தொழுகையின் பர்ளுகளும், ஷர்த்துகளும்:
1. நிய்யத்: இதற்கு உள்ளத்தால் நாடுதல் என்று பொருள். இது தொழுகையின் ஆரம்ப ஃபர்ளாகும்.இன்ன நேரத்தின் பர்ளான தொழுகையை தொழுகிறேன் என்பதிலுள்ள மூன்று அம்சங்களும் ஃபர்ளான தொழுகையில் இருக்க வேண்டிய அம்சங்கள்.
அதாவாக கிப்லாவை முன்னோக்கி இத்தனை ரக்அத்துகளை அல்லாஹ்விற்காக என்ற இந்த நான்கையும் நிய்யத் செய்வதும் உள்ளத்தில் நிய்யத் செய்வதை நாவால் மொழிவதும் சுன்னத்தாகும்.
2. தக்பீர் தஹ்ரீமா:தொழுகையை நிய்யத் செய்து அல்லாஹு அக்பர் என்று கூறுவதற்கு இச்சொல் பயன்படுத்தப்படுகிறது.
3. நின்று தொழ சக்தியுள்ளோர் நின்று தொழுதல்
4. பாத்திஹா சூரா ஓதுதல்: ஜனாஸா தொழுகையைத் தவிர எல்லா தொழுகைகளிலும் வஜ்ஹத்து ஓதுவது ஸுன்னத்து ஆகும்.
وجّهتُ وجهي للّذي فطرالسّماوات والاْرْض حنيْفا مسلم وما انا منالْمشْركيْن. انّ صلاتيْ ونسكيْ ومحياي
ومماتي لله ربّ العالمين. لاشريك له وبذالك امرْت وانا من الْمسلمين.
ஸூரத்துல் பாத்திஹா ஓதுவது எல்லாத் தொழுகையிலும் தனியாகத் தொழுதாலும், இமாம் ஜமாஅத்துடன் தொழுதாலும் ஃபர்ளாகும். பிஸ்மில்லாஹ்வை சேர்த்து இந்த சூரத்தின் எழுத்துக்கள் 156 ஆகும்.அதன் ஷத்துகள் 14 ஆகும். இதில் ஏதாவது ஒரு எழுத்தையோ ஷத்தையோ விட்டு ஓதினால் ஃபாத்திஹா நிறைவேறாது.
ஃபாத்திஹா சூரா ஓதும் முன்பு 'அஊது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம்' என்று சப்தமின்றி எல்லா ரக்அத்திலும் ஓதுவது ஸுன்னத்தும் முதல் ரக்அத்தில் ஓதுவது ஸுன்னத் முஅக்கதாவும் ஆகும். முதல் ரக்அத்தில் அஊது ஓதாமல் விடுவது மக்ரூஹ் ஆகும்.
ஃபாத்திஹா ஸூராவை ஓதியபின் ஆமீன் என்று கூறுவது ஸுன்னத்தாகும்.
5. ருகூஉ செய்தல்: தொழுகையில் தக்பீர் கட்டி(கியாம்) நிலையில் ஃபாத்திஹாவும், சூராவும் ஓதிய பின்பு குனிந்து நிற்கும் செயலுக்கே ருகூவு என்று பெயர்.இதன் ஃபர்ளுகள் மூன்று ஆகும். 1. முழங்காலை உள்ளங்கையால் தொடும் அளவுக்கு குனிவது 2. ருகூவு செய்வதற்காகவே குனிவது 3. குனிந்தபின் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை அதில் தரிபடுவது.
இதன் சுன்னத்துகள்: 1. தக்பீர் தஹரீமா போன்று இரு கைகளையும் உயர்த்தி தக்பீர் சொல்லியவாறு ருகூவிற்கு வருதல் 2. சமமான பலகையைப் போன்று கழுத்தையும், முதுகையும் நேராக்கி குனிந்திருத்தல் 3. இரு முழங்கால்களையும் ஒரு ஜான் அளவு பிரித்து நேராக நாட்டி நிற்றல் 4. திரையின்றி திறந்து மற்றும் விரித்த வண்ணம் உள்ளங்கைகளினால் முழங்கால்களைப் பிடித்துக் கொள்ளல்.5. ஆண்கள் தங்களின் முழங்கைகளை விலாப்பகுதியை விட்டும் வயிறை தொடைப்பகுதியை விட்டும் விலக்கி வைத்தல், பெண்கள் இவைகளை சேர்த்து வைத்தல்.6.سبحان ربّي العظيم وبحمده என்று மூன்று முறை ஓதுவது.
. தனியாகத் தொழுபவர் கீழ்காணும் துஆவை ஓதிக் கொள்ளல்
'அல்லாஹும்ம லக ரகஃது வபிக ஆமன்து வலக அஸ்லம்து கஷஅ லக ஸம்யீ வபஸரீ வமுஃக்கீ வஅள்மீ வஅஸபீ வஷஅரீ வபஷரீ வமஸ்தகல்லத் கதமீ லில்லாஹி ரப்பில் ஆலமீன்.'
6. இஃதிதாலில் நிற்றல்: ருகூவிலிருந்து மீண்டும் நிலைக்குத் திரும்பி வருவதற்கு இஃதிதால் என்று பெயர்.இஃதிதாலுக்காகவே நிமிர்ந்து வருதல் மற்றும் அதில் தரிபடுதல் ஆகியவை இதன் பர்ளுகளாகும்.
ருகூவிலிருந்து எழும்போது இரு கைகளையும் தக்பீர் தஹ்ரீமா போன்று உயர்த்தி
'சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் ரப்பனா லகல் ஹம்து மில்அஸ் ஸமாவாதி வமில்அல் அர்ழி வமில்அ மாஷிஃத மின் ஷையின் பஃது' என்று சொல்வது ஸுன்னத்தாகும்.
குனூத்: இதற்குப் பணிதல், தொழுகையின் போது இறைஞ்சுதல் என்று பொருள். ஸுபுஹுத் தொழுகையின் இரண்டாவது ரக்அத்தின் இஃதிதாலிலும் மற்ற ரமலான் மாதத்தின் பிற்பகுதி 15 நாட்களில் வித்ரு தொழுகையின் கடைசி ரக்அத்தின் இஃதிதாலிலும் வழமையாக ஓதும் இஃதிதாலின் திக்ருகளை ஓதி முடித்தபின் குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும். இதுபோன்று உணவுப் பஞ்சம், வறட்சி, நோய், சன்மார்க்க விரோதிகளினால் அச்சம் உண்டானாலும் மற்றும் துண்பங்கள் சோதனைகள் போன்றவை ஏறட்பட்டாலும் ஃபர்ளுத் தொழுகையின் கடைசி ரக்அத்தில குனூத் ஓதுவது ஸுன்னத்தாகும்.
குனூத் துஆ:
اللهمّ اهدني فيمن هدشت . وعافيت . وتولّني فيمن تولّيت. وباركلي فيما اعطيت. وفني شرّ ما قضيت
فانّك تقضي ولا يقضاي عليك. فانّه لايذلّ من وّاليت. ولايعزّ من عاديت. تباركت ربّنا وتعاايت. فلكاا
لحمد علي ما قضيت. اشتغفرك واتوب اليك وصلّي الله علي شيّدنا محمّد وعلي آله وصحبه وسلّم.
இமாம் சப்தமிட்டு குனூத்தை பன்மை வசனத்தோடு ஓதுவதும், இமாமின் குனூத் துஆ, இறுதி ஸலவாத் ஆகியவைகளுக்கு மஃமூம்கள் ஆமீன் கூறுவதும் 'ஃப இன்னக தக்ழீ' முதல் 'வஅதூபு இலைய்க' வரை இமாமுடன் சேர்ந்து சப்தமின்றி மஃமூம்கள் இதே வாக்கியங்களை ஓதுவதும் ஸுன்னத்துகளாகும். துன்பங்கள்,கஷ்டங்கள் ஏற்பட்டால் இமாம் குனூத் ஓதிவிட்டு அதற்கென்று தனியாக துஆ செய்வது ஸுன்னத்தாகும்.குனூத் துஆவை ஒருமை வசனத்தில் இமாம் ஓதுவது மக்ரூஹ் ஆகும்.
7. இரு ஸுஜூது செய்தல்: இதற்கு தலையை தரையில் வைத்துப் பணிதல் என்று பொருள். இதற்கு என்று விதிமுறைகள் 7 உள்ளன. அவை:
1.ஸுஜூது செய்வதற்காகவே தரைக்கு செல்ல வேண்டும்.
2.தரைக்கு வந்தபிறகு அங்க அசைவுகள் அமைதியாகும் வரை தரிபட வேண்டும்.
3. நெற்றி, இரு உள்ளங்கைகள், இரு முட்டுக் கால்கள், இரு உள்ளங்கால்களின் விரல்கள் ஆகிய ஏழு உறுப்புகளில் ஒவ்வொன்றினுடைய சில பகுதிகளையாவது தரையில் பதித்தல் வேண்டும். இவைகளோடு மூக்கையும் சேர்த்து வைப்பது ஸுன்னத்தாகும்.
4,5 திரையின்றி திறந்த நிலையில் நெற்றியை தரையில் அழுத்தமாக வைப்பது ஃபர்ளாகும்.
6. தலை, தோள் பகுதியை தாழ்த்தியும் இடுப்புப் பகுதிகளை உயர்த்தியும் ஸுஜூது செய்ய வேண்டும்.
7. ஸுஜூதில் ஏழு உறுப்புகளையும் ஒன்றாக தரையில் வைத்திருக்க வேண்டும்.
ஸுன்னத்துகள்: இஃதிதாலிலிருந்து தக்பீர் கூறியவாறு கீழே வந்து முதலில் தன் இரு முட்டு கால்களையும் ஒரு ஜாண் அளவு பிரித்து நிலத்தில் வைப்பதும், இரண்டாவதாக இரு கைவிரல்களையும் கிப்லாவை நோக்கி தோள் புயத்திற்கு நேராக நிலத்தில் வைப்பதும்,
மூன்றாவதாக மூக்கையும், நெற்றியையும் வைப்பதும், நான்;காவதாக கால் விரல்களை கிப்லாவை நோக்கி நட்டியும் ஒரு ஜாண் அளவு இரு கால்களையும் பிரித்து வைப்பதும் ஸுன்னத்தாகும்.ஸுஜூதில் கண்களை திறந்திருப்பதும், மூன்று முறை
سبحان ربيّ الاعلي وبحمده
என்று ஓதுவதும் ஆண்கள் தங்கள் முழங்கைகளை விலாப் பகுதியை விட்டும் வயிற்றைத் தொடைப் பகுதிகளை விட்டும் விலக்கி வைத்து ஸுஜூது செய்வதும், பெண்கள் இவைகளை சேர்த்து வைத்து ஸுஜூது செய்வதும், இருபாலரும் முழங்கைகளை சேர்த்து வைத்து ஸுஜூது செய்வதும் தனித்தனி ஸுன்னத்துகளாகும்.
8. இரு ஸுஜூதுக்கிடையில் அமர்தல்:'ஜுலூஸ்' என்பதற்கு இரு ஸுஜூதுகளுக்கிடையில் சற்று அமர்வது என்று பெயர். முதல் ஸுஜூதிலிருந்து சிறு இருப்புக்காக எழுநு;து வருதல், சிறு இருப்பில் அமர்;ந்த பின் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை அதில் தரிபடுதல் இவ்விரண்டும் இதில் ஃபர்ளாகும்.
இவைகளின் ஓதப்படும் திக்ருகளின் கால அளவைக் கடந்து, அதற்கு மேலும் ஃபாத்திஹா சூரா ஓதும் அளவுக்கு இதில் காலம் தாழ்த்தினால் தொழுகை முறிந்து விடும். எல்லாத் தொழுகைகளிலும் முதலாவது மூன்றாவது ரக்அத்துகளின் ஸுஜூதுகளை முடித்து நிலைக்கு எழுந்திருக்கும் போது சற்று அமர்ந்த பின்பு உள்ளங்கைகளைத் தரையில் ஊன்றி நிலைக்கு வருவது ஸுன்னத்தாகும்.
9. இந்த நான்கு ஃபர்ளுகளிலும் அங்க அசைவுகள் அமைதியாகும் வரை தரிபடுதல்
10. கடைசி அத்தஹிய்யாத்திற்காக அமர்தல்:மண்டியிட்டு வலது கால் விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் வலது காலைத் தரையில் ஊன்றி வைக்க வேண்டும். இடது காலின் புறப்பகுதியைத் தரையோடு சேர்த்து வைத்து இடது கரண்டைக் கால் மீது பித்தட்டை வைத்து அமர வேண்டும். இவ்வாறு அமர்வது நடு இருப்பில் (முதல் அத்தஹிய்யாத்தில்) சுன்னத்தாகும். இரண்டாம்(கடைசி) அத்தஹிய்யாத்தில் வலது கால்விரல்கள் கிப்லாவை முன்னோக்கி இருக்கும் வண்ணம் அதைத் தரையில் பதித்து வைக்க வேண்'டும். இடது பாதத்தை வலது காலின் கீழே வெளிப்படுத்தி வைத்துக் கொண்டு பித்தட்டைத் தரையின் மீது வைத்து அமர வேண்டும்.
இரண்டு அத்தஹிய்யாத்திலும் இரு கரங்களையம் முழங்கால் முட்டிற்கு நேராக வைத்து வலது கையின் ஆள் காட்டி விரலைத் தவிர்த்து ஏனைய விரல்களை மூடிக் கொள்ள வேண்டும். அதன் பெருவிரலின் நுனியை ஆள்காட்டி விரலின் அடியில் வைத்துக் கொள்ள வேண்டும். பின்பு அத்தஹிய்யாத் ஓதி 'இல்லல்லாஹ்'என்று கூறும்போது சான்று பகர்வதற்கு அறிகுறியாக கலிமா விரலை மட்டும் நீட்டிக் கொள்ள வேண்டும். தொழும்போது அவரவர் சுஜூது செய்யும் இடத்தில் பார்வையை பதிப்பது சுன்னத்தாகும். ஆனால் அத்தஹிய்யாத்தில் கலிமா விரலை உயர்த்திய பின்பு ஸலாம் கொடுக்க திரும்பும்வரை பார்வையை கலிமா விரலின் மீது படிய வைக்க வேண்டும். இது சுன்னத்தாகும்.
அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின்பு ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியிருப்பின் ஸஜ்தா ஸஹ்வு செய்யும் வரை முதல் அத்தஹிய்யாத்தில் இருப்பதைப் போன்று இருப்பது சுன்னத்தாகும்.
தொழுகையில் கடைசி அத்தஹிய்யாத் தவிர மற்ற எல்லா இருப்புகளும் நடு இருப்பைப் போன்று இருப்பது சுன்னத்தாகும்.
11. கடைசி அத்தஹிய்யாத் ஓதுதல்.
12. இதில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மீது ஸலவாத் ஓதுதல்
التحيّات المباركات الصّلوات الطيبات لله اسّلام عليك ايّها انّبي ورحمة الله وبركاته السّلام علينا وعلي عبادالله الصا لحين اشهد ان لاّاله الاّالله و اشسهد انّ محمّد رّسول الله اللهمّ صلّ علي محمّد وعلي آل ابراهيم وبارك علي محمّد وعلي آل محمّد كما باركت علي ابراهيم وعلي آل ابراهيم في العالمين انّك
حميد مّجيد .
இதில் அடிக்கோடு இட்டது முதல் அத்தஹிய்யாத்தில் ஓதுவது சுன்னத்ம், கடைசி அத்தஹிய்யாத்தில் ஓதுவது ஃபர்ளுமாகும். பாக்கியுள்ளவைகளை கடைசி அத்தஹிய்யாத்தில் ஓதுவது சுன்னத்தாகும்.
13. முதல் ஸலாம் கூறுதல்: அஸ்ஸலாமு அலைக்கும் என முதல் ஸலாம் கூறி தொழுகையை முடீப்பது ஃபர்ளு ஆகும். இடது பாகம் திரும்பி இரண்டாவது ஸலாம் கூறுவதும் ஸலாமுடன் 'வரஹ்மத்துல்லாஹ்' என சேர்த்துச் சொல்வதும் சுன்னத்துகளாகும்.
ஜனாஸா தொழுகையில் மட்டும் வபரகாத்துஹு என்பதைச் சேர்த்துக் கூறுவது சுன்னத்தாகும்.
14. இவற்றை வரிசைக் கிரமமாக செய்தல்.
ஆக மொத்தம் பதினான்கு தொழுகையின் பர்ளுகளாகம். இதை சற்று விரிவுபடுத்தி பதினேழு அல்லது பத்தொன்பது ஃபர்ளுகளென்றும் சொல்லலாம்.
ஷர்த்துகள்:
1. சிறு தொடக்கை விட்டும் நீங்கியிருத்தல்.
2. பெருந்தொடக்கை விட்டு சுத்தமாக இருத்தல்.
3. அவ்ரத்தை மறைத்தல்
4. கிப்லாவை முன்னோக்குதல்.
5. தொழுகையை முறிக்கும் கருமங்களை விட்டு விலகி இருத்தல்.
6.தொழுகையின் நேரம் வந்து விட்டதெனத் தெரிந்து தொழுதல்.
7. ஃபர்ளான தொழுகையை ஃபர்ளு என்று விளங்கித் தொழுதல்
8. தொழுகையில் பதினான்கு ஃபர்ளுகளையும் விளங்கித் தொழுதல்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…