Home வழக்கங்கள் உறவினர்கள்
வழக்கங்கள் - October 25, 2010

உறவினர்கள்

குடும்பம் என்று வந்துவிட்டால் பல்வேறு நபர்கள் இருப்பார்கள். அவர்களின் உறவு முறை ஒன்றாகவே இருந்தாலும் ஒவ்வொரு ஊரிலும் அதை அழைக்கும் விதம் பல்வேறாக இருக்கின்றன. காயல்நகரில் அந்த உறவு முறைகளை அழைக்கும் விதத்தை இங்கு குறிப்பிடுகிறோம்.
 

உம்மா – தாய்

வாப்பா-தந்தை

கம்மா-தாயைப் பெற்ற தாயார்

மாமி-பெண்சாதியின் தாயார்,

பூட்டி-தாயைப் பெற்ற அம்மாவின் அம்மா

மாமி-மாமாவின் மனைவி,

சாச்சி-தாயாரின் இளைய சகோதரி

சாச்சப்பா-தாயாரின் இளைய சகோதரியின் கணவர், தந்தையின் தம்பி

கண்ணப்பா-தாயைப் பெற்ற தந்தை

கண்ணும்மா-தாயைப் பெற்ற தாயார்

வாப்பிச்சா- தந்தையைப் பெற்ற தாயார்

வாப்பிச்சட்டப்பா-தந்தையைப் பெற்ற தந்தை

காக்கா-அண்ணன்

தம்பி,

தங்கச்சி-தங்கை

லாத்தா-அக்கா

மச்சான்- அக்கா கணவர்

மச்சி-அண்ணன் மனைவி

மச்சினன்-மனைவியின் தம்பி

பெரிப்பா-தந்தையின் மூத்த சகோதரர்

பெருமா-தந்தையின் மூத்த சகோதரர் மனைவி,தாயாரின் மூத்த சகோதரி

ஓட்டி-

ஒப்பாட்டி

பாட்டன்-

பூட்டன்-

பேரன்-மகன்,மகளின் மகன்

பேத்தி-மகன்,மகளின் மகள்

கொளுந்தியா-மனைவியின் தங்கை

Check Also

திருச்செந்தூர் – காரைக்கால் புதிய PRTC பேருந்து சேவை தொடக்கம்!

பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் இனிய செய்தி! புதுச்சேரி அரசு பேருந்து போக்குவரத்து கழகம் (PR…