Home Uncategorized பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்
Uncategorized - பொது - May 14, 2011

பரசிடமோல் மாத்திரைகளை உட்கொண்டால் இரத்தப் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது: ஆய்வில் தகவல்

பரசிடமோல் மாத்திரைகளை வழமையாகப் பாவிப்பதன் மூலம் இரத்தப் புற்று நோய் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக ஆராய்ச்சிகள் மூலம் தெரியவந்துள்ளது.

இந்த மாத்திரைகளில் acetaminophen என்ற ஒரு வகை இரசாயனம் உள்ளது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஒரு காரணியாக இருக்கலாம் என்று இனம் காணப்பட்டுள்ளது. இந்த மாத்திரையை பயன்படுத்தும் பலருக்கு புற்றுநோய் ஏற்பட இதுவே காரணமாகவும் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது.

அமெரிக்காவிலும் ஏனைய பல உலக நாடுகளிலும் உள்ள இலட்சக்கணக்கானவர்களை இது ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. சிறிய பிரச்சினைகளுக்காக எந்தவிதத் தயக்கமும் இன்றி அநேகமான மக்கள் பாவித்து வரும் ஒரு மாத்திரையே பரசிடமோல் ஆகும்.

புற்றுநோய்க்கும் வலி நிவாரணிகளுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றிய ஆய்வொன்றிலேயே இந்த விடயம் தெரியவந்துள்ளது. இரத்தப் புற்றுநோய் குறித்து தனி நபர்கள் மத்தியில் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த முடிவு தெரியவந்துள்ளது.

பெரும் எண்ணிக்கையானவர்கள் மத்தியில் நீண்ட கால அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. வலி நிவாரணிகளை அளவுக்கு அதிகம் உட்கொள்வது ஏனைய பல பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் என்பது ஏற்கனவே கண்டறியப்பட்ட உண்மையாகும்.

பரசிடமோல் உலகில் மிகவும் பொதுவான மற்றும் பிரபலமான வலி நிவாரணியாகும். 1953ல் அமெரிக்காவில் இது முதன் முதலாக விற்பனைக்கு வந்தது.
நன்றி: லங்காசிறி இணையதளம் 

நன்றி: லங்காசிறி இணையதளம் நன்றி: லங்காசிறி இணையதளம்நன்றி: லங்காசிறி இணையதளம்  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…