பாலப்பா வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹு
மொகுதூம் பள்ளியில் அடங்கப்பட்டிருக்கும் இவர்கள் ஹழரத் உமர் வலி நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களின் உஸ்தாதும் ஷெய்குமாவார்கள். ஹிஜ்ரி 1185 ரபியுல் அவ்வல் பிறை 15 அவர்கள் மறைந்த தினம் ஆகும் இவர்களுடைய ரவ்லா ஷரீப் தற்போது காணப்படும் தோற்றத்தில் பாபா ஒலிதாத் மஸ்தான் ஸாஹிப் ரலியல்லாஹூ தஆலா அன்ஹூ அவர்களால் 12.01.1952 அன்று கட்டிமுடிக்கப்பட்டது
இவர்கள் காலத்தில் முனிவர் ஒருவர் வானில் தரையை நோக்கி பார்த்து பறந்து கொண்டிருந்ததைப் பார்த்த மக்கள் மகானிடம் தெரிவிக்கவே, அவர்கள் தாங்கள் அணிந்திருந்த காலணி கட்டையை வானை நோக்கி வீசியதும் அக்கட்டையானது அவனை மகான் அவர்களிடம் கொண்டு வந்து சேர்த்தது. அவர்கள் அவனிடம், காடுகளில்தான் பூமியைப் பார்த்துப் பறக்கணும், ஊரின் நடுவே செல்லும் போது வானத்தைப் பார்த்துதான் பறக்க வேண்டும் என்பது உனக்குத் தெரியாதா? உனக்கு படித்து தந்தவரை அழைத்துவா என்று கட்டளையிட அவன் சென்று தனது குருவை அழைத்து வந்தான்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…