Home செய்திகள் காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு

காயல்பட்டினம் ரயில் நிலைய மேம்பாட்டுப் பணிகள் – அதிகாரிகளுடனான சந்திப்பு

காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கம் (KAYALPATTINAM RAILWAY STATION BENEFICIARIES ASSOCIATION – KRSBA) உருவாக்கப்பட்டதன் பின், ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்து பலரும் பதிவிட்டு வருவதோடு, ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சங்கம் சார்பில் அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் கேட்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. IUML மாநாட்டை ஒட்டி நெல்லையில் இருந்த ஆலோசகர் KAM முஹம்மது அபூபக்கர் (Ex.MLA) அவர்கள், ரயில்வே மூத்த பகுதி பொறியாளர் (Works) திரு. க. செல்வ சாஸ்தா அவர்களை இன்று (15.09.2025) காலை 9.00 மணியளவில் திருநெல்வேலியில் சங்க தலைவர் ஹாஜி ராவன்னா அபுல் ஹசன், செயலாளர் மன்னர் AR பாதுல் அஸ்ஹப் மற்றும் SA இப்ராஹிம் மக்கீ ஆகியோருடன் சந்தித்தார்.

முக்கிய விவாதங்கள் மற்றும் உறுதிமொழிகள்:

பிளாட்பாம் மேம்பாடு:
24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு பிளாட்பாம் உயர்த்தப்படும். சுற்றுச்சுவர் ஒரே அளவில் அமைத்து, வர்ணம் பூசி, தேவையான வெளிச்ச வசதி செய்யப்படும்.

பாதுகாப்பு & கண்காணிப்பு:
பிளாட்பாம் முழுவதும் CCTV கேமராக்கள் பொருத்தப்படும். மேலும், Coach Indicator வசதி சேர்க்கப்படும்.
தினமும் RPF மற்றும் TN Govt Railway Police சார்பில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு, திருட்டு மற்றும் சமூக விரோத செயல்கள் தடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

நிலைய வசதிகள்:

டிக்கெட் கவுண்டர் மற்றும் வரவேற்பு ஹால் மேம்படுத்தப்பட்டு, இருக்கை, பங்கோடு, விளக்கு மற்றும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்படும்.

Filter Water Machine, Wheel Chair, Dust Bin ஆகியவற்றை வழங்குவோரின் பெயரில் Sponsor recognition வழங்கப்படும்.

கொட்டகை (Shed) வசதி:
விரிவாக்கம் செய்யப்பட்ட பிளாட்பாம் (Coach No: 18–24) பகுதிக்கு மட்டும் Shed அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நுழைவு வாயிலிலிருந்து உள்ளிருக்கும் இருக்கைகள் வரை Shed அமைக்க சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதிகாரிகள் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர்.

சுற்றுச்சுவர் மற்றும் பாதை:
24 பெட்டிகள் நிற்கும் அளவிற்கு சுற்றுச்சுவர் வெளிப்புறம் சுத்தம் செய்து நடைபாதை அமைக்கப்படும். மேலும், முன்புறம் KA பள்ளிக்கூடம் இணைக்கும் பாதை அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

நுழைவு பகுதி:
நெடுஞ்சாலையில் இருந்து நுழைவு வாயிலில் Fencing, Fountain, அழகுபடுத்தல், நிரந்தர Outpost Police நியமித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ள Senior Division Commercial Manager (Madurai) திரு. DL Ganesh அவர்களை சந்தித்து கோரிக்கை வைக்க சங்கம் தீர்மானித்துள்ளது.

அடுத்தகட்ட நடவடிக்கை

இன்றைய சந்திப்பில் பரிமாறப்பட்ட முக்கிய விவரங்களை சங்கம் வெளியிட்டுள்ளது. விரைவில் செயற்குழு கூட்டம் நடத்தி, மேலதிக ஆலோசனைகள் செய்து அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


✍️ KAM முஹம்மது அபூபக்கர் (Ex.MLA)
ஆலோசகர்,
காயல்பட்டினம் ரயில் நிலைய பயனாளிகள் சங்கம் (KRSBA)

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…