தொழுகையில் ஓத வேண்டிய சூராக்கள்
முதலாவது மற்றும் இரண்டாவது ரக்அத்துகளில் பாத்திஹா சூராவிற்குப் பின் ஏதேனும் மூன்று ஆயத்துக்களை ஓதுவது இமாமுக்கும், தனியே தொழுபவருக்கும் சுன்னத்தாகும்.
இருப்பினும் தொழுகையில் நீளமான ஆயத்துகளை ஓதுவதை விட, சிறிய சூராவாயினும் அதை முழுமையாக ஓதுவதும் முதல் ரக்அத்தில் ஓதிய ஸூராவை விட இரண்டாவது ரக்அத்தில் சிறிய ஸூராவை ஓதுவதும், குர்ஆனின் வரிசைக்கேற்ப முதல் ரக்அத்தில் முன்னுள்ள சூராவையம் இரண்டாவது ரக்அத்தில் அதன் பின்னர் உள்ள சூராவையும் ஓதுவதும், முதலாவது ஓதிய ஸூராவிற்கு அடுத்த ஸூராவை ஓதுவதும் ஸுன்னத்தாகும். எனினும் குறிப்பிட்ட சூராக்களை ஓதவேண்டும் என்று விபரிக்கப்பட்டுள்ள தொழுகைகள் இச்சட்டத்திலிருந்து நீங்கியவைகளாகும்.
ஸுப்ஹு மற்றும் ளுஹர் தொழுகைகளில் 'ஹுஜுராத்' முதல் 'அம்ம' வரையிலும் உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு ஸூராவை ஓதுவதும் அஸர், இஷா தொழுகைகளில் 'அம்ம' முதல் வள்ளுஹா' வரை உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு சூராவை ஓதுவதும் மக்ரிஃப தொழுகையில் வழ்ளுஹா' முதல் 'அந்நாஸ்' வரை உள்ள சூராக்களில் ஏதாவது ஒரு சூராவை ஓதுவதும் ஸுன்னத்தாகும். இவைகளை விடச் சிறிய சூராவை ஓதவேண்டுமென மஃமூம்கள் விரும்பினால் அவ்வாறு சிறிய சூராவை ஓதி தொழவைப்பது இமாமுக்கு சுன்னத்தாகும்.
குறிப்பிட்ட ஸூராக்கள்:
ஜும்ஆ தொழுகையிலும், அதன் இஷாத் தொழுகையிலும் 'ஜும்ஆ-முனாஃபிக்கீன்' ஆகிய சூராக்களை ஓதுவதும், ஜும்ஆவின் ஸுப்ஹு தொழுகையில் 'ஸஜ்தா-தஹ்ரு' ஆகிய ஸூராக்களை ஓதுவதும் ஸுன்னத்தாகும்.
வியாழன் மாலை வெள்ளியிரவு மக்ரிப் தொழுகையிலும் எல்லா நாட்களின் மக்ரிப் மற்றும் ஸுப்ஹுடைய ஸுன்னத் தொழுகையிலும் இஸ்திகாரா, தவாஃப், இஹ்ராம், தஹிய்யத்துல் மஸ்ஜித் போன்ற சுன்னத்தான தொழுகைகளிலும் 'காபிரூன்-இக்லாஸ்' ஆகிய இரு ஸூராக்களை ஓதுவது ஸுன்னத்தாகும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…