தாய்க்கு மரியாதை கொடுத்தல்
முன்னொரு காலத்தில் ஜுரைஜ் என்றnhரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிக நல்லவர். பொய் பேச மாட்டார். புறம் பேச மாட்டார். மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்க மாட்டார். அவருக்கென மாடம் உண்டு. அதில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று தனித்திருந்து வணக்கதிலேயே மூழ்கியிருப்பார்.
ஒருநாள் இவர் சுன்னத்தான தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொது அவருடைய தாயார் மாடத்திற்கு வெளியில் நின்று கொண்டு ஜுரைஜ் என்று கூப்பிட்டார்.
தாய் கூப்பிடுவதை அறிந்த அவர், தாயின் அழைப்புக்கு பதில் சொல்வதா? வணக்கத்திலேயே இருப்பதா? என யோசித்து வணக்கதில் இருந்து அதை பூர்த்தியாக்கிய பிறகு தாயை பார்ப்பது நல்லது என்று முடிவெடுத்துவிட்டு தாய்க்கு பதில் சொல்லாமால் இருந்து விட்டார்.
மகன் தன்னுடன் பேசாததைக் கண்டு தாய் மனம் வருந்தி திரும்பி போய்விட்டார். இவ்வாறு தொடர்ந்து மூன்று நாட்கள் நடந்தன.
எனவே மூன்று நாளும் அழைத்து மகன் பதில் சொல்லவில்லையே என்று ஆத்திரப்பட்ட தாய் ' யா அல்லாஹ் ! (என் மகன் என் முகத்தைப் பார்க்க அழைத்தும் வரமாலிருந்து விட்டான் எனவே) அவன் விபச்சாரியின் முகத்தைக் காணும்வரை அவனை நீ மரணிக்கச் செய்து விடாதே! என்று மகனுக்கு எதிராக பிரார்த்தனை செய்துவிட்டுச் சென்று விட்டார்.
சிறிது காலம் சென்றது. மக்கள் ஜுரைஜ் பற்றியும் அவர் ஆர்வமாக வணக்க வழிபாட்டில் ஈடுபடுவது பற்றியும் தமக்கிடையே உயர்வாகப் பேசிக் கொண்டிருந்தனர். அந்த ஊரில் தன் அழகைப் பற்றி பெருமை பேசக் கூடிய கெட்ட நடத்தை உடைய ஒரு பெண் இருந்தாள். மக்கள் ஜுரைஜைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது நான் நினைத்தால் என் அழகின் மூலம் அவரை மயக்கி அவரை குழப்பத்தில் ஆழ்த்தி காட்டுவேன் என்று சவால் விட்டாள். இதன்படி ஜுரைஜை மயக்கிட எண்ணி அவர் முன் அவள் நின்று முயன்று பார்த்தாள். ஜுரைஜ் அவர்கள் அவள் பக்கம் திரும்பிப்பார்க்காமல் அல்லாஹ்வை தியானிப்பதிலேயே காலத்தை கழித்தனர்.
இதனால் தோல்வியுற்ற அந்தப் பெண் ஆத்திரப்பட்டு இவரைப் பழிவாங்க திட்டம் தீட்டினாள். ஜுரைஜின் இடத்துப் பக்கம் வழமையாக ஒரு இடையன் ஆடு மேய்க்க வருவதுண்டு. இந்தப் பெண் அவனுடன் தவறான நடத்தையில் ஈடுபட்டாள்.சிறிது காலத்திற்கு பின் அவளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. மக்களிடம் இந்தக் குழந்தைக்கு ஜுரைஜ்தான் தந்தை என்று பொய் கூறினாள்.
ஊர்மக்கள் ஜுரைஜ் வணக்கம் செய்யும் மாடத்திற்குப் போய் அதை அடித்து உடைத்து, அவரையும் அடிக்கத் தொடங்கினர். அதற்கு ஜுரைஜ் ஏன் இப்படி செய்கிறீர்கள்? என்று கேட்டார்.நீர் இந்தப் பெண்ணுடன் தவறான நடத்தையில் ஈடுபட்டு ஒரு குழந்தையையும் பெற்றுள்ளீர்கள். நீர் செய்தது சரிதானா? அதனால்தான் நாங்கள் இவ்வாறு செய்தோம்.
ஜுரைஜ் எங்கே அந்தக் குழந்தை என்று கேட்டார். குழந்தை கொண்டு வரப்பட்டது. அல்லாஹ்விடம் ஜுரைஜ் துஆ கேட்க, அக்குழந்தை இன்ன ஆடு மேய்ப்பாளன்தான் என் தந்தை' என்று கூறியது.
இதைக் கேட்;ட மக்கள் தாங்கள் செய்த தவற்றை எண்ணி வருந்தி ஜுரைஜ் அவர்களிடம் மன்னிப்புக் கேட்டு அவருக்கு உடைத்த மாடத்தைக் கட்டியும் கொடுத்தனர்.
இந்த சம்பவம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக பல்வேறு கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
படிப்பினை:
தம்பி, தங்கைகளே!
1. நாம் செய்யும் சுன்னத்தான வணக்கங்களை விட பெற்றோர்களின் சொல்படி நடப்பது அவசியம்.
2.தாய் சொல்படி நடப்பதால் சுவர்க்கமும் தாய் சொல்லை மறுப்பதால் கேவலமும், நரகமும் கிடைக்கும் என்பதை இச்சம்பவம் உணர்த்துகிறது அல்லவா?
தாயின் காலடியில் சுவர்க்கம் இருக்கிறது என்ற நபி மொழிக்கேற்ப நாம் தாய், தந்தை சொல்லைக் கேட்டு நடந்து இம்மை, மறுமையில் நற்பேறு பெறுவோமாக!
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…