இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு.
அருமை நாயகத்தின் பாட்டனாரான அப்துல் முத்தலிப் அவர்களின் வழியில் எட்டாவது தலைமுறையில் தோன்றிய இத்ரீஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் அருந்தவப் புதல்வரே இமாம் ஷாபிஈ ரலியல்லாஹு அன்ஹு அவர்கள். இவர்கள் ஹிஜ்ரீ 150 ம் ஆண்டு ஷஃபான் பிறை இரண்டாம் நாள் பாலஸ்தீனில் உள்ள காஸா ஊரில் பிறந்தார்கள். இமாம் அவர்களின் இரண்டாவது வயதிலேயே தந்தையார் காலமாகி விட்டதால் தாயார் பாத்திமா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், குழந்தையுடன் தங்கள் முன்னோர்களின் பிறப்பிடமாகிய மக்கமா நகர் வந்தடைந்தார்கள்.
எட்டு வயதிற்குள் குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து விட்ட இமாம் அவர்கள் மக்காவிலுள்ள முஸ்லிம் பின் காலித் ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரியாரிடம் கல்வி பயின்று தேறினார்கள். இப்பெரியாரிடமே (ஃபத்வா) தீர்ப்பு வழங்கும் அனுமதியையும் பெற்றார்கள். பின்பு மதீனா சென்று இமாம் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஹதீது கலையினைப் பயின்றார்கள். ஏறத்தாழ எண்பது ஆசிரியப் பெரியார்களிடம் கல்வி பயின்றுள்ளதாக வரலாற்றில் காண முடிகிறது. இமாம் அவர்கள் மருத்துவத் துறையிலும், வானியல் துறையிலும் வல்லுனராக திகழ்ந்திருக்கிறார்கள். சிறந்த கவிஞராகவும் இருந்த இமாம் அவர்கள் ஒருநாள் கூபாவின் சுவரில் சாய்ந்திருந்த போது 'கவி புனைவதை விட்டொழித்து பிக்ஹு கலையில் கவனம் செலுத்தும்!' என்ற அசரீரியைச் செவியுற்று பிக்ஹு கலையில் கவனம் செலுத்தி கட்டமாமேதையாகவும், மாபெரும் இமாமாகவும் மாறினார்கள். 'குறைஷி குலத்து அறிஞர் ஒருவர் பாருலகப் பகுதிகளை தமது கல்வியினால் நிரம்பச் செய்வார்'.(திர்மிதி, பைஹகீ) என்ற பெருமானாரின் கூற்று ஷாஃபி இமாமைப் பற்றிய முன்னறிவிப்பே ஆகும்.
ஹிஜ்ரி 204 ரஜப் பிறை 30 வெள்ளிக் கிழமை இவ்வுலகை நீத்து கெய்ரோவில் கராபத்துஸ் ஸுக்ரா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள். ரலியல்லாஹு அன்ஹு.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…