Home செய்திகள் மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?

மொகுதூம் பள்ளி மையவாடியில் உள்ள நடு கற்கள் பெயர் பலகைகள் அகற்றப்பட்டு அடையாளங்கள் அழிக்கப்படுகின்றதா ?

பழைய பெரிய கல்வெட்டுகள் மண்ணுக்குள் புதைக்கப்படுகின்றன

கல்வெட்டுகளையும் புராதான சின்னங்களையும் பாதுகாப்பது சுன்னத் வல் ஜமாத்தினரின் வழமை ஆனால் அதற்கு நேர் மாறாக உள்ள தப்லீக் ஜமாத்தினர் மற்றும் தவ்ஹீத் ஜமாத்தினர் இவற்றை பல்வேறு காரணங்களைச் சொல்லி அழித்து வருகிறார்கள்.

நேரடியாக சொல்ல முடியாத அவர்கள் பள்ளியை விரிவாக்கம் செய்கின்றோம் மையவாடியை துப்புரவு செய்கின்றோம் என்ற வசீகர வழிகளின் நமது வாழ்க்கை சுவற்றினை அழித்து வருகிறார்கள் இதற்கான தண்டனையை நாம் அனைவரும் சேர்ந்து அனுபவித்து வருகின்றோம்

கூடிய விரைவில் நமது பழைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு நாம் புதியவர்களாக அறிமுகப்படுத்தப்படுவோம்

ஆட்சியாளர்களின் கொடுமையான சட்டங்களுக்கு நாம் ஆளாக்கப்படுவோம் என்பதை முன்னறிவிப்பாக தெரியப்படுத்துகின்றோம்

குறிப்பு : பல whatsapp தலங்களிலும் நமது இணையதளத்திலும் இந்த தகவல் பதியப்பட்டதன் காரணமாக சம்பந்தப்பட்ட நிர்வாகிகள் விளக்கம் கொடுத்துள்ளார்கள்

நிர்வாகத்தின் சார்பாக கொடுக்கப்பட்ட விளக்கம்

” சாலைகள் உயர்த்தப்பட்டுள்ளதால் கனமழை நேரங்களில் அதிகப்படியான நீர் மையவாடியில் தேங்குவதால் அதை உயர்த்தும் நோக்கத்திற்காகவே மணல் நிரப்புகின்றோம்.

இந்த பணிக்காக அகற்றப்பட்ட மீசான் கற்கள் அந்தந்த இடத்தில் வைக்கப்படும் அதை உறுதி செய்ய வரைபடம் தயாரித்து குறித்து வைத்துள்ளோம் மீண்டும் அந்தப் பலகைகளை அதே இடத்தில் வைப்போம் என்று கூறியுள்ளார்கள்”

நல்லெண்ணத்தின் அடிப்படையிலும் நமது ஊரின் வரலாற்று சுவடுகள் பாதாகாக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் பதியப்பட்ட இந்த இரு தரப்பினர்களின் பதிவுகளும் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது.

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…