Home Uncategorized இரட்டைக்குளத்துபள்ளி (மஸ்ஜிது மீகாயில்)

இரட்டைக்குளத்துபள்ளி (மஸ்ஜிது மீகாயில்)

        
  காயல்பட்டணம் நெய்னார் தெரு சதுக்கைத் தெருக்களுக்கிடையே இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளியின் மேற்கிலும் கிழக்கிலும் குளங்கள் இருந்ததால் இது இரட்டை குளம் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மகான் செய்கு சதக்கத்துல்லாஹில் காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியில் தங்கி மார்க்கம் போதித்து வந்தார்கள். இச் சமயத்தில் வானவர் மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் உரையாடி மழை பொழிய வைத்ததினால் இப் பள்ளி மீகாயீல் பள்ளி என்று அழைக்கப்படுகிறது. மகான் செய்கு சதக்கத்துல்லாஹில் காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் உருக்கமான உரையைக் கேட்டு பள்ளியின் உத்திர கல்லும் கண்ணீர் வடித்தது. தற்போதும் அந்த கல்லிலிருந்து நீர் கசிந்து கொண்டிருந்தது. 2008 ம் ஆண்டு பள்ளி விரிவாக்கத்தின்போது இக் கல் சிமெண்ட் மூலம் பூசப்பட்டு விட்டது. மகான் ஹஜ்ரத் செய்கு அப்துல் காதிர் ஸூபி காதிரி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இப் பள்ளியில் கல்வத் இருந்துள்ளார்கள்.
     இப் பள்ளியில் ஜலாலிய்யா சங்கம் அமைந்துள்ளது. 40,45 வருடங்களுக்கு முன் இப் பள்ளியைச் சுற்றி வீடுகள் இல்லாததால் இரவு நேரங்களில் மக்கள் தொழ வருவது மிகக்குறைவு. இதனால் நோன்பு காலங்களில் தராவீஹ் தொழுகை முடிந்த பின் கூட்டமாக பைத் சொல்லி பெரிய சதுக்கை வரை வந்து கலைந்து செல்வார்கள். இவ் வழக்கம் இன்றுவரை உள்ளது. இப் பள்ளி வளாகத்தில் ஜலாலிய்யா நிகாஹ் மஜ்லிஸ் உள்ளது. சுன்னத்-வல்-ஜமாஅத், காதிரிய்யா தரீகாவை ஏற்று நடக்க கூடியவர்களாக இருக்கிறார்கள்.

1. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஓதுதல்.

2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.

3. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் நாகூர் சாகுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் பேரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.

4. ஷவ்வால் 15 அன்று ஸெய்யிது இஸ்மாயில் ஜலாலியுல் புஹாரி தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி. 
 5. சபர் மாதம் வித்ரிய்யா ஓதப்பட்டு மகான் சதக்கத்துல்லா அப்பா வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கந்தூரி.
6. பிரதி மாதம் பிறை 14ல் காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…