பாட்டுக்கள்
ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் மற்றும் ஊர்களிலும் மக்கள் தங்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும், தங்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் பிற விஷயங்களை வெளிப்படுத்தவும் அதைப் பாடல்களாக உருவாக்கி படிப்பதுண்டு. அது தாலாட்டுப் பாடலாகவும், முராரி பாடலாகவும் இன்னும் பிற பாடல்களாகவும் அந்த கிராம உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாக அமைகின்றது. அவை அந்த இடங்களின் பழக்கவழக்கு மொழியாகவே கொச்சையான தமிழிலும் இருக்கும்.
அவ்விதமாக காயல்பட்டணத்தில், மக்கள் மத்தியில் பாடப்பட்ட பாடல்களை இங்கே தொகுத்து தந்துள்ளோம். மத்திய காயல்பகுதி மக்கள் பிள்ளைகளை தாலாட்டுவதற்கு பாடிய பாடல் ஒன்று இங்கே தரப்பட்டுள்ளது.
தாலாட்டு
முத்து முத்து செவ்விழனி
முத்தமெல்லாம் கொத்தமல்லி
கொத்தமல்லி பூ பூக்க
கொடி மிளகு பிஞ்சுவிட
நட்பகளம் கொப்பு விட நம்ம
நபி யாரஸூலல்லாஹ் வாசலிலே
வாசிலந்தி நூலிலைக்க வண்ணப் புறா முட்டையிட
என்ன எழுதி முடித்தாரோ
ஏலக்காய் காய் காய்க்க
எங்கும் நல் மணம் மணக்க
ஜாதிக்காய் காய்ச்சுதடி என் தாய்மாமன் வாசலிலே
ஈத்தம் குளசரட இஸ்மாயில் நபி காலுறைஞ்ச
ஜம்ஜம் கிணற்றுத் தண்ணீ
ஹாஜரம்மா அள்ளி அமிர்தம் கொண்டார்கள்
நிலத்தால் இளகியிலே அல்லாஹ் நாடியிலே புத்தூரி
தவித்து வந்த ஒட்டகைக்கு யாரஸூலல்லாஹ்
தண்ணீர் தாகம் தீர்த்தார்கள்
மயிலும் கண்ணி பாத்திமாநாச்சி
வருசையான புருசனஞ்சி கையை நீட்டி
சலாமும் சொல்லுங்க பைய வாங்க பாத்திமாநாச்சி
குண்டுக்குள் இறங்கி பாங்கு சொல்லி
குடத்தில் வாங்கு தவிட்டரஸூல்
மண்டுக்குள் இறங்கி மணமும் பூசி
செய்யிதான மக்கள் மம்மதான மக்கள் அடமங்கனாட
அறிவாம் பெருங்கடலாம் ஆனக்கப்பல் ஈமானாம்
தொழுகை நிரப்பான தொக்கான தவ்பாவாம்
அதுக்குடைந்த ஆணிகளாம் ஐம்பத்தோர் இலட்சணமாம்
ஏற்றம் சரக்கெல்லாம் ஏற்றமுள்ள சலவாத்தும்
கட்டும் கயிறெல்லாம் கலிமா முழங்கிடுமாம்
ஆலத்தோர் பாமரமாம் அதிலுள்ள பிஸ்மியாம்
ஓடுதாம் கப்பல் சாயல் இல்லாமல் உடையோன் குத்ரத்து வாசலிலே
அரசனிற கண்டான கப்பல் குதித்து ஓடிடுமாம்
சடலம் சடலமடி என்ன சடலமடி
விடுற மூச்செல்லாம் கப்பலடி
சங்கு சறகு வித்தலவ
ஆதிய நூதிய சம்பாவே
மோசக் குருவி அடையுமுன்னே அக்கறை மௌத்து தொழுகைக்குள்ளே
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…