பால்காரியின் நேர்மை
கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு நாள் இரவு ஊரைச் சுற்றிப் பார்த்து வந்தார்கள். களைப்பாக இருந்ததால் சற்று நேரம் ஓய்வெடுப்பதற்காக ஒரு வீட்டின் ஓரத்தில் ஒதுங்கி நின்றார்கள். அப்போது அவ்வீட்டினுள் வசிக்கும் ஒரு தாய்க்கும் மகளுக்கும் நடந்த உரையாடலை கேட்க நேரிட்டது. தாய் தனது மகளிடம் மகளே! நாம் கறந்து வைத்திருக்கும் பாலில் கொஞ்சம் தண்ணீரை கலந்து விடு. அப்போதுதான் அதை விற்று அதிகம் பணம் சம்பாதிக்கலாம் என்றாள். அதற்கு மகள் 'பாலில் தண்ணீர் கலீபா உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஆகவே நான் அவ்வாறு செய்ய மாட்டேன்' என்று கூற, 'நீ பாலில் தண்ணீர் கலப்பதை இந்த நள்ளிரவு நேரத்தில் உமர் வந்து பார்க்கவா போகிறார்? என்று தாயார் கேட்க, 'உமர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்கள் பார்க்காவிட்டால் என்ன? கறுப்பு எறும்புகள் இருட்டில் ஊர்ந்து செல்வதை பார்க்கும் சக்தி படைத்த அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறானே.அவனுக்கு நான் பயப்பட வேண்டாமா? என்று மகள் பதிலுரைத்தாள்.
இதைக் கேட்ட உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மகிழ்வடைந்தார்கள். மறுநாள் காலை அவளை தமது அவைக்கு அழைத்து அவள் இறையச்சத்தை பாராட்டி தன் மகனுக்கே திருமணம் செய்து வைத்தார்கள்.
நமது எச்செயலையும் அல்லாஹ் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணத்துடன் ஒரு செயலை செய்வோமானால் தவறான செயல் செய்ய மனம் வராது. இந்த இறையச்சம் தான் உங்களை உயரச் செய்து சுவர்;க்கத்தில் சேர்க்கும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…