திருமண நிகாஹ் நடைமுறைகள்:
திருமணம் முடிக்கும் மாப்பிள்ளை பைத்து சொல்லி ஊர்வலமாக திருமணம் நடக்கும் மேடைக்கு அழைத்து வரப்படுவார். அங்கு இருக்கும் மாப்பிள்ளை, பெண் வீட்டாரின் சொந்த பந்தங்களிடம் நிகாஹ் புத்தகத்தில் சாட்சி கையொப்பங்கள் வாங்கப்படும். அத்துடன் மாப்பிள்ளையும், நிகாஹ் எழுதும் ஆலிம் அல்லது வேறு நபர்கள் கையெழுத்தும் வாங்கப்பட்டிருக்கும்.
திருமணத்திற்கு முன் சுன்னத்தாக குத்பா அரபியில் ஓதப்படும். அத்துடன் நிகாஹ் எழுதும் நபர் மாப்பிள்ளைக்கு கையை பிடித்து திருமண நிகாஹ் ஒப்பந்தத்தை அரபி மற்றும் தமிழில் சொல்லி அவரிடம் ஒப்புதல் வாங்குவார். அதைத் தொடர்ந்து திருமணத்தில் மணமக்களுக்காக துஆ அரபியில் ஓதப்படும்.பெண்ணிற்கு மஹராக முன்பு ரூ 800 அல்லது ரூ 1000 இருந்தது. தற்போது பணமாகவோ அல்லது நகையாகவோ கொடுக்கிறார்கள்.
தற்போதைய காலத்தில் குத்பா ஓதும் முன் வரவேற்புரை என்றும், ஆலிம்கள் மற்றும் உள்ளவர்களின் வாழ்த்துரை என்றும், நிகாஹ் முடிந்த பின் நன்றியுரை என்றும் நடத்தப்படுகிறது.
நார்ஷா இருப்பின் வந்திருந்தவர்களுக்கு விநியோகிக்கப்படும். அதன்பிறகு மாப்பிள்ளையை பெண் வீடு அல்லது கைபிடித்துவிடும் இடத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு பெண்ணின் தலைமுடியை சுன்னத்தான முறையாக பிடித்து துஆ ஓதப்படும். இதுவும் அரபியில் தான் இருக்கும். தலை முடியை பிடித்துக் கொடுப்பவர் பெண்ணின் மாமா. மாமா இல்லையெனில் மாப்பிள்ளையே பிடித்துக் கொள்வார்.
அதன்பின் பெண்ணிற்கு தாலி கட்டும் வைபவம் நடைபெறுகிறது. நாட்டு சம்பிரதாயப்படி பெண்ணிற்கு மாப்பிள்ளை தாலியை(தங்க செயினை) அணிவிப்பார். அத்துடன் ஒட்டுப் பணம் என்னும் காசுகளை பெண்ணின் முகத்தில் ஒட்டுவார். அதன்பின் பல்லாங்குழி இருவரும் விளையாடுவார்கள். சில வீடுகளில் ஒரு சொம்பில் மோதிரம் அல்லது வேறு பொருட்களை போட்டு அதில் இருவரும் கையை ஒருசேர விட்டு தேடி எடுக்கும்படி செய்வார்கள். இது எல்லாம் இஸ்லாமிய கிதாபுகளில் பெண், மாப்பிள்ளையின் வெட்கத்தை போக்க செய்யும் விளையாட்டுக்கள் என்று குறிக்கப்பட்டுள்ளது.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…