பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு பள்ளி
புதிய பள்ளிவாசல்:
காயல்பட்டினம் கே.எம்.டி. மருத்துவமனையை ஒட்டி விரிவாக்கம் பெற்றுள்ள நமதூரின் ஒரு பகுதி காயிதேமில்லத் நகர். இப்பகுதியில் சுமார் 23 வருடங்களுக்கு முன், இப்பகுதி நிலங்ளுக்கு சொந்தக்காரரான காயல்பட்டினம் அப்பாபள்ளித் தெருவைச் சார்ந்த மறைந்த பி.டி.எஸ்.இப்றாஹீம் அவர்கள் இந்த நிலத்தில் சுன்னத் வல் ஜமாஅத் கொள்கை அடிப்படையில் பள்ளி ஒன்று கட்டப்பட்டு அதன் அடிப்படையிலேயே வணக்கவழிபாடுகள் நடத்தப்பட வேண்டும் என்ற நன்நோக்கில், பள்ளிக்குரிய நிலத்தை சுன்னத் வல் ஜமாஅத் கொள்கையின்படி செயல்பட்டு வரும் காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – குத்பா பெரிய பள்ளி நிர்வாகத்திற்கு தனது நிலத்தில் 13 சென்ட் இடத்தை பள்ளிவாசல் கட்டுவதற்காக ஒப்படைத்தார்கள். அப்பள்ளிக்கு மரைக்கார் பள்ளியில் மறைந்து வாழும் மகான் சுலைமான் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆசிரியப் பெருந்தகையான பெரிய ஷம்சுத்தீன் வலியுல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் பெயரை சூட்ட வேண்டும் என்றும் அதில் குறிப்பிட்டிருந்தார்.இவர்களின் அடக்கஸ்தலம் காயல்பட்டணம் காதிரிய்யா கொடிமர சிறுநெய்னார் பள்ளியில் உள்ளது. இவர்களின் பரக்கத்தான பெயரை தமது மகனுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள் மகான் சுலைமான் வலியுல்லாஹ் அவர்கள். இவர்களின் அடக்கஸ்தலமும் அதே பள்ளியில்தான் உள்ளது.
அப்பகுதியில் குடியிருப்புகள் பெருகிடவே பள்ளிவாசலின் தேவை உணரப்பட்டது. அதன் பின் அப்பகுதி மக்கள், தனவந்தர்கள் மற்றும் வணிகர்களின் பொருளுதவியுடன் பள்ளிவாசல் கட்டி முடிக்கப்பட்டு, 07.03.2011 அன்று திறப்பு விழா கண்டது. அன்று காலை 11.00 மணிக்குத் துவங்கியது. காயல்பட்டினம் மஹ்ழரா அரபிக்கல்லூரியின் முதல்வர் மவ்லவீ எஸ்.எஸ்.கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ பள்ளிவாசலைத் திறந்து வைத்து வக்ஃப் சாசனத்தை வாசிக்க, பள்ளி வக்ஃப் செய்யப்பட்டது. பின்னர், துவக்கமாக அனைவரும் இரண்டு ரக்அத் பள்ளி காணிக்கைத் தொழுகை (தஹிய்யத்துல் மஸ்ஜித்) தொழுதனர்.
இப்பள்ளிவாசல் இஸ்லாத்தில் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் ஷாஃபி மத்ஹப் அடிப்படையில் வணக்க வழிபாடுகள் நடத்துவதற்காக வக்பு செய்யப்பட்டது. குத்பா பெரிய பள்ளிவாசலில் நடைபெறும் அனைத்துக் கிரிகைகளும் இப்பள்ளியில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இப்பள்ளி குத்பா பெரிய பள்ளியின் நிர்வாகத்திற்கு கட்டுப்பட்ட பள்ளியாகும்.
முதல் தொழுகை:
பின்னர் தொழுகைக்கான முதல் அழைப்போசையை (பாங்கு) அம்பலம் மஹ்மூத் நெய்னா நிகழ்த்தினார். முதல் தொழுகையை மவ்லவீ கலந்தர் மஸ்தான் ரஹ்மானீ வழிநடத்தினார்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…