காதிரிய்யா கொடிமர சிறு நெய்னார் பள்ளி
சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக வக்பு செய்யப்பட்டதாகும்.
இப் பள்ளி ஹிஜ்ரி 621 ல் கட்டப்பட்டது. இப்பள்ளியை விரிவுபடுத்தி கட்டிய மகான் அப்துற் றஷpது வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் காழி அலாவுத்தீன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தர்காவில் அடங்கியுள்ளார்கள். இவர்கள் ஸாதாத் வழியை சார்ந்தவர்கள். ஹஜ்ரத் முஹிய்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் காதிரிய்யா தரீகாவை பின்பற்றும் சுன்னத்-வல்-ஜமாஅத்தினர்களுக்கு இப்பள்ளி உரியது. அவர்களாலேயே இது நிர்வகிக்கப்படுகிறது.
1. பிரதி வாரம் வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு ஞாயிறு பின்னேரம் திங்களிரவு மஹ்பூபு சுபுஹானி ரத்திபு மஜ்லிஸில் வைத்து காதிரிய்யா ராத்திபு (திக்ரு ) நடத்துதல்.
2. பிரதிவாரம் திங்கள் காலை புர்தா ஷரீஃபு ஓதுதல்.
3. ரபீயுல் அவ்வல்; பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹு வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஷரிஃபு ஓதுதல்.
4. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டகை ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் முஹ்யித்தீன் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.
5. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் நாயகம் ரலியல்லாஹுஅன்ஹு அவர்கள் பேரில் நாகூர் நாயகம் மௌலிது ஷரிஃபு ஓதுதல்.
6. முஹர்ரம் மாதம் இமாம் ஹஸன், இமாம் ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா ஆகியோர்கள் பெயரில் மௌலிது ஷரிஃப் ஓதுதல்.
7. ரஜப் மாதம் ஹழரத் காஜா முயீனுத்தீன் ஜிஸ்தி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரீஃப் ஓதுதல்.
8. ஷஃபான் பிறை 15 அன்று 3 யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ ஓதுதல்.
9. துல்ஹஜ் பிறை 1 முதல் 8 வரை ஹழரத் பெரியசம்சுத்தின் வலி ஹழரத் சின்ன சம்சுதீன் வலி, ஹழரத் அப்துர் ரஹ்மான் வலி ரலியல்லாஹுஅன்ஹும் ஆகிய முவ்வொலி நாதாக்களின் கந்தூரி வைபவம் – காலை கத்முல் குர்ஆன் ஓதுதல் ,இரவு ஜண்டா மஹாலில் மார்க்கப்பேருரை , பிறை 8 அன்று காலை நேர்ச்சை சோறு விநியோகம்.
10. ரமலான் மாதம் பிறை 1 முதல் 30 வரை இரவு முழுக்குர்ஆன்ஓதி தராவீஹ் தொழ வைத்து பிறை 29 அன்று தமாம் செய்தல். பிறை 27 காதிரிய்யா திக்ரு செய்தல் . பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை பிறை 17 அன்று பத்ருஸஹாபாக்கள் திருநாமங்கள் ஓதிதுஆ செய்தல். ரமலான் பிறை 24 அன்று காயல்பட்டினம் ஸூபி ஹழரத் ரலியல்லாஹுஅன்ஹு அவர்களின் கந்தூரியையொட்டி இரவு குத்பிய்யா மஜ்லிஸ் நடைபெறும் .ரமலான் பிறை 1 முதல் 30 வரை மாலை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சி குடிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிறை1 முதல் 30 வரை வித்ரிய்யா ஷரீபு ஓதுதல்.
11. நோன்புப் பெருநாள், ஹஜ்பெருநாள் தொழுகை தொழவைத்து குத்பா பேருரை நிகழ்த்தப்பெறும். ஊரிலுள்ள தீர்ப்புகள், முடிவுகள், பிறைகாணும் விஷயங்கள் இப்பள்ளியிலேயே காலாகாலமாக முடிவெடுக்கப்பட்டு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முஸ்லிம்களுக்கான மையவாடி உள்ளது
12. பிரதிமாதம் ஜலாலிய்யா ராத்திபு மஜ்லிஸ்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…