Home Uncategorized ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி

ஹாபிழ் அமீர் அப்பா பள்ளி

      காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் மகான் பெரிய சம்சுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மாணவரான மகான் ஹாபிழ் அமீர் அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரால் கட்டப்பட்டிருக்கும் இப் பள்ளி பெரிய நெசவு தெருவின் தென் கோடியில் அமைந்துள்ளது.  இம் மகான் இங்கேயே அடங்கப்பட்டுள்ளார்கள். அவர்களுக்கு பிரதி வருடம் துல் கஃதா மாதம் பிறை 14 அன்று சிறப்பாக கந்தூரி கொண்டாடப்படுகிறது.

      இப் பள்ளி வளாகத்தில்தான் மகான் துல்க அஹ்மது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கப்பட்டுள்ளார்கள்.
1. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅ அவர்கள் பேரில் மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

2. ரபீயுல் அவ்வல்; பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல்.

3. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

4. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் பெயரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.

5. ரஜப் மாதம் ஹழரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதுதல்.

6. ஷஃபான் பிறை 15 அன்று 3 யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ ஓதுதல்.

7. துல்கயிதா பிறை 1 முதல் 14 வரை ஹழரத் ஹாபிழ் அமீர் வலி ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் ,இரவு  மார்க்கப்பேருரை , பிறை 14  அன்று காலை நேர்ச்சை சோறு விநியோகம்.

8. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக்குர்ஆன் ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல்.   பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.

9. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை  நிகழ்த்தப்பெறும். நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள்- காதிரிய்யா திக்ரு செய்தல் ..முஸ்லிம்களுக்கான மையவாடி உள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…