கிராஅத்துக்களின் வகைகள்
ஏழு கிராஅத்துகள் என்பது குர்ஆனை ஏழு முறைகளில் படித்தலாகும். அதாவது குர்ஆனின் பல்வேறு வார்த்தைகளை ஒவ்வொரு கிராஅத்திலும் வித்தியாசமாக படித்தல். ஒரே வார்த்தை மீது அரபி இலக்கணத்தின் வேறு வேறு சட்டத்தை பிரயோகிப்பது.
ஒரு வார்த்தைக்கு அரபி இலக்கண சட்டப்படி ஒரே வார்த்தையை வேறு வேறு அமைப்பில் படிப்பது, எழுத்துக்களின் உச்சரிப்பில் வல்லினம், மெல்லினம்,நீட்டல், சுருக்கல், நெருக்கமான உச்சரிப்புள்ள எழுத்துக்களை இணைத்து ஒன்றாக ஆக்குதல் போன்றவற்றில் வேறுபட்ட முறைகளை கையாண்டு படிப்பதால் கிராஅத்துகள்(ஓதுதல்கள்) பலவாறாக ஆகின்றது.
அப்படி வேறுபட்ட கிராஅத்துகளின் எண்ணிக்கை ஏழு. இத்தகைய வேறுபாட்டினால் அர்த்தம் வேறு படுவதில்லை. அப்படியே அர்த்தம் வேறு பட்டாலும் முரண்பாடான அர்த்தம் வருவதில்லை. வித்தியாசப்படும் கிராஅத்தில் 'மலிக்' என்ற வார்த்தைக்கு அரசன் என்று பொருள். இது நடைமுறை கிராஅத்திலுள்ள 'மாலிக்' என்ற வார்த்தையின் பொருளாகிய அதிபதி என்ற அர்த்தத்தோடு வித்தியாசப்பட்டாலும் இரண்டு பொருளும் அவ்விடத்தில் பொருந்திப் போவதைக் கவனிக்கவும்.
ஏழு கிராஅத்களும் நபி(ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்களிடமிருந்து சஹாபாக்கள் படித்து சஹாபாக்கள் தாபியீன்களுக்கு படித்துக் கொடுத்ததாகும். ஏழு கிராஅத்தில் ஒவ்வொன்றையும் ஏழு காரீக்கள் (ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கிராஅத்) ஹிஜ்ரீ இரண்டாம் நூற்றாண்டில் மக்களுக்குப் படித்துக் கொடுத்து பிரபலமடைந்தார்கள். அவர்களில் சிலர் தாபிஈன்கள் சிலர் தபஉத்தாபியீன்களாவர்.
சில சாகபிகள் குர்ஆனை கிராஅத்தாக இராகமாக ஓதுவதில் திறம்பெற்றிருந்தார்கள். அவர்களை ஓதச் செய்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரசித்து கேட்பார்கள்.
ஏழு கிராஅத்களின் இமாம்கள்:
1) அபூ அம்ர் பின் அல் அலாஃ அல்பஸரீ, மறைவு 154 ஹிஜ்ரி
2) அப்துல்லாஹ் இப்னு கஸீர் அல்மக்கீ, தாபிஈ, மறைவு 120 ஹிஜ்ரி
3) நாஃபிஉ பின் அப்துர்ரஹ்மான் அல்மதனீ, மறைவு 169 ஹிஜ்ரி
4) அப்துல்லாஹ் இப்னு ஆமிர் அல்யஹ்ஸுபீ, தாபிஈ, மறைவு 118 ஹிஜ்ரி
5) ஆஸிம் பின் அபின்னஜ்வத் அல்கூஃபி, தாபிஈ, மறைவு 128 ஹிஜ்ரி
6) ஹம்ஜா பின் ஹபீப் அல்கூஃபி, மறைவு 156 ஹிஜ்ரி
7) அல்கஸாஈ அலி பின் ஹம்ஜா அல்கூஃபி, மறைவு 189 ஹிஜ்ரி
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…