Uncategorized
ஸுஜூதுகள்
ஸஜ்தா ஸஹ்வு மறந்ததற்காக ஸுஜூது செய்தல்' என்பது இதன் பொருள் ஆகும். தொழுகையின் கடைசி அத்தஹிய்யாத் ஓதி முடித்த பின்பு ஸலாம் கொடுப்பதற்கு முன்பாக இரண்டு ஸஜ்தா செய்வதை இது குறிக்கிறது. இவ்விரண்டு ஸுஜூதுகளும் ஃபர்ளுகளை விட மேலதிகமான செயல்களாக இருப்பதால் இவற்றைச் செய்யத் தொடங்கும்போது 'மறதிக்காக ஸுஜூது செய்கிறேன்' என்றுநிய்யத் செய்வது ஃபர்ளாகும். இதில், سبحان من لاّينام ولايسهو என்று தஸ்பீஹ் ஓதுவது சிறப்பானது என்று…
Read More »சுன்னத்தான தொழுகைகள்
உபரியானவை எனப் பொருள் தரும் நபிலான வணக்கங்களை வணங்குவதால் நன்மைகள் கிடைக்கும்.அவைகளை விட்டுவிடுவதால் தண்டனை தரப்படுவதில்லை. ஃபர்ளான வழிபாடுகளில் ஏற்படும் குறைகளi மறுமையில் நிறைவுபடுத்துவதற்காகவே இந்த நபிலான வணக்கங்கள் உள்ளன. ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்: ளுஹர், அஸர் இவைகளுக்கு முன்பாக இரண்டிரண்டு ரக்அத்துகளாக நான்கு ரக்அத்துகளும், ளுஹருக்குப் பின்பு இரண்டிரண்டு ரக்அத்தாக நான்கு ரக்அத்துகளும், மஃரிபிற்கு முன் (நேரமிருப்பின்) இரண்டு ரக்அத்களும், பின் இரண்டு ரக்அத்துகளும், இஷாவிற்கு…
Read More »ஜும்ஆ
ஜும்ஆ என்ற அரபு வார்த்தைக்கு ஒன்று கூடுதல் என்று பொருள். ஜும்ஆ தொழுகை உம்மத்தே முஹம்மதிய்யாவிற்கு மட்டும் உரிய வணக்கமாகம். அடிமை-நோயாளி, குழந்தைஈ பெண் நீங்கலாக பருவம் அடைந்த ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் ஜும்ஆ கடமையாகும். (நூல் : அபூதாவூத்) ஐங்காலத் தொழுகையின் ஷர்த்துக்களுடன் விசேஷமான ஆறு ஷர்த்துக்கள் ஜும்ஆத் தொழுகைக்கு உள்ளன. 1. குறைந்த பட்சம் ஜும்ஆவின் முதல் ரக்அத்தாவது ஜமாஅத்துடன் சேர்ந்து நிறைவு செய்யப்பட வேண்டும்.2. ளுஹர்…
Read More »ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை:
ளுஹர், அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று பெயர். விதிமுறைகள்: 1. பயணத் தொலைவு 130 கிலோ மீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். 2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும். 3. கஸ்ரும்…
Read More »ஜனாஸா தொழுகை
ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு. 1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள், சந்தூக் பெட்டி ஆகிய யாவும் சுத்தமாக இருக்க வேண்டும். 2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்க வேண்டும். ஃபர்ளுகள்: 1. ஃபர்ளான ஜனாஸாத் தொழுகையைத் தொழுகிறேன் என்று நிய்யத் செய்வது. நான்கு தக்பீரை கிப்லாவை நோக்கி அல்லாஹ்விற்காக என்று மூன்று அம்சங்களையும் நிய்யத் செய்வது சுன்னத் ஆகும். 2. நின்று…
Read More »தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள்
முதலாவது மற்றும் இரண்டாவது ரக்அத்துகளில் பாத்திஹா சூராவிற்குப் பின் ஏதேனும் மூன்று ஆயத்துக்களை ஓதுவது இமாமுக்கும், தனியே தொழுபவருக்கும் சுன்னத்தாகும். இருப்பினும் தொழுகையில் நீளமான ஆயத்துகளை ஓதுவதை விட, சிறிய சூராவாயினும் அதை முழுமையாக ஓதுவதும் முதல் ரக்அத்தில் ஓதிய ஸூராவை விட இரண்டாவது ரக்அத்தில் சிறிய ஸூராவை ஓதுவதும், குர்ஆனின் வரிசைக்கேற்ப முதல் ரக்அத்தில் முன்னுள்ள சூராவையம் இரண்டாவது ரக்அத்தில் அதன் பின்னர் உள்ள சூராவையும் ஓதுவதும், முதலாவது…
Read More »தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும்:
1. நிய்யத்: இதற்கு உள்ளத்தால் நாடுதல் என்று பொருள். இது தொழுகையின் ஆரம்ப ஃபர்ளாகும்.இன்ன நேரத்தின் பர்ளான தொழுகையை தொழுகிறேன் என்பதிலுள்ள மூன்று அம்சங்களும் ஃபர்ளான தொழுகையில் இருக்க வேண்டிய அம்சங்கள். அதாவாக கிப்லாவை முன்னோக்கி இத்தனை ரக்அத்துகளை அல்லாஹ்விற்காக என்ற இந்த நான்கையும் நிய்யத் செய்வதும் உள்ளத்தில் நிய்யத் செய்வதை நாவால் மொழிவதும் சுன்னத்தாகும். 2. தக்பீர் தஹ்ரீமா:தொழுகையை நிய்யத் செய்து அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. 3. நின்று…
Read More »தொழுகையை முறிப்பவைகள்
தொழுகையில் இருமுதல், கனைத்தல், தும்முதல் போன்றவற்றிலிருந்து இரு எழுத்துகள் வாயிலிருந்து வெளிவந்தால் தொழுகை முறிந்து விடும். சதைப்பற்றுள்ள ஏதாவது ஒரு பொருளை விழுங்கினால் தொழுகை முறிந்து விடும். தொண்டையில் கபம் இறங்கிட அதைத் துப்பாமல் விழுங்கினாலும், வாயில் இரத்தம் வடிந்திருந்து அதைக் கழுவாத நிலையில் உமிழ் நீர் ஊறி அதை விழுங்கினாலும் தொழுகை முறிந்து விடும். தொழுது கொண்டிருக்கும் போது அதை முறித்துவிட நினைத்தால் உடனே தொழுகை…
Read More »அல்குஸ்லு(குளிப்பு)
'குளிப்பின் பர்ளை நிறைவேற்றுகிறேன்' என்ற நிய்யத்தைக் கொண்டு உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீரை ஓட்டுதலுக்குப் பெயர் குளிப்பு என்று பெயர்.இதன் ஃபர்ளுகள் 2. அவை 1. நிய்யத் 2. உடலின் புறப்பாகங்கள் அனைத்திலும் தண்ணீர் ஊற்றுதல். முழுக்கு குளியலின் போது நகங்களின் உட்பகுதிகள், உரோமங்களின் உள், வெளிப்பகுதிகள், மல ஜலம் கழிக்க அமரும்போது பெண்ணின் மறைவிடங்களில் வெளித் தெரியும் பகுதிகள் ஆகியவற்றை நன்கு கவனித்து கழுவுதல் ஃபர்ளாகும். 500 ராத்தல்…
Read More »ஜனாபத்
ஜனாபத் என்பதன் பொருள் 'தூய்மையின்மை' என்பதாகும். சிறு தொடக்கு உள்ளவர்கள் உளுச் செய்து தூய்மைபடுதத்திக் கொள்வது போன்று பெருந்தொடக்கு உள்ளவர்கள் குளித்து தூய்மைப் படுத்திக் கொள்ளவது கடமையாகும். புணருதல், பிரசவித்தல், உறக்கத்தில் ஸ்கலிதமாதல், மாதவிடாய் இரத்தம் வெளிவருதல், மரணித்தல் ஆக இந்த ஐந்து தூய்மையற்ற நிலைகளிலிருந்து குறித்து தூய்மைப்படுத்திக் கொள்வது ஃபர்ளாகும். இதேபோன்று ஆண் இன உறுப்பின் கத்னா செய்தபகுதியானது பெண் இன உறுப்பில் மறைந்துவிட்டால் விந்து வெளிவந்தாலும், வராவிட்டாலும் இருவரின்…
Read More »