புதுப்பள்ளி:
மஸ்ஜிது என்ற அரபி சொல் சுஜுது என்ற அரபி மூல பதத்திலிருந்து வந்தது. ஆகவே பள்ளிவாசல் என்பது வல்ல அல்லாஹ்வை தொழுவதற்குரிய இடமாகும். அல்லாஹ்வை வணங்குவதற்குரிய இடத்தில் வீண்ப் பேச்சுக்களும், வீண் செயல்களும் செய்வது தடுக்கப்பட்டுள்ளது. அல்லாஹ்வின் கலாமாகிய குர்ஆனைக் கூட சப்தமாக ஓதுவது தடுக்கப்பட்டுள்ளது.
ஆகவே தக்வாவைக் கருத்தில் கொண்டு நமது முன்னோர்கள் நமதூரில் பள்ளியை கட்டும்போது உள் பள்ளி, வெளிப் பள்ளி என்று பிரித்துக் கட்டினார்கள். காயல் நகரிலுள்ள பள்ளிகள் இரு மினாராக்கள் கொண்டு கட்டப்பட்டுள்ளன. ஒளு செய்வதற்கென ஹவுளுகள் கட்டப்பட்டுள்ளன.
காயல்பட்டணம் பள்ளிவாசல்கள் அனைத்தும் சுன்னத்-வல்-ஜமாஅத் கொள்கையின் அடிப்படையில் ஷhபிய்யி மத்ஹபை பின்பற்றி நடப்பவர்களுக்காக அதன்படி வக்பு செய்யப்பட்டதாகும்.
காயல்பட்டணம் தைக்கா தெருவிலுள்ள புதுப்பள்ளி ஹிஜ்ரி 1212 ல் கட்டப்பட்டது. இப் பள்ளிக்கு அஸ்திவாரம் போட்டவர் நெல்லூர் நவாபு ஆவார். கீழக்கரை அப்துல் காதர் மரைக்கார் அவர்கள் பண உதவியுடன் முஹம்மது லெப்பை ஆலிம் அவர்கள் மேற்பார்வையில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு அவர்கள் மறைவிற்குப் பின் நடுவுளப்பா ஆலிம் என்ற முஹம்மது சுலைமான் லெப்பை ஆலிம் அவர்களின் மேற்பார்வையில் இப் பள்ளி கட்டி முடிக்கப்பட்டது. நகரில் ஜும்ஆ பிரிவினை ஏற்பட்டபோது அல்-ஜாமிவுல் அஸ்ஹர் கட்டப்படுவதற்கு முன் இரண்டாவது ஜும்ஆ இப் பள்ளியிலேயே நடந்து வந்தது.
இப் பள்ளியின் தென்புறத்தில் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபை மத்ரஸா உள்ளது.
1. முஹர்ரம் பிறை 1 முதல் 10 வரை செய்யிதினா ஹஸன், ஹுஸைன் ரலியல்லாஹு தஆலா அன்ஹுமா அவர்கள் பேரில் மௌலிது ஷரீபு ஓதுதல்.
2. முஹர்ரம் பிறை 6 அன்று ஹழரத் முஹம்மது லெப்பை அப்பா அவர்கள் பேரில் மர்தியா ஓதுதல்;.
3. ரபீயுல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேரில் சுபுஹான மௌலிது ஓதுதல்.
4. ரபீயுல் ஆகிர் பிறை 1 முதல் 11 வரை கௌதுல் அஃலம் முஹ்யித்தீன் ஆண்டவர்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.
5. ஜமாஅத்துல் ஆகிர் பிறை 1முதல் 10 வரை நாகூர் சாகுல் ஹமீது நாயகம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிபு ஓதுதல்.
6. ரஜப் பிறை 26 மாலை ரிஜ்வான் சங்கம் புதுப்பள்ளி சதுக்கையில் மிஃராஜ் மௌலிது (பிறை 27) இரவு மார்க்க சொற்பொழிவு ரஜப்பிறை 28 மாலை இமாமுனா ஷாஃபி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மௌலிது ஷரிபு – இரவு மார்க்க சொற்;;;பொழிவு
7. ஷஃபான் பிறை 15 அன்று இரவு பராஅத் இரவு 3யாஸீன் ஓதி தமாம் செய்து துஆ. ஷஃபான் பிறை 14 சின்னப்பா முகம்மது லெப்பை அப்பா ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்து மர்தியா ஓதுதல்.
8. ரமலான் பிறை 1 முதல் 30 வரை முழுக்குர்ஆன் ஷரிபு ஓதி பிறை 27; அன்று தமாம் செய்தல்;;. ஒவ்வொரு இரவும் தராவீஹ்ற்குப் பின் வித்ரியா ஷரிஃபு ஓதுதல். மாலை பொது மக்களுக்கு நோன்பு கஞ்சி ஊற்றி நோன்பு திறக்கவும் கஞ்சி குடிக்க ஊற்றல். ரமலான் பிறை 10 ஹழரத் அப்துல்லா லெப்பை ஆலிம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் கத்முல் குர்ஆன் ஓதி தமாம் செய்தல். ரமலான் பிறை 12 ல் பாத்திமா நாயகி ரலியல்லாஹு அன்ஹா அவர்களின் மீது தலை பாத்திஹா ஓதுதல். ரமலான் பிறை 17 ல் பத்ரு ஸஹாபாக்கள் திருநாமங்கள் ஓதியும் அன்னார்களின் பேரில் மௌலிது ஷரிஃபும் ஓதுதல். ரமலான் பிறை 18 ல் ஹழரத் லுகவி முகம்மது லெப்பை ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மர்தியா ஓதுதல். ரமலான் பிறை 23ல் ஹழரத் செய்யிதிஸ்மாயில் தங்கள் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மர்தியா ஓதுதல். ரமலான் பிறை 24ல் காயல்பட்டினம் ஸூபி ஹழரத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், தைக்கா ஜெய்னுலாப்தீன் அவர்கள் பேரில் கத்முல் குர்-ஆன் ஓதி தமாம் செய்தல்.ரமலான் பிறை 29 அன்று தஸ்பீஹ் தொழுகை சின்னஆலிம் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் பேரில் மர்தியா ஓதுதல்.
9. ஷவ்வால் பிறை 1 அன்று நோன்பு பெருநாள் தொழுகை மற்றும் தொழுகை முடிந்தவுடன் குத்;பா ஓதுதல்.
துல்ஹஜ் பிறை 10 அன்று ஹஜ் பெருநாள் தொழுகை மற்றும் பெருநாள் குத்;பா ஓததல். இரு பெருநாள் தொழுகைக்குப் பின்பும் அஹ்மதுல்லாஹ் பைத் ஓதி ஊர்வலமாக டங்கா முழங்க சாஹிப் அப்பா தைக்காவிற்கு சென்று ஜியாரத் செய்தல்.
10. புதுப்பள்ளி வளாகத்திலிருக்கும் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க சபையில் – புதுப்பள்ளி முகாமில் ஓவ்வொரு மாதமும் பிறை 15 ல் ஜலாலியா ராத்திபு நடைபெறும்.
11. முஸ்லீம்களுக்கான மைய வாடி உள்ளது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…