Home Uncategorized சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்
Uncategorized - October 28, 2010

சாத்துக்குடியின் மருத்துவ குணங்கள்

 

மஞ்சள் கலந்த பச்சை நிறத்தில் இந்தப் பழம் இருக்கும். சாத்துக்குடி, நாரத்தை, ஆரஞ்சு வகையைச் சார்ந்தது. தினமும் இரண்டு பழங்கள் சாப்பிடுவது நல்லது.
 
நோயுற்றவர்களுக்கு
 
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாகும். உடலுக்கு வலு கொடுக்கும். சாத்துகுடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
 
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது.  எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
 
இரத்த விருத்திக்கு
 
சிலர் எப்போதும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது வேலை செய்தாலும், அதிகமாக அசதி உண்டாவதாகக் கூறுவார்கள். கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும்.
 
இவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி வீதம் சாறு எடுத்துக் கொடுத்து வந்தால் இரத்தம் விருத்தியாகும். உடல் அசதி நீங்கும்.
 
இரத்தத்தில் சிவப்பணுக்களின் (ஹீமோ குளோபின்) எண்ணிக்கை குறைவதால் இரத்தச் சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. நமது நாட்டில் இரத்தச் சோகையால் 67 சதவிகிதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.
 
எலும்புகள் வலுவடைய
 
சிலருக்கு இலேசாக அடிபட்டால் கூட எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவற்று காணப்படும். இதற்குக் காரணம் கால்சியச் சத்து குறைபாடே ஆகும். இவர்கள்  அதிக அளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவடையும்.
 
மலச்சிக்கல் தீர
 
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம் என்பதை நாம்  அறிந்துள்ளோம் . மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
 
நன்கு பசியைத் தூண்ட
 
பசியில்லாமல் சிலர் அவதியுறுவார்கள். இவர்களின் வயிறு எப்போதும் நிரம்பி உள்ளது போல் தோன்றும். சாத்துக்குடி பழத்தை தினமும் உண்டு வந்தால் சீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை உண்டாக்கும்.
 
முதியோர்களுக்கு
 
வயது முதிர்ந்தவர்களுக்கு உணவு சரியாக செரிக்காமல் மலச்சிக்கல் உண்டாகும். இதனால் உடல் அசதி, சோர்வு உண்டாகும். இவை நீங்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும். 
 
குழந்தைகளுக்கு
 
குழந்தைகளின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது  கால்சியம் சத்துதான். ஒரு வயதுக்குமேல் உள்ள குழந்தைகளுக்கு கால்சியச் சத்து அதிகம் தேவை. சாத்துக்குடியில் அதிகளவு கால்சியச் சத்து இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடி சாறு கொடுப்பது மிகவும் நல்லது.
 
பெண்களுக்கு
 
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கு எலும்புகள், எலும்பு மூட்டுகள் தேய்மானம் அடையும். மேலும் மாதவிலக்கு நிற்கும் காலமான (40-45 வயதுகள்) மெனோபாஸ் காலங்களில் பெண்களுக்கு சத்துக் குறைவால் பல இன்னல்கள் உண்டாகும். இந்தக் குறை நீங்க பெண்கள் தினமும் சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…