மஹ்லறா கந்தூரி
மஹ்லறாவில் ரபீயுல் ஆகிர் மாதம் கௌதுல் அஃலம் முஹிய்யத்தீன் ஆண்டகை ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் நினைவாக கந்தூரி விழா எடுக்கப்படுகிறது. பிறை 1 அன்று மகான் அவர்கள் பெயரால் கொடியேற்றம் நடைபெறுகிறது. (தற்போது இது நடைபெறுவதில்லை)
1. பிறை 1 முதல் 11 வரை காலை சுப்ஹிற்குப் பின் கத்முல் குர்ஆன் ஓதப்பட்டு தமாம் செய்யப்படுகிறது. அதைத் தொடர்ந்து மகான் அவர்களின் பெயரால் புனித மௌலிது ஷரீஃப் ஓதப்படுகிறது. நேர்ச்சையும் வழங்கப்படுகிறது. பிறை 12, 13 அன்று மகான் அவர்கள் பெயரில் உள்ள குத்பிய்யா ஓதப்படுகிறது.
2.பிறை 6 முதல் இரவு மார்க்கச் சொற்பொழிவு உலமாக்களால் நிகழ்த்தப்பெறுகிறது. அதற்கு நேர்ச்சையும் வழங்கப்படுகிறது.ஆரம்பத்தில் கந்தூரி நாளன்று மட்டும் பயான் நடைபெறும். தற்போது ஆறு நாட்கள் பயான்நடைபெறுகிறது.கந்தூரி அன்று மாலை காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியிலிருந்து மஹ்லறாவிற்கு பால்குடம் எடுக்கப்படுகிறது. அதன்பின்தான் மஹ்லறாவில் தேநீர் கொடுப்பது வழக்கமாக இருந்து வரும் நடைமுறை.
3. பிறை 6 அன்று மஹ்லறா நிறுவனர் மௌலானா அப்துல்லாஹில் காதிரியில் பகுதாதி அவர்களுக்கு கந்தூரி எடுக்கப்பட்டு, காலையில் நாஸ்டா பண்ணுவதற்கு கிச்சடி சோறு உண்ண கொடுக்கப்படும். தற்போது அந்த நடைமுறை இல்லை. வெறும் கிச்சடி சோறு மட்டும் பெட்டியில் கொடுக்கப்படுகிறது.
4.கந்தூரி நேர்ச்சை சோறு ஊர் முழுவதும் கந்தூரிக்கு அடுத்தநாள் பாரம்பரரியமான கறி, கத்தரிக்காய், புளியானம் கொண்ட களரி சோறு உண்பதற்கு வழங்கப்பட்டது. இதை வழங்குவதற்கு மஹ்லறா பாத்தியப்பட்ட காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளி, முஹிய்யத்தீன் பள்ளி, குத்பா சிறுபள்ளி, அஹ்மது நெய்னார் பள்ளி, இரட்டைக்குளத்துப் பள்ளி ஆகிய ஜமாஅத் உறுப்பினர்கள் ஒன்றாக சேர்ந்து விளம்புவார்கள். அதன்பின் அந்த நடைமுறை கைவிடப்பட்டது.
5.அதன்பின் பிரியாணி உண்ணக் கொடுக்கப்பட்டது. பின்னர் சில வருடங்களில் அதுவும் கைவிடப்பட்டது. அதன்பின் பிரியாணி பனைஓலைப் பெட்டியில் வழங்கப்பட்டது. அதுவும் தற்போது கைவிடப்பட்டு குஸ்கா சோறு மக்கள் வரிசையில் நின்று வாங்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
6. நேர்ச்சைசோறு விநியோகித்த அன்று இரவு பெண்கள் ஜியாரத் செய்வதற்காக மஹ்லறா திறந்து விடப்படுகிற.து. அன்று இரவு பெண்கள் மட்டும் கூடுவார்கள்.
7. இரண்டு நாட்கள் கழித்து உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கைகள் எண்ணப்படுகிறது. காணிக்கையாக தங்கம், வெள்ளி, வெளிநாட்டு நோட்டுகள், மற்றும் ஏனைய பொருட்கள் இருப்பின் அது ஏலம் விடப்பட்டு அதுவும் காணிக்கையில் சேர்க்கப்படுகிறது. ஏலம் எடுப்பவர்கள் அதை புண்ணியமாக கருதி எடுத்துச் செல்கிறார்கள்.
நேர்ந்து விடப்பட்ட பிராணிகளும் ஏலம் விடப்பட்டு கணக்கில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…