின் தாயார், பூட்டி-தாயைப் பெற்ற அம்மாவின் அம்மா மாமி-மாமாவின் மனைவி, சாச்சி-தாயாரின் இளைய சகோதரி சாச்சப்பா-தாயாரின் இளைய சகோதரியின் கணவர், தந்தையின்…
Read More »காயலின் சிறுவயது விளையாட்டுக்கள்
இந்தியாவின் உயிர் கிராமங்கள்தான். இன்றும் கிராம மக்கள் பழகுவதற்கும், உபசரிப்பதற்கும் மிகவும் மேம்பட்டவர்களாக இருக்கிறார்கள். அந்த கிராமங்களில் சிறுவயதில் மக்கள் வாழ்ந்த வாழ்க்கை தற்போது நினைத்து பார்த்தால் மிக இனிமையானது.அன்று நடந்த நிகழ்ச்சிகள் தற்போது கிடைக்கவே கிடைக்காது. அந்த சிறுவயதில் ஒவ்வொரு கிராமத்திலும் சிறுவர்கள் மற்றும் வாலிபர்கள் பல்வேறு விளையாட்டுக்களை விளையாடி இருப்பார்கள். அந்த சிறுவயதில் நமதூர் மக்கள் விளையாடிய விளையாட்டுக்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். புளியமுத்து, போலா, ரெட்டாங்கோடு,…
Read More »