ஜனாபத்
ஜனாபத் என்பதன் பொருள் 'தூய்மையின்மை' என்பதாகும். சிறு தொடக்கு உள்ளவர்கள் உளுச் செய்து தூய்மைபடுதத்திக் கொள்வது போன்று பெருந்தொடக்கு உள்ளவர்கள் குளித்து தூய்மைப் படுத்திக் கொள்ளவது கடமையாகும்.
புணருதல், பிரசவித்தல், உறக்கத்தில் ஸ்கலிதமாதல், மாதவிடாய் இரத்தம் வெளிவருதல், மரணித்தல் ஆக இந்த ஐந்து தூய்மையற்ற நிலைகளிலிருந்து குறித்து தூய்மைப்படுத்திக் கொள்வது ஃபர்ளாகும்.
இதேபோன்று ஆண் இன உறுப்பின் கத்னா செய்தபகுதியானது பெண் இன உறுப்பில் மறைந்துவிட்டால் விந்து வெளிவந்தாலும், வராவிட்டாலும் இருவரின் மீதும் குளிப்பது கடமையாகும்.
ஹைளு:
குறித்த காலங்களில் பெண்களின் கருப்பையின் ஓரப்பகுதியிலிருந்து வெளிவரும் இயற்கை உதிரப் போக்கிற்கு ஹைளு(மாதவிடாய்) என்று சொல்லப்படும். 9 வயதில் தொடங்கும் மாதவிடாய் 55 வயதை அடையும்போது நின்று விடும். சிலருக்கு 60 வயது வரை நீடிப்பதுமுண்டு.
ஹைளு ஏற்படும் குறைந்தபட்சக் காலஅளவு 24 மணி நேரங்கள். அதன் அதிகபட்ச காலஅளவு 15 நாட்கள். மிகுந்த கால அளவு 6 அல்லது 7 நாட்கள். இந்த 24 மணி நேரத்தை விடக் குறைந்த அளவோ 15 நாட்களை விட விரிந்த அளவோ உதிரப் போக்கு ஏற்படின், இது ஹைளாகக் கணிக்கப்பட மாட்டாது. அவை வியாதி இரத்தம் அல்லது இஸ்திஹாளா (உதிரப் பெரும்போக்கு) எனக் கருதப்படும்.
ஒருமாதம் வெளிப்பட்ட ஹைளுக்கும் மறுமாதம் வெளிப்டும் ஹைளுக்கும் இடையே (சுத்தமான) இடைவெளி 15 நாட்கள் அவசியம் இருக்க வேண்டும். அவ்வாறு 15 நாட்கள் இடைவெளிக்குப் பிறகு வரும் இரத்தமே ஹைளு (மாதவிடாய்) ஆகும். அவ்வாறின்றி ஏற்படும் இரத்தப் போக்கு இஸ்திஹாளா(உதிரப் பெரும்போக்கு) எனக் கருதப்படும்.
சிறிய, பெருந்துடக்குள்ளவர்கள் செய்யக் கூடாத செயல்கள்:
தொழுதல், தவாபு செய்தல், குர்ஆனைத் தொடல், ஸஜ்தாவுடைய ஆயத்தை ஓதியதற்காக ஸுஜூது செய்தல், குர்ஆன் ஷரீபின் ஆயத்துகள் அல்லது பலகைகளைத் தொடுதல் ஆகியவை ஹராமாகும்.
பெருந்துடக்குள்ளவர்கள் பள்ளிவாசலில் தங்கியிருப்பதும், குர்ஆன் ஆயத்துக்களின் சில வாக்கியங்களை ஓதுவதும் ஹராமாகும்.
ஹைளு, நிபாஸ்(பிரவசத் தொடக்கு) உள்ளவர்கள் பள்ளியில் உள் செல்வதும், அங்கு தங்கியிருப்பதும், குர்ஆன்ஷரீபை தொடுவதும், அதை ஓதுவதும் நோன்பு நோற்பதும், தங்கள் கணவரோடு மருவுவதும் ஹராமாகும். இச்சமயங்களில் விடுபட்ட தொழுகைகளை களாச் செய்ய வேண்டியதில்லை. ஆனால் ரமளான் மாத நோன்புகளை மட்டும் களாச் செய்வது ஃபர்ளாகும்.
நிஃபாஸ்:
பேறு காலமானவுடன் அல்லது குறைந்தமாத கட்டிகள் விழுந்தவுடன் ஏற்படும் உதிரப்போக்கிற்கு நிஃபாஸ் என்று பெயர். இந்த இரத்தம் வெளிவரும் குறைந்த கால அளவு ஒரு நொடிப்பொழுது ஆகும். நிறைந்த காலஅளவு அறுபது நாட்கள். மிகுந்த கால அளவு நாற்பது நாட்கள் ஆகும். ஹைளுடைய சட்டங்கள் நிஃபாஸுக்கும் பொருந்தும்.
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber டாரிஃப் பிளான்கள் அறிவிப்பு
கயல்பட்டினத்தில் Airtel Xstream Fiber Internet சேவை துவங்கியதை அடுத்து, தற்போது நிறுவனம் த…