நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கை சுருக்கம்:
இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்கள் மற்றும் ரஸூல்மார்களில் இறுதியாக வந்தவர்கள் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆவார்கள். அப்துல்லாஹ் ரலியல்லாஹு அன்ஹு ஆமினா ரலியல்லாஹு அன்ஹா ஆகிய தம்பதிகளின் மகனாக பனூஹாஷிம் கிளையில் கி.பி.571 ஏப்ரல் திங்கள் 20 (ரபியுல் அவ்வல் 12)ஆம் நாள் திங்கட்கிழமை பிறந்தார்கள்.
தம் தாயின் வயிற்றிலிருக்கும்போது தந்தையையும், ஆறாவது வயதில் தாயையும், எட்டாவது வயதில் தம்மை வளர்த்து வந்த பாட்டனார் அப்துல் முத்தலிப் அவர்களையும் இழந்த பின்பு இளமைப் பருவம் வரை பெரிய தகப்பனார் அபூதாலிப் அவர்களின் அரவணைப்பில் வளர்ந்து வந்தார்கள். நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சிறு பருவத்தில் இயற்கையாகவே குழந்தை விளையாட்டுக்களையும், வீண் பேச்சுக்களையும் தவிர்த்திருந்தார்கள். சின்னறு வயதில் கூட தொழு உருவங்களை ஏறிட்டுப் பார்த்ததில்லை. வயது ஏற ஏற கண்ணியம், நாணயளம், நம்பிக்கை, உண்மை போன்ற சிறப்பியல்புகளை இவர்கள் ஒருங்கே பெற்றார்கள். மக்கமாநகர் மக்கள் உண்மையாளர்(அஸ்ஸாதிக்), நம்பிக்கையாளர் (அல் அமீன்) என்னும் புகழ்ப்பெயர்களை இவர்களுக்கு சூட்டி மகிழ்ந்தார்கள். கதீஜா அம்மையாரைத் தமது இருத்தி ஐந்தாம் வயதில் திருமணம் முடித்தார்கள்.(கி.பி. 610 ஆகஸ்ட் 22) ரமலான் பிறை இருத்தி ஏழில் நுபுவ்வத்தைப் பெற்று அகில மக்கள் அனைவருக்கும் நபியாக அனுப்பப்பட்டார்கள்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஐம்பதாவது வயதில் தமது உடலோடும், பூரண உணர்வோடும் மிஃராஜ் சென்று தொழுகையைப் பெற்று வந்தார்கள். ஐம்பத்து மூன்றாவது வயதில் (கி.பி. 622 செப்டம்பர் 9) தம் தோழர் அபூபக்கர் சித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன், தாம் பிறந்து வளர்ந்த மக்கா நகரைத் துறந்து மதீனாவிற்கு ஹிஜ்ரத் சென்றார்கள். மதீனா நகர வாழ்வின் ஆரம்பத்தில் பல்வேறு போர்க்களங்களை சந்தித்தார்கள். எனினும் மாநபியின் மதீனா வாழ்வு மகத்தானதாகவும், ஒளிமயமானதாகவும் காட்சி அளிக்கிறது. பரிபூரணமான மார்க்கச் சட்டத்தைப் பெற்றுத் தந்ததும் இஸ்லாம் பல்வேறு திசைகளுக்கும் பரவியதும் மதீனா வாழ்வில்தான். ஹிஜ்ரி பத்தாம் ஆண்டில் தம் தோழர்களுட்ன இறுதி ஹஜ்ஜை நிறைவு செய்து, மினாவில் கூடியிருந்த 1,24,000 மக்களிடம் இறுதிப் பேருரை ஒன்றை ஆற்றினார்கள்.
ஹிஜ்ரி 11ம் ஆண்டு ரபியுல் அவ்வல் பிறை 12 (கி.பி.632 ஜூன் 8) திங்கள் கிழமையன்று 'அல்லாஹ்வாகிய மேலான நண்பனுடன்' என்று மும்முறை கூறியவர்களாக இறைவன்பால் ஏகினார்கள். ஸல்லல்லாஹு அலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…