ஷைத்தான் கொண்டுள்ள ஆசை!
நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனின் அனுமதிப்படி மக்களை கப்பலில் ஏற்றிவிட்டு அவர்களும் கப்பலில் ஏறியபோது, அங்கு ஒரு வயோதிகன் அமர்ந்திருப்பதைக் கண்டார்கள். அவனை அவர்கள் முன்னர் பார்த்திராததால், நீர் ஏன் இதில் ஏறினீர்? உம்மை எவர் இதில் ஏற்றிக் கொள்ள அனுமதித்தார்?' என்று கேட்டார்கள்.
 	அதற்கு அந்தக் கிழவன்,' 'நானாகவே இதில் ஏறிக் கொண்டேன். இங்குள்ளவர்களின் இதயங்களைக் கெடுப்பதற்காக இங்கு வந்துள்ளேன். அவர்களின் உடல் உம்மோடு இருப்பினும் உள்ளம் என்னோடுதான் இருக்கும் என்று கூறினான்.
 	 
அவனுடைய கூற்று அவன் இப்லீஸ் என்பதை நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வெளிப்படுத்தி விட்டது. அவனைக் கப்பலிலிருந்து வெளியேறுமாறு சப்தமிட்டார்கள். அவன் அதனைப் பொருட்படுத்தவில்லை.
'நான் ஐந்து பொருட்களால் மக்களை அழிப்பேன். அவற்றில் மூன்றை நான் உம்மிடம் கூறுவேன். இரண்டைக் கூற மாட்டேன்' என்று சொன்னான்.
அப்பொழுது இறைவன் நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை நோக்கி, 'அவன் உம்மிடம் கூறுவதாக சொன்ன மூன்றை அவனிடமிருந்து தெரிந்து கொள்ளத் தேவையில்லை. அவன் உம்மிடம் கூற மாட்டேன் என்று சொன்ன அந்த இரண்டைப் பற்றி அவனிடம் கேளும்' என்று பணித்தான்.
அவ்விதமே நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அவனிடம் கேட்க அவன் அவற்றில் ஒன்று பெருமை. பெருமையால்தான் இறைமுனிவுக்கு ஆளாகி சுவனத்தை விட்டு விரட்டப்பட்டேன். மற்றொன்று பேராசை. பேராசையை நான் ஆதத்தின் இதயத்தில் தூவி அவரை வழி கெடுத்தேன்' என்று பதில் கூறினான்.
 	குழந்தைகளே! ஆகவே நாம் எதற்கும் பெருமை கொள்ளக் கூடாது. நம்முடைய செயல் ஒன்றும் இல்லை. எல்லாம் அல்லாஹ்வின் செயல் என்று எண்ணம் கொண்டு பெருமைக்குரியவன் அல்லாஹ் என்ற எண்ணத்தோடு செயல்பட வேண்டும். அளவுக்கதிகமாக ஆசைப் படுவது மிகக் கெட்டது. வழி கேட்டிற்கு காரணமாகிவிடும். எனவே அதை மனதை விட்டு ஒழித்து விட வேண்டும். அல்லாஹ் கொடுக்க நாடியதை யாராலும் தடுக்க முடியாது. அவன் தடுத்ததை யாராலும் கொடுக்க முடியாது என்ற எண்ணமிருப்பின் நமக்குள்ளது நமக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை வரும். பேராசை வராது. ஆகவே நம் மனதை நல்ல மனசாக பழக்கிக் கொண்டு அல்லாஹ்வின் பொருத்தத்தைப் பெற்றவர்களாகுவோம்.
 	
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்
காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…
            
        

