Home Uncategorized கஞ்சாச்சா

கஞ்சாச்சா

ஒரு பெண் குழந்தை உண்டானது தெரிந்ததும் குழந்தையையும், குழந்தை பெற்ற தாயையும் கவனித்துக் கொள்வதற்கு ஒரு பெண்ணை நியமித்துக்கொள்வார்கள். அதற்கு அவளுக்கு அட்வான்ஸாக ஒரு தொகையை கொடுப்பார்கள். இதற்கு அச்சாரம் என்று பெயர். இந்த பெண் இந்த விஷயத்தில் பழக்கம் உள்ளவளாக இருப்பாள். குழந்தை பிறந்து 14 நாட்கள் வரை இவர்களுடனேயே இருப்பாள். தேவைப்படும்போது வீட்டாரின் வேண்டுகோளுக்கிணங்க கூடுதல் நாளும் இருப்பாள். குறிப்பிட்ட தொகையை நாளொன்றுக்குப் பேசி மொத்தமாக இறுதியில் பணம் கொடுப்பார்கள். அத்துடன் புதிய புடவை ஒன்றும் கொடுப்பார்கள். இருக்கும் நாட்கள் முழுவதும் இந்தப் பெண் பிள்ளை பெற்றவள் வீட்டிலேயே தங்கியிருப்பாள். இவர்களுக்கு 'கஞ்சாச்சா' என்று பெயர். இந்த கஞ்சாச்சா பிள்ளை பெறுவதற்குரிய மாதங்களை கணக்கிட்டு பல பேறுகாலங்களுக்கும் அச்சாரம் வாங்கிக் கொள்வாள். குழந்தை பெறும் மாதத்தில் ஒருபெண்ணுக்கு அச்சாரம் வாங்கிவிட்டால் அதே மாதத்தில் மற்றவளுக்கு அச்சாரம் வாங்க மாட்டாள். பெண்ணிற்கு பேறுகால வலி ஏற்பட்டதும் அச்சாரம் வாங்கிய கஞ்சாச்சா அவர்களிடம் சொல்லி அவர்கள் வரவழைக்கப்படுவார்கள்.

பிள்ளை பெற்றவளுக்கு ஸ்பெஷல் உணவு கொடுப்பதும், குழந்தையை குளிப்பாட்டுவதும், சில சமயங்களில் குழந்தைக்கு உணவு கொடுப்பதும், குழந்தையை கவனித்துக் கொள்வதும், குழந்தையை மருத்துவர்களிடம் காண்பிப்பதும், குழந்தையின் துணிகளை துவைப்பதும் இவள் வேலையாக இருக்கும்.

 

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…