Home Uncategorized பெண்கள் தைக்காக்கள்

பெண்கள் தைக்காக்கள்

      எந்த ஊருக்கும் இல்லாத தனியான இடம் காயல்பட்டணத்திற்கு உண்டு. பெண்கள் வந்து செல்வதற்கென்று தனியான பாதைகள்(முடுக்குகள்) இங்குண்டு.
      பெண்கள் தனியாக வணக்க வழிபாடுகள் நடத்துவதற்கென்று தனியாக தைக்காக்கள் இங்குண்டு. ஆண்கள் இமாம்களாக மறைவாக நின்று தொழுகை நடத்துவார்கள். சில சமயம் பெண்கள் இமாமாக நின்று தொழுகை நடத்துவதும் உண்டு. சிறுவர்களுக்கான மத்ரஸாக்கள், அவர்களுக்கான போட்டிகள் நடத்துவதும் மீலாது விழாக்கள், கந்தூரி விழாக்கள் நடத்துவதும் பெண்களை ஹஜ்ஜிற்கு வழி அனுப்பு விழா நடத்துவதும் மௌலிது ஷரீஃபும் திக்ரு மஜ்லிஸும் ஸலவாத்து மஜ்லிஸ் நடத்துவதும் இன்ன பிற பெண்களுக்கான நிகழ்ச்சிகள் நடத்துவதும் இங்குள்ள தைக்காக்களில் நடைபெறும் நிகழ்வுகளாகும்.
      சுன்னத்-வல்-ஜமாஅத் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றும் பெண்களுக்காக இத் தைக்காக்கள் வக்பு செய்யப்பட்டு உருவாக்கப்பட்டுள்ளன. இத் தைக்காக்களில் ஆண்கள் வந்து இமாமாக நின்று தொழ வைப்பதற்கென்று தனியான இடமும், பாதையும் உள்ளது.
காயல்பட்டணத்திலுள்ள தைக்காக்கள்:
ஷாஹிதிய்யா பெண்கள் தைக்கா
செண்டு ஆலிம் பெண்கள் தைக்கா
ஜன்னத்துல் காதிரிய்யா தைக்கா
முஹிய்யித்தீன் ஆண்டவர்கள் பெண்கள் தைக்கா
கதீஜா நாயகி பெண்கள் தைக்கா
பாத்திமா நாயகி பெண்கள் தைக்கா
ஹலிமா பள்ளி
வாவு தைக்கா
மஹ்பூபு சுபுஹானி பெண்கள் தைக்கா
இப்னு ஹஜர் பெண்கள் தைக்கா
சின்னக்கல் மௌலானா தைக்கா
பெரியகல் தைக்கா
நஹ்வி அப்பா தைக்கா
முஃபதுல் முஃபினாத்து தைக்கா
சதக்கத்துல்லா அப்பா தைக்கா
ரஹ்மத் தைக்கா
ஹைரிய்யா பெண்கள் தைக்கா
அல் – அமான் தைக்கா
பரக்கத் தைக்கா
கிழ்ரு தைக்கா
ஜன்னத்துல் பிர்தௌஸ் தைக்கா
அ.க. பெண்கள் தைக்கா
ஹாபிழ் அமீர் பெண்கள் தைக்கா
மாஅபதுன் நிஸ்வான் தைக்கா
முன்ஸக்கதுன் நிஸ்வான் தைக்கா
ஜர்ரூக்குல் ஃபாஸி பெண்கள் தைக்கா
அரூஸுல் ஜன்னாஹ் பெண்கள் தைக்கா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…