Home Uncategorized இடி, மின்னல்
Uncategorized - பொது - November 11, 2010

இடி, மின்னல்

மழை
கடலில் இருந்தும் பிற நீர்நிலைகளில் இருந்தும், நீரானது சூரியனின் வெப்பத்தால் நீராவியாகி மேலெழுந்து சென்று மேகங்களை அடைகின்றது. அப்படி மேலெழுந்து சென்று மேகங்களை அடையும் பொழுது குளிர்வடைந்து நீராக மாறுகின்றது. பின்னர் இந்த நீர்தாங்கிய மேகங்களில் (கார்முகில்களில்) இருந்து நீரானது துளிகளாக,  பூமியின் மேற்பரப்பில் மழையாக விழுகிறது. மழை விழும் போது மொத்த நீரும் நிலத்தை அடைவதில்லை. அதில் ஒரு பகுதி நீராவியாகி விடுகிறது. பாலைவனம் போன்ற பகுதிகளில் மொத்த நீரும் ஆவியாகிவிடுவது உண்டு.

முகில்-மேகம்
மேகம் என்பது புவியில் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும் சிறிய நீர்த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத் துகள்கள் ஒன்றாகச் சேர்ந்த ஒரு தொகுதியாகும்.

நீராவியானது குளிரும்போது ஒடுங்கி, மிகச் சிறிய விட்டம் கொண்ட பனித் துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தெரியாத அளவு கொண்டது ஆயினும் பல கோடிக் கணக்கான துளிகள் ஒன்றாகச் சேர்ந்து இருக்கும்போது அவற்றைக் கண்ணால் பார்க்கமுடிகிறது. இதுவே மேகம் எனப்படுகின்றது. செறிவானதும், ஆழமானதுமான மேகங்கள் வரையான கண்ணுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக் கற்றைகளை தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இதனால் மேகங்களின் மேற்பக்கமாவது வெண்ணிறமாகத் தெரிவதுண்டு. மேகத்தின்; அளவு அதிகமாகும்போது உட்புறங்களில் ஒளி குறைந்துவிடுகிறது. இதன் காரணமாக மேகத்தின் கீழ்ப்பகுதிகள் சாம்பல் நிறமாகவோ, கருநிறமாகவோ இருப்பதுண்டு.

மின்னல்

மழைக் காலங்களில் மேகங்களின் இடையே ஏற்படும் மிகப்பெரிய தீப்பொறிபோன்ற மின் பொறிக் கீற்றல். கண்ணைப் பறிக்கும் ஒளி கதிர்களோடு கோடுகளாய் வானில் நொடிப்பொழுதில் தோன்றி மறையும் நிகழ்ச்சி தான் மின்னல். மின்னலோடு கூட பெரும் சத்தம் கேட்கும். இதை இடி என்கிறோம். மழை மேகங்கள் தமக்குள் இருக்கும்; அணுக்கள் பல வழிகளில் உராய்ந்து மின்னோட்டம் பெறுகின்றன. இவ்வாறு சில மேகக் கூட்டங்கள் நேர் மின்னோட்டமும், சில மேகங்கள் எதிர் மின்னோட்டமும் பெறுகின்றன. எதிர் எதிர் மின்னூட்டம் கொண்ட பிற மேகக் கூட்டங்கள் அருகே வரும் பொழுது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு காற்றின் வழியே மின்னூட்டம் பாயும் பொழுது தீப்பொறி போல ஒளி தெரிகிறது. இப்பகுதியில் காற்று மின் மயமாக்கப் படுகின்றது. சில பொழுதுகளில் மின்னல் ஒரு மரத்தையோ நிலத்தையோ மேகங்களில் சேர்ந்திருந்த மின்னூட்டம் நிலத்திற்கு பாய்ந்து விடும்.இந்நிகழ்ச்சி இடி விழுந்தது எனப்படுகிறது. இம்மின்னல் நிலத்தில் உள்ள விலங்குகளையும், ஆட்களையும் கூட தாக்கும். இதனால் பலர் உயிரிழந்து உள்ளனர் . வானில் ஆகாய விமானத்தில் பறந்து செல்லும் பொழுதும் இவ்வாறு நிகழும், ஆனால் சேதம் ஏதும் விளைவிப்பதில்லை.
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…