Home Uncategorized ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை:
Uncategorized - பொது - March 21, 2011

ஸலாத்துல் முஸாஃபரி: கஸ்ரு, ஜம்உ தொழுகை:

ளுஹர், அஸா, இஷா ஆகிய தொழுகைகளை இரண்டு இரண்டு ரக்அத்துகளாகக் குறைத்து தொழுவதற்கு கஸ்ரு என்று பெயர். 'ளுஹர்-அஸர்' இவ்விரண்டையும் மற்றும் 'மஃரிபு-இஷா' இவ்விரண்டையும் ஒன்றின் வக்தில் மற்றொன்றை முற்படுத்தி அல்லது பிற்படுத்தி தொழுவதற்கு ஜம்ஊ என்று பெயர்.

விதிமுறைகள்:
 

1. பயணத் தொலைவு 130 கிலோ மீட்டர் (82 மைல்) அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும்.
2. பயணம் ஹலாலாகதாக இருக்க வேண்டும்.
3. கஸ்ரும் ஜம்உம் தொழுது முடிக்கும் வரை அவர் பயணாளியாக இருக்க வேண்டும்.
4.ஓர் ஊரிலிருந்து இன்னொரு ஊரை நினைத்து அவர் பயணம் செய்திருக்க வேண்டும்.
5. பயணியுடைய சொந்த ஊரின் எல்லையைக் கடந்திருக்க வேண்டும்.
6. வியாபாரம், உறவினரை சந்தித்தல் போன்று ஏதேனும் சில காரணங்களுக்காகவாவது பயணம் இமைய வேண்டும் .
7. அஸரை ளுஹர் வக்திலும், இஷாவை மக்ரிப் வக்திலும் முற்படுத்தி தொழும்போது ளுஹர் தொழுது முடிப்பதற்குள் அஸரை முற்படுத்தி தொழப்போவதாகவும், மஃரிப் தொழுது முடிப்பதற்குள் இஷாவை முற்படுத்தி தொழப்போவதாகவும் நிய்யத் செய்வது அவசியமாகும்.
இதே போன்று ளுஹரை அஸர் வக்தில் பிற்படுத்தி தொழும்போது ளுஹர் வக்து முடியும் முன் அஸருடன் ளுஹரை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும், மஃரிபை இஷா வக்தில் பிற்படுத்தி தொழும்போது மஃரிப் வக்து முடியும் முன் இஷாவுடன்; மஃக்ரிபை பிற்படுத்தி தொழுகிறேன் என்றும் நிய்யத் செய்து கொள்ள வேண்டும். இரண்டு ஃபர்ளுகளையும் ஒன்று முடிந்தவுடன் மற்றொன்று என்று தாமதமின்றித் தொழுவது அவசியமாகும்.
8. கஸ்ராகத் தொழுபவர்கள் கஸ்ரின்றி பரிபூரணமாக தொழும் இமாமை பின் தொடர்ந்து தொழுவது கூடாது.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…