Home செய்திகள் காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்

காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்

தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப்போது விமான போக்குவரத்திலும் புதிய உயரத்தை எட்டியுள்ளது. ரூ.381 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய சர்வதேச முனைய கட்டிடம் தற்போது முழுமையாக செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இனி தூத்துக்குடி மக்கள் சர்வதேச பயணங்களையும் தங்களது சொந்த மாவட்டத்திலிருந்தே மேற்கொள்ளும் வசதி கிடைக்கிறது.

புதிய முனையம் சுமார் 17,341 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு, ஆண்டுக்கு 20 இலட்சம் பயணிகளை கையாளும் திறன் பெற்றுள்ளது. உச்சநேரங்களில் 1,350 முதல் 1,800 பயணிகளை வசதியாக சேவை செய்யும் திறனும் கொண்டுள்ளது.

முக்கிய அம்சங்கள்:

  • 4 நுழைவுவாயில்கள், 21 செக்-இன் கவுண்டர்கள்
  • 3 ஏரோபிரிட்ஜ்கள், 7 பயணிகள் பாதுகாப்பு சோதனை இயந்திரங்கள்
  • 2 வருகை கன்வேயர் பெல்ட்கள்
  • ஒரே நேரத்தில் 5 விமானங்கள் நிறுத்தும் வசதி
  • 500 கார் நிறுத்தும் வசதி, 2 VIP அறைகள்
  • முழுமையாக சோலார் மின்சார வசதியுடன் பசுமை கட்டிடம் (GRIHA-4 மதிப்பீடு)

மேலும், ஓடுதளம் 3,115 மீட்டர் நீளமும், 45 மீட்டர் அகலமும் கொண்டதாக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய விமானங்கள் (Airbus A320/A321) இறங்குவதற்கும், இரவு நேர விமான சேவைகளுக்கும் வசதி செய்யப்பட்டிருக்கிறது.

கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில், சிலம்பாட்டம், ஒயிலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகள், பாரதியார், வ.ஓ. சிதம்பரனார் உள்ளிட்ட சுதந்திரப் போராட்ட வீரர்களின் சிற்பங்கள், சுவரோவியங்கள் போன்றவை முனையத்தில் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

அத்துடன், “One Airport, One Product” திட்டத்தின் கீழ் பழைய முனைய கட்டிடம் சரக்கு (Cargo) மையமாக மாற்றப்படுகிறது. இது தூத்துக்குடி மீன்வளம், மலர்கள், வாழைப்பழம், பனைப்பொருட்கள் போன்றவற்றை உலக சந்தைகளுக்கு ஏற்றுமதி செய்ய பெரும் ஆதரவாக அமையும்.

இனி வெளிநாட்டு பயணத்திற்காக சென்னை, மதுரை அல்லது திருவனந்தபுரம் செல்ல வேண்டிய அவசியமில்லை. நம்மூர் தூத்துக்குடியிலிருந்தே சர்வதேச விமான சேவைகள் தொடங்கியுள்ளதால், மக்கள் பெருமிதத்தில் உள்ளனர்.

காயல்பட்டினம் இருந்து தூத்துக்குடி சர்வதேச விமான நிலையம் சுமார் 33 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
சாலைவழி போக்குவரத்து நிலையைப் பொறுத்து சராசரியாக 50 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை பயண நேரம் ஆகும்.

Google Map Route

(Old Airport)

(New Airport)

Check Also

காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணி விரைவில் நிறைவு

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள காயல்பட்டினம் ரயில்வே ஸ்டேஷனில் நடைமேடை உயர்த்தும் பணிகள் ச…