Home வரலாறு வலிமார்கள் கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு
வலிமார்கள் - September 14, 2008

கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு

 கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 582 ல் ஜித்தாவிலிருந்து கப்பல் மார்க்கமாக ஏர்வாடி செய்யிது இப்ராஹிம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் புறப்பட்டு கேரளா – கண்ணணூர் வந்தடைந்தனர். கொஞ்ச நாட்கள் தங்கி இஸ்லாமிய பிரச்சாரம் செய்துவிட்டு, தங்கள் குழுவினருடன் குலசேகரப் பாண்டியன் ஆட்சி செய்த திருநெல்வேலியிலுள்ள காயல்பட்டணம் நகர் வந்தடைந்தனர். கோப்பாண்டியன் என்ற குலசேகரப் பாண்டியன்  இவர்களை வரவேற்று மரியாதை செய்து காயல்பட்டணத்தில் தங்குவதற்கு எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்தான்.
    கலீபா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் சிறந்த மார்க்க மேதையும், பக்திமானும், இரக்க சிந்தனையுடைய -வர்களுமார்வார்கள். இவர்களை மக்கள் கல்பு அப்பா என்று அழைத்துள்ளனர். ஏர்வாடி செய்யிது இப்ராஹிம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தலைமையில் உள்ள பிரச்சாரக் குழு திருநெல்வேலியில் இஸ்லாமிய பிரச்சாரத்தை செவ்வனே செய்தனர். மதுரையை ஆண்ட திருப்பாண்டியன் ஏர்வாடி செய்யிது இப்ராஹிம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இஸ்லாமிய பிரச்சாரம் செய்ய அனுமதி கேட்டபோது அனுமதி மறுக்கவே, காயல்பட்டணத்திலுள்;ள படையில் 10000 பேரை அழைத்துக் கொண்டு மதுரையை கைப்பற்றி ஆட்சி செய்தார்கள்.இவ்வாட்சி அதிகாரத்தில் திருநெல்வேலி பகுதியில் கலீபா அப்பா அவர்களின் நிர்வாகம் அருமையாக நடந்துவந்தது.
    இவர்களின் மறைவு ஹிஜ்ரி 590 என்றும் ஹிஜ்ரி 595என்றும் சொல்லப்படுகிறது. இவர்களின் அடக்கஸ்தலம் கீழநெய்னார் தெருவில் அமைந்துள்ளது. ஷஃபான் மாதம் இங்கு சிறப்பாக கந்தூரி கொண்டாடப் படுகிறது. குர்ஆன் மத்ரஸாவும் நடைபெற்று வருகிறது. 

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…