நோயின்றி நலமாக வாழ கடைப்பிடிக்க வேண்டியவை
அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்திருக்க வேண்டும்.
தினமும் குளிர்ந்த நீர் அல்லது வெதுவெதுப்பான நீரில் குளிக்க வேண்டும்.
காலையில் எழுந்தவுடன் குறைந்தபட்சம் பத்து நிமிடமாவது தியானம் செய்ய வேண்டும்.
நல்ல காற்றை சுவாசிக் வேண்டும். வாயால் சுவாசிக்க கூடாது. மூக்கால் சுவாசிக்க வேண்டும்.
சாப்பிடும் போது பேசக் கூடாது. உணவை நன்றாக மென்று நிதானமாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
தினசரி உணவில் காய்கறிகள், கீரை, பழங்கள், நெய், மோர் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வேளை தவறி உணவு சாப்பிடக் கூடாது. உப்பு, சர்க்கரை, காரம் மூன்றும் உணவில் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
அமைதியாக இருக்க வேண்டும். கோபப் படக் கூடாது. கோபப்பட்டால் ரத்த அழுத்தம், நரம்புத் தளர்ச்சி போன்றவை ஏற்படும்.
உடலுக்குப் புத்துணர்ச்சியும், உள்ளத்துக்கு மகிழ்ச்சியும் கிடைக்க மாலையில் நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
உடலை கட்டுக் கோப்பாகவும், இளமையாகவும் வைத்திருக்க உடற்பயிற்சிகளை செய்ய வேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக உடலுக்கு கேடு விளைவிக்கும், புகையிலை சார்;ந்த பொருள்களைத் (பீடி, சிகெரட், மூக்குப் பொடி, புகையிலை சேர்ந்த வெற்றிலை,பாக்கு, பான் பராக்கு)தவிர்க்க வேண்டும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…