Home Uncategorized நோன்பின் சுன்னத்துகள்
Uncategorized - பொது - April 24, 2011

நோன்பின் சுன்னத்துகள்

1. ஸஹர் செய்வது (ஸஹருடைய நேரமாகிறது இரவுக்கு மேல் ஆரம்பமாகி சுப்ஹு வக்து வருவதற்கு 20 நிமிடங்களுக்கு முன்னால் முடிகிறது)

2. பஜ்ரு உதயமாவதை பயப்படாமல் இருக்கும் காலமெல்லாம் ஸஹரை பிற்படுத்துவது.

3. சூரியன் மறைந்தது உறுதியாகிவிட்டால் உடனடியாக நோன்பு திறப்பதின் மீது விரைந்து கொள்வது.

4. மூன்று பேரீத்தம்பழம் அல்லது மூன்று திராட்சை பழம் அல்லது மூன்று மிடர் தண்ணீரைக் கொண்டு நோன்பு திறப்பது.

5. நோன்பு திறந்தவுடன் 'அல்லாஹும்ம லக ஸும்து வபிக ஆமன்து வ அலைக்க தவக்கல்து வஅலா ரிஜ்கிக அப்தர்து, பஃதக்ப்பல் மின்னீ'- இறைவா! உனக்காக நோன்பு வைத்தேன். உன்னையே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய ரிஸ்கின் மீதே நோன்பு திறந்தேன். எனது நோன்பை நீ ஏற்றுக் கொள்வாயாக! என்று துஆ ஓதுவது.

6. மற்றவர்களுக்கும் நோன்பு திறக்க கொடுப்பது.

7. ஹைலு நிபாஸ், ஜனாபத் போன்றவற்றை விட்டும் சுத்தமாவதற்காக பஜ்ருக்கு முன்னால் குளிப்பது.

8. பகல் நேரத்தில் ஆகாரத்தின் மீது ஆசை கொள்வதை விட்டும், வாசனைப் பொருட்களை நுகர்வதை விட்டும் தன்னை தடுத்துக் கொள்வது.

9. ரமலான் பிந்திய பத்தில் அதிகமாக ஸதகா கொடுப்பதும், தன் குடும்பத்தின் மீது விசாலமாக செலவு செய்வதும், சொந்தக்காரர்கள் அக்கம்பக்கத்தவர்கள் மீது உபகாரம் செய்வதும் சுன்னத்தாகும்.

10. குர்ஆனை அதிகமாக ஓதுவது.

11. அதிகமாக இபாதத்து செய்வது.

12. ரமலான் மாதம் பிந்திய பத்தில் இஃதிகாப் இருப்பது கண்டிப்பான சுன்னத்தாகும்.

Check Also

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் கட்டிடங்களில் கட்டுமான பிழைகள்

காயல்பட்டினம் புதிய பேருந்து நிலையம் மற்றும் மீன் மார்க்கெட் வணிக வளாக கட்டிடங்களில் கட்டு…