ஓத வைத்தல்
பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதி கொடுப்பதற்கென்று வீடுகளிலும், தைக்காக்களிலும், பள்ளிவாசல்களிலும் குர்ஆன் மத்ரஸாக்கள் உள்ளன.
இந்த மத்ரஸாக்களில் ஆரம்பமாக குழந்தைகளை அரபி மொழி எழுத்துக்களை கற்றுக் கொடுக்க அனுப்புவார்கள். ஓதிக் கொடுக்கும் நபர்களுக்கு லெப்பைகள் என்று பெயர். மரப்பலகைகளில் மரப்பிசின் கொண்டு தயாரிக்கப்பட்ட கறுப்பு மையினால் எழுத்துக்களை எழுதி ஓதிக் கொடுப்பார்கள். தற்போது எஸ்ஸர்னல் குர்ஆன் என்ற புத்தகம் மூலம் ஓதிக் கொடுக்கிறார்கள். காலையில் பள்ளிக்கூடத்திற்கு போகும் முன்பும், மாலைல் பள்ளிக் கூடம் விட்டு வந்த பின்பும் பிள்ளைகள் ஓதச் செல்வார்கள். முதலில் வந்த பிள்ளைகளுக்கு முதலில் ஓதிக் கொடுக்கப்படும். அதன்பின் அவர்களாகவே அதை ஓதிக் கொண்டிருக்க வேண்டும். திடீரென லெப்பை வந்து அவரை அழைத்து பாடம் கேட்பார்கள். பாடம் கொடுக்க கொடுக்க அடுத்த பாடங்களுக்கு சென்று ஓதிக் கொடுக்கப்படும். அரபி எழுத்துக்களை தனியாகவும், கூட்டாகவும் ஓதிப் பழகியதை 'எழுத்து பிடிபட்டுவிட்டது' என்று சொல்வார்கள். அதன் பின் குர்ஆன் ஓத கற்றுக் கொடுப்பார்கள்.
இந்தக் குர்ஆனை முதன்முதலில் பாத்திஹா ஸூராவுடன் ஆரம்பிப்பார்கள். இதை ஓதக் கற்றுக் கொடுப்பதற்கு 'பிள்ளையை ஓத வைக்கப் போகிறேன்'; என்று சொல்வார்கள். இதற்காக பிள்ளைக்கு புதிய சட்டை, வேஷ்டி உடுத்து தொப்பி போட்டு லெப்பையிடம் அனுப்புவார்கள். தாயாரும் மற்ற சொந்தங்களும் கூட செல்வார்கள். இதற்காக ஓதிக் கொடுக்கும் நபருக்கு ஹதியா பணமாக கொடுக்கப்படுகிறது. அந்த மத்ரஸாவில் ஓதும் பிள்ளைகளுக்கு நார்ஷாவும், லெப்பைக்கு அதிகமாக நார்ஷாவும் கொடுக்கப்படுகிறது.
அதன்பின் அம்ம ஜிஸ்விலிருந்து பாடங்களை ஆரம்பித்து 5ம் ஜிஸ்வு வரை ஓதிக் கொடுத்து பின்னர் அலிப்லாம் மீம் ஜிஸ்விலிருந்து ஆரம்பிப்பார்கள். பிள்ளை 3ம் ஜிஸ்வு, யாஸீன் ஸூரா மற்றும் குறிப்பிட்ட ஸூராக்களை ஓதும்போது அதற்கென்று வட்டா லெப்பைக்கு கொடுக்கப்பட்டு நார்ஷாவும் கொடுக்கப்படும். குர்ஆன் முழுவதையும் ஓதி முடித்ததும் அதற்கு லெப்பை பெரிய அளவில் ஹதியாவும், துணிகளும் கொடுப்பார்கள். சில வீட்டில் பாச்சோறு செய்தும், இன்னும் சில வீடுகளில் மற்ற பண்டங்களையும் சொந்தபந்தங்களுக்கு கொடுத்தனுப்புவார்கள். பெரும்பாலும் அரபா தினத்தில் இவ்விசேஷங்கள் நடைபெறுவதாக அமைத்துக் கொள்வார்கள். அரபா நாளுக்கு நீண்ட காலமிருப்பின் ஏதோ ஒரு நாளில் இதை செய்வார்கள்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…