Home Uncategorized மனப் பக்குவம் பெற வேண்டுமா?
Uncategorized - பொது - July 5, 2011

மனப் பக்குவம் பெற வேண்டுமா?

கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் ஒருவர் வந்து தீட்சை (முரீது) கேட்டார். அப்போது அவர்கள் 'நீங்கள் மூன்று நாட்கள் நோன்பு வைக்க வேண்டும். அதுவும் ஹராமான உணவு கலந்து விடக் கூடாது. நினைவிருக்கட்டும்' என்றார்கள்.

அந்த மனிதரும் திரும்பிச் சென்று 30 நாட்கள் கழித்து வந்து ஹழ்ரத் அவர்களே! தாங்கள் கூறியபடி நான் மூன்று நாட்கள் நோன்பு வைத்து விட்டேன் என்று கூறினார்.

ஹழ்ரத் கௌதுல் அஃலம் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், நண்பரே! மூன்று நாட்கள் நோன்பு வைக்க முப்பது நாட்கள் ஏன் பிடித்தது?' என வினவினார்கள்.

'பெரியார் அவர்களே! தாங்கள் கூறியபடி 27 நாட்கள் ஹலாலான உணவைத் தேடி அலைந்தேன். கடைசியில் தண்ணீர்தான் ஹலாலான உணவு என அறிந்து கொண்டேன். ஹராம் எதையும் அதில் கலக்க முடியாது. அதைக் கடன் கூட கொடுப்பதில்லை. எங்கும் தாராளமாக கிடைக்கும். எனவே நான் ஸஹ்ர், இப்தார் இரண்டுக்கும் மூன்று நாட்கள் வெறும் பச்சைத் தண்ணீர் வைத்துக் கொண்டே நோன்பு வைத்தேன்' என்றார்கள்.

கௌதுல் அஃலம் அவர்கள் மிக மகிழ்ச்சிக் கொண்டு கையேந்தி துஆ கேட்டார்கள். வானம் இடித்தது, பூமி நடுங்கியது. அவர்'கள் துஆ ஒப்புக் கொள்ளப்பட்டது.

நண்பரே! நீங்கள் பக்குவம் பெற்று விட்டீர்கள் . நீங்கள் போய் வரலாம் என்று கூறி அனுப்பி விட்டார்கள்.

Check Also

காயல்பட்டினத்திற்கு மிக அருக சர்வதேச விமான நிலையமாக மாறப்போகும் தூத்துக்குடி ஏர்போர்ட்

தூத்துக்குடி: தமிழகத்தின் முக்கிய தொழில் மற்றும் துறைமுக நகரமாக விளங்கும் தூத்துக்குடி, இப…