முஹ்யித்தீன் பள்ளி
குத்துக்கல் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. இப் பள்ளி கட்டி திறக்கப்பட்ட வருடம் ஹிஜ்ரி 1299 ஷவ்வால் பிறை 5.சிங்கப்பூரார் என்ற புகழுக்குரிய அல்-ஹாஜ் உ.து. இபுறாகீம் அவர்களும், அல்-ஆரிபுபில்லாஹ் அல்-முஹிப்பிற்றஸூல் செய்கு அப்துல் காதிர் ஆலிம் ஸூபி ஹஜரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கம்பெனியார் வகையறாக்கள், ஹாஜி சே.கு. அப்பா குடும்பத்ததர் மற்றும் ஹாஜி குளம் செண்டு முஹியித்தீன் அப்துல் காதிர் ஆலிம் ஆகிNயுhர் இப் பள்ளியின் நிர்மாண ஸ்தாபகர்களாகும்.
இப் பள்ளி வளாகத்தில் மஜ்லிஸுல் கறம் சங்கம் செயல்படுகிறது.
1. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மௌலிது ஷரிபு ஓதுதல்.
2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மௌலிது ஷரிபு ஓதுதல்
3. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் சாகுல்ஹமிது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மௌலிது ஷரிபு ஓதுதல்.
4. முஹர்ரம் மாதம் இமாமுனா ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு அன்ஹுமா அவர்கள் மௌலிது ஷரிபு ஓதுதல்.
5. ஸபர் மாதம் பிறை அன்று தைக்கா ஷெய்கு முஹம்மது சாலிகு ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி வைபவம் – பிறை 1முதல் 6 வரை காலை கத்முல் குர்ஆன் ஓதுதல், இரவு மார்க்க சொற்பொழிவு நடத்துதல்.
6. ரமலான் பிறை 1 முதல் 30வரை முழுக்குர்ஆன் ஓதி இரவு தராவீஹ் தொழுகை நடைபெறும்;. பிறை 27 அன்று தஸ்பீஹ் தொழுகையும் ,ஒவ்வொரு இரவும் வித்ரியா ஷரிபும் ஒதப்படும்.
7. இரு பெருநாட்களிலும் பெருநாட்களுக்குப் பின் குத்பா பேருரையும் நடைபெறும் இரவு காதிரிய்யாதிக்ரும் நடைபெறும்.
8. ரமலான் பிறை 1 முதல் 30 வரை பொதுமக்களுக்கு நோன்பு கஞ்சியும், நோன்பு திறப்பதற்கு கஞ்சியும் கொடுக்கப்படுகிறது.
9. இப் பள்ளியில் மத்ரஸத்துல் பிர்தௌஸ் என்ற பெயரில் மாணவர்களுக்கு திருக்குர்ஆன் கற்பித்தலும் மார்க்க வகுப்புகளும் சுமார் 45 வருடங்களாக நடந்து வருகிறது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…