சுன்னத்(கத்னா) வைபவம்
உரிய வயதை அடைந்ததும் ஆண் பிள்ளைக்கு சுன்னத் என்னும் கத்னா செய்து வைக்கிறார்கள். குழந்தைகள் பூமாலையிடப்பட்டடு, அலங்காரம் செய்யப்பட்டு பைத் சொல்லி ஊர்வலமாக செல்கிறார்கள். சொந்தபந்தங்களுக்கும், தெரிந்தவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு அவர்களுக்கு பிஸ்கட் போன்றவை கொடுக்கப்படுகிறது. சிலர் குழந்தைகளை பல்லக்கு அல்லது குதிரையில் ஊர்வலமாக அழைத்து செல்கிறார்கள். ஊர்வலம் செல்லும் வழியில் இறைநேசர்களின் கப்ர்களுக்கு பாத்திஹா ஓதப்பட்டு ஜியாரத் செய்யப்படுகிறது.
இதற்கு என்று ஒவ்வொரு குடும்பத்திற்கும் உரிய குடிமகன்கள் இதை செய்வார்கள். சுன்னத் விடப்பட்டு குழந்தை குளிக்க 7 நாட்கள் ஆகின்றன. சுன்னத் விடும்போது குழந்தைகளுக்கு பால் கலக்காத தேநீர் கொடுக்கப்படுகிறது. அலங்கார உடுப்புகள் கழற்றப்பட்டு அவர்கள் கழுத்தில் துஆ, வசம்பு மாலையாக கட்டப்படுகிறது. மாலைபோல் வெள்ளையில் இலேசான துணி வேட்டியாக கட்டப்படுகிறது. அந்த குழந்தை அங்கிருக்கும் பெரியவர்கள் மற்றும் ஏனையோர் முன்னிலையில் அவர்களிடம் துஆ செய்ய சொல்லும் நோக்கில் செல்கிறது. அவர்கள் அந்தபிள்ளைகளை உச்சிமுகர்ந்து துஆ செய்து அனுப்புகிறார்கள். குடிமகன் அந்த பிள்ளையை சேரில் உட்கார வைத்து கால்களை அகற்றி வைத்துக் கொள்ள மற்ற இருவர் பிள்ளை அசையாமல் பிடித்துக் கொள்கிறார்கள். அதன் பின் கத்னா செய்யப்படுகிறது. அந்த இடத்தில் சாம்பல் தூவப்படுகிறது. அதன்பின் குழந்தைகள் பாயில் படுக்க வைக்கப்பட்டு வெள்ளை துணி உயரமாக கயிறினால் கட்டப்படுகிறது. கத்னா செய்யப்பட்ட இடத்தில் பஞ்சு வைத்து கட்டப்பட்டிருக்கும். அந்த பஞ்சு விழும்வரை குடிமகன்களால் குழந்தை கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள். கத்னா செய்யப்பட்ட குழந்தையை சொந்த பந்தங்கள் பார்த்து ஹதியா கொடுக்கிறார்கள்.
குழந்தைக்கு தண்ணீர் ஊற்றும் சமயம் குடிமகன்களுக்கு கத்னா செய்யப்பட்டதற்குரிய தொகை, அரிசி, முட்டை, நல்லெண்ணெய் போன்றவை கொடுக்கப்படுகின்றன. சிலர் தண்ணீர் ஊற்றி விருந்து வைப்பார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…