கிரகணங்கள்
சந்திர கிரகணம் என்பது நிலவு பூமியின் பின்னால் கடந்து செல்லும் போது, பூமியானது சூரியனின் கதிர்களை நிலவின் மீது படுவதிலிருந்து மறைத்துவிடுவதால் ஏற்படுவது ஆகும். இது சூரியன், பூமி மற்றும் நிலவு ஆகியவை, மிகத்துல்லியமாகவோ அல்லது ஏறத்தாழவோ, ஒரே வரிசையில் வரும்போது மட்டுமே ஏற்படும்; இது ஏற்படுவதற்கு பூமி இடையில் அமைந்திருக்க வேண்டும். இதனால், சந்திர கிரகணத்தின் அன்று இரவில் எப்போதும் முழு நிலவாக இருக்கும். கிரகணத்தின் வகை மற்றும் நீளம், நிலவின் இடம் அதன் சுற்றுப்பாதைகளில் எங்கிருக்கிறது என்பதைச் சார்ந்து இருக்கும். உலகில் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து மட்டுமே பார்க்க முடியக்கூடிய சூரிய கிரகணம் போலல்லாமல், சந்திர கிரகணம் பூமியில் இரவு நேரமாய் இருக்கும் எந்தப் பகுதியில் இருந்தும் பார்க்க முடியலாம். சந்திர கிரகணம் சில மணி நேரங்கள் வரை இருக்கும். அதே சமயம் ஒட்டு மொத்த சூரிய கிரகணமும் குறிப்பிட்ட பகுதிகளில் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும்.
சூரியனுக்கும் பூமிக்கும் இடையே நிலவு செல்லும் போது, சூரிய கிரகணம் ஏற்படும். இது ஒரு அமாவாசை நாளன்று தான் ஏற்படும். இதனால் சூரியன் முழுவதும் மறைக்கப்பட்டால் முழு சூரிய கிரகணம் என்றும் அல்லது ஒரு பகுதி மறைக்கப்பட்டால் பகுதி; சூரிய கிரகணம் என்றும் அழைக்கப்படுகின்றது. புவியைப் பொருத்தவரை ஓர் ஆண்டில் இரண்டிலிருந்து ஐந்து வரையிலான சூரிய கிரகணங்கள் ஏற்படக்கூடும்; இதில் இரண்டு கிரகணங்கள் வரை முழு சூரிய கிரகணங்களாக அமையலாம் — சில ஆண்டுகள் முழு கிரகணம் ஒன்று கூட ஏற்படாமலும் போகலாம்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…