Home Uncategorized மொட்டையார் பள்ளி (கோமான் பள்ளி)

மொட்டையார் பள்ளி (கோமான் பள்ளி)

 

 
   கோமான் தெருவில் இப் பள்ளி அமைந்துள்ளது. கி.பி. 875 லேயே இப் பள்ளி கட்டபட்டு விட்டது. ஜமாஅத் கட்டுப்பாடான இங்கு கோமான் மேலத் தெரு, கோமான் நடுத் தெரு, கோமான் கீழத் தெருக்கள் உள்ளன.

1. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பெயரில் சுபுஹான மௌலிது ஓதுதல்.

2. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன்  ஆண்டவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.

3. ஜமாஅத்துல் ஆகிர் மாதம் பிறை 1 முதல் 10 வரை நாகூர் சாகுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு  அவர்கள் பேரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.

4. முஹர்ரம் பிறை 1 முதல் 14 வரை ஹழரத் நெய்னா முஹம்மது ஸாஹிபு பாசிப்பட்டணம் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் கந்தூரி- காலை கத்முல் குர்ஆன் ஓதுதல், மாலை மௌலிது ஷரீபு ஓதுதல், இரவு மார்க்கப் பேருரை, பிறை 14 அன்று இரவு விசேஷ கொடி ஊர்வலம், மறுநாள் நேர்ச்சை விநியோகம்.

5. பிரதி வியாழன் பின்னேரம் வெள்ளி இரவு காதிரிய்யா திக்ரு மஜ்லிஸ் நடைபெறுகிறது.

7.  ஷஃபான் பிறை 15 அன்று 3 யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ ஓதுதல்.

8.   ரமலான் பிறை 1 முதல் 30 வரை முழுக்குர்ஆன் ஓதி   பிறை    27 அன்று தமாம் செய்து, நோன்பு வைக்க பிறை 27 அன்று முஹல்லா வாசிகளுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்தல். ரமலான் மாதம் முழுவதும் நோன்பாளிகள் நோன்பு திறக்க கஞ்சி ஏற்பாடு செய்தல்.

     பொது மையவாடி உண்டு.
 

Check Also

நகரளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பு!

அன்புடையீர், இறைவனின் சாந்தியும், சமாதானமும் நம் அனைவர்கள் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக!…