Home Uncategorized செய்குஹுஸைன் பள்ளி

செய்குஹுஸைன் பள்ளி

                                                    
      ஹஜ்ரத் செய்கு ஹுஸைன் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அடங்கியுள்ள பகுதியையொட்டி இப்பள்ளி கட்டப்பட்டுள்ளது. தூத்துக்குடி-திருச்செந்தூர் நெடுஞ்சாலையில் ஐக்கிய விளையாட்டுச் சங்கத்தையொட்டி இப்பள்ளி அமைந்துள்ளது.
     மலையாள மகாராஜா மகள் சுகமில்லாமல் பலராலும் வைத்தியம் செய்ய இயலாத நிலையில் இப்பள்ளியில் இருந்த வைத்தியர் வைத்தியம் செய்து குணப்படுத்தியதால் அந்த மகராஜரால் இப்பள்ளி கட்டப்பட்டது.இவர்கள் பெயர் செய்யிது முஹம்மது வலி ரலியல்லாஹு அன்ஹு என்ற பெரிய வைத்தியரப்பா. குடிமக்கள் வழியைச் சார்ந்தவர்கள்.
   இவர்கள்தான் புலியாணத்தை(ரசம்) கண்டுபிடித்த மகான் ஆவார்கள். இவர்களின் அடக்கவிடம் இப் பள்ளி வளாகத்திலேயே உள்ளது. 2006- ம் வருடம் செய்கு ஹுஸைன் வலி நாயகத்தின் கந்தூரி விழாவிற்காக துப்புரவு பணிக்காக தோண்டும் போது மேற்படி மகான் அவர்களின் உடல் கபனோடு அப்படியே இருந்தது. இதை பொதுமக்கள் பார்த்தனர்.

Check Also

ஊண்டி செய்யிது முஹம்மது ஆலிம் பாகவி காதிரி ஸூபி – Woondi ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு

ஊண்டி செய்யிது முகம்மது ஆலிம் ரழியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் ஹிஜ்ரி 1359 ஸபர் பிறை 22 திங்க…