ஜீவ காருண்யம் (விலங்குகளிடம் கருணையாக நடத்தல்)
1. ஒரு பெண்ணிடம் பூனை ஒன்று இருந்தது. அந்தப் பெண் அந்தப் பூனையைக் கட்டிப் போட்டாள். ஆனால் அதற்கு உரிய நேரத்தில் உணவு, தண்ணீர் கொடுப்பதில்லை.
பூனை தானாக உணவைத் தேடி உண்பதற்காக அதை அவிழ்த்து விடவும் இல்லை. கட்டப்பட்ட பூனை பசியாலும், தாகத்தாலும் வாடியது. இறுதியில் செத்தும் போனது.
இவ்வாறு அப்பூனையைக் கட்டிப் போட்டு வேதனை செய்த அப்பெண் நரகம் புகுந்தாள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். இந்த நபிமொழி புகாரி, முஸ்லிம், இப்னு மாஜா, அஹ்மத போன்ற பல கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது.
2. அதேபோல் மற்றொரு சம்பவம் அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலம் புகாரி, முஸ்லிம் கிரந்தங்களில் பதியப்பட்டுள்ளது. அதாவது,
முன்னொரு காலத்தில் ஒரு மனிதர் பாலைவனத்தில் பயணம் மேற்கொண்டார். வழியில் அவருக்குத் தண்ணீர் தாகம் ஏற்பட்டது. சுற்றிப் பார்த்ததில் கிணறு ஒன்று தென்பட்டது. அதில் இறங்கி தண்ணீர் அருந்தி விட்டு மேலே வந்தார். அப்போது கிணற்றின் அருகில் நாய் ஒன்று நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு கிணற்றை சுற்றி சுற்றி வந்தது. இதைக் கண்ட அந்த மனிதருக்கு இரக்கம் ஏற்பட்டது. எனக்கு எப்படித் தாகம் ஏற்பட்டதோ, அதேபோல்தானே இதற்கும் தாகம் ஏற்பட்டிருக்கிறது என்று யோசித்ததர். நாய்க்குத் தண்ணீர் புகட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். உடனே அவர் அணிந்திருந்த அவரது காலுறை ஒன்றைக் கழட்டினார். கிணற்றுக்குள் இறங்கினார். அந்தக் காலுறையில் நீரை நிரப்பி எடுத்தார். அதைத் தன் வாயில் கவ்விக் கொண்டு கிணற்றில் இருந்து மேலே ஏறினார். அந்த நாய்க்குத் தண்ணீரைக் கொடுத்தார். அதுவும்அதைக் குடித்துக் கொண்டு தன் தாகத்தை தீர்த்துக் கொண்டது. அல்லாஹ் அவரது செயலை அங்கீகரித்து அவர் மீது அருள் புரிந்து, அவர் பாவங்களையும் மன்னித்துவிட்டான். அந்த மனிதன் சுவர்கள்ம் நுழைவார் என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாயகத்தின் தோழர்கள் 'அல்லாஹ்வின் தூதரே! விலங்குகளுக்கு நல்லது செய்தாலும் நமக்கு நன்மை கிடைக்குமா? என்று கேட்டனர்.
அதற்கு நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஆம்! உயிருள்ள அனைத்துக்கும் நன்மை செய்ய வேண்டும். அதற்கும் நன்மை கிடைக்கும்' என்றார்கள்.
படிப்பினை:
தம்பி, தங்கைகளே!
மனிதர்களிடம் மட்டும் அன்பு பாராட்டி கருணையுடன் இருப்பது போதாது. விலங்குள், பறவைகள் போன்றவைகளுடனும் அன்பு பாராட்டி கருணையுடன் நடந்து கொள்ள வேண்டும். பூனையை கொடுமை செய்ததால் நரகத்தையும், நாய்க்கு தண்ணீர் கொடுத்ததால் சுவர்;க்கத்தையும் பெற்றிருக்கிறார்கள் பாருங்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…