ஹிஜ்ரி புத்தாண்டு 1432
ஹிஜிரி ஆண்டு
அரபுகள் பிரபலமான மறக்க முடியாத சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு ஆண்டுகளுக்கு பெயராகச் சொல்வார்கள். அப்ரஹா என்ற மன்னன் கஃபதுல்லாஹ்வை அழிக்க யானைப் படையை கொண்டு வந்தான். அந்த யானைப் படையை அல்லாஹ் பறவைகளைக் கொண்டு அழித்தான். இந்த சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு யானை ஆண்டு அமைத்துக் கொண்டார்கள்.
உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் தனது ஆட்சி காலத்தில் முஸ்லிம்கள் தனியாக ஆண்டுகள் கணக்கிட வேண்டும் என்ற திட்டத்தை கொண்டு வந்தார்கள். அதற்கான ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார்கள். ஆண்டுகள் கணக்கிடும் முறையை எப்பொழுதிலிருந்து துவக்கலாம் என்று ஆலோசித்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முதல் வஹி வந்த ஆண்டிலிருந்து துவக்கலாம். மிஃராஜ் சென்ற ஆண்டிலிருந்து துவக்கலாம். இப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறப்பு முதல் இறப்பு வரையிலான வரலாற் நிகழ்ச்சிகளை குறிப்பிட்டு அந்த ஆண்டிலிருந்து துவக்கலாம் என்று பல்வேறு கருத்துக்களை ஸஹாபாப் பெருமக்கள் ஆலோசனைகளாக வழங்கினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவை துறந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற ஆண்டிலிருந்து துவங்கலாம் என அலி ரழியல்லாஹு தஆலா அன்ஹு ஆலோசனை வழங்கினார்கள். அனைத்தையும் பரிசீலித்த கலீபா உமர் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு தொடங்க அதற்கு ஹிஜ்ரி என பெயர் வந்தது. இவ்வாறு கணக்கிட்டபோது ஹிஜ்ரி முதலாம் ஆண்டு முஹர்ரம் முதல் நாள் வெள்ளி கிழமையாக அமைந்திருந்தது.
சூரியனின் மறைவின் போது இஸ்லாமிய நாள் துவங்குகிறது. ஹிஜிரி ஆண்டு 12 சந்திர மாதங்கள் கொண்டது. சந்திர மாதம் என்பது, சந்திரனானது பூமியை ஒரு முறை சுற்றி வர எடுத்துக் கொள்ளும் கால இடைவெளியாகும். சந்திர மாதம் ஒவ்வொரு மாதமும் ஒரு அமாவாசையில் தொடங்கி அடுத்த அமாவாசைக்கு முன் முடிவடைகிறது இத்தகைய ஒவ்வொரு ஹிஜிரி ஆண்டும் சூரிய ஆண்டைவிட 11 நாட்கள் (லீப் வருடத்தில் 12 நாட்கள்) தள்ளிப்போவதும் ஆகும். சூரிய ஆண்டை ஏறத்தாழ 33 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருங்கிணையும். சூரிய நாட்காட்டியில் குறிப்பிட்ட மாதம் குறிப்பிட்ட (குளிர், கோடை காலம்) காலநிலையை கொண்டிருக்கும். ஆனால் சந்திர நாட்காட்டியில் குறிப்பிட்ட நாள் குறிப்பிட்ட காலநிலையை கொண்டிருக்காது. ஓர் சந்திர ஆண்டில் 354.37 நாட்கள் உள்ளன.
மாதங்கள் பெயர்கள்
1. முஹர்ரம் محرّم
2. சஃபார் صفر
3. ரபியுல் அவ்வல் ربيع الأول
4. ரபியுல் ஆகிர் ربيع الآخر أو ربيع الثاني
5. ஜமாஅத்துல் அவ்வல் جمادى الاول
6. ஜமாஅத்துல் ஆகிர் جمادى الآخر أو جمادى الثاني
7. ரஜப் رجب
8. ஷாபான் شعبان
9. ரமழான் رمضان
10. ஷவ்வல் شوّال
11. துல் கஃதா ذو القعدة
12. துல் ஹஜ் ذو الحجة
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…