Home Uncategorized சுன்னத்தான தொழுகைகள்
Uncategorized - பொது - March 21, 2011

சுன்னத்தான தொழுகைகள்

உபரியானவை எனப் பொருள் தரும் நபிலான வணக்கங்களை வணங்குவதால் நன்மைகள் கிடைக்கும்.அவைகளை விட்டுவிடுவதால் தண்டனை தரப்படுவதில்லை. ஃபர்ளான வழிபாடுகளில் ஏற்படும் குறைகளi மறுமையில் நிறைவுபடுத்துவதற்காகவே இந்த நபிலான வணக்கங்கள் உள்ளன.

ஃபர்ளுத் தொழுகையின் முன், பின் சுன்னத்துக்கள்:

ளுஹர், அஸர் இவைகளுக்கு முன்பாக இரண்டிரண்டு ரக்அத்துகளாக நான்கு ரக்அத்துகளும், ளுஹருக்குப் பின்பு இரண்டிரண்டு ரக்அத்தாக நான்கு ரக்அத்துகளும், மஃரிபிற்கு முன் (நேரமிருப்பின்) இரண்டு ரக்அத்களும், பின் இரண்டு ரக்அத்துகளும், இஷாவிற்கு முன் இரண்டு ரக்அத்துகளும், பின் இரண்டு ரக்அத்துகளும், ஸுப்ஹிற்கு முன் இரண்டு ரக்அத்துகளும் ஆக மொத்தம் 22 ரக்அத்துகள் ஸுன்னத்தான தொழுகைகளாகும்.

இவற்றில் ஸுப்ஹுக்கும், ளுஹருக்கும் முன் உள்ள இரண்டு ரக்அத்துகள்  ளுஹ்ரு, மஃரிப், இஸாவிற்குப் பின்னுள்ள இரண்டு ரக்அத்துகள் சுன்னத்துல் முஅக்கதாவாகும்.

ஃபர்ளான தொழுகையை விட்டால் களா செய்வது கடமையாவது போல் சுன்னத்தான தொழுகையை விட்டால் அதை களா செய்வது சுன்னத்தாகும்.

ஸுப்ஹுடைய முன் சுன்னத்தில் முதலாவது ரக்அத்தில் 'அலம் நஷ்ரஹ், குல் யாஅய்யுஹல் காபிரூன சூராக்களையும், இரண்டாவது ரக்அத்தில் 'அலம் தர கைப-குல் ஹுவல்லாஹு அஹது' சூராக்களையும் ஓதுவது ஸுன்னத்தாகும். வழமையாக ஓதித் தொழுபவருக்கு இதனால் மூலநோய் நீங';கி விடும்.

வித்ரு தொழுகை:
 

இஷா தொழுகையை தொழுது முடித்ததிலிருந்து அதிகாலைப் பொழுது உதயமாகும் வரை வித்ரு தொழுகையை தொழுது கொள்ளலாம். ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு, ஒன்பது, பதினொன்று என ஒற்றைப் படையாகத் தொழ வேண்டும். குறைந்த அளவு ஒன்றும் அதிகளவு பதினொன்று ரக்அத்துகளும் ஆகும்.

மூன்று ரக்அத் தொழும்போது முதல் ரக்அத்தில் 'ஸப்பிஹிஸ்ம' சூராவும், இரண்டாவது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன' சூராவும், மூன்றாவது ரக்அத்தில் குல் ஹுவல்லாஹு அஹது, குல்அவூது ரப்பில் பலக், குல் அவூது ரப்பின்னாஸ்' சூராக்களும் ஓதுவது சுன்னத்தாகும்.
 

ஸலாத்துள் ளுஹா:

ளுஹாவின் குறைந்த அளவு இரண்டு ரக்அத்தும் விரிந்த அளவு எட்டு ரக்அத்தும்  மிக விரிந்த அளவு பன்னிரண்டு ரக்அத்துகளுமாகும். சூரியன் உதித்து ஒரு ஈட்டியின் அளவு உயர்ந்தது முதல் 'ளுஹர்' தொழுகையின் வக்து வரை இதன் நேரமாகும். ஆனால் காலை 9 மணி முதல் 11 மணிவரை தொழுவது மிகச் சிறப்பாகும்.

இதன் முதல் ரக்அத்தில் 'வஸ்ஸம்ஸி' அல்லது காபிரூன்' சூராக்களையோ இரண்டாவது ரக்அத்தில் 'வள்ளுஹா வல்லைலி' அல்லது 'அஹது' சூராக்களை ஓதுவது சுன்னத்தாகும்.

தஹிய்யத்துல் மஸ்ஜித்:

இதன் பொருள் 'பள்ளியின் காணிக்கைத் தொழுகை' என்பதாகும். உள் பள்ளிக்கு செல்பவர் அங்கு சென்று அமருவதற்கு முன் இரண்டு ரக்அத் தொழுது விட்டு அமருவது சுன்னத்தாகும். தகுந்த காரணமின்றி இத்தொழுகையை விடுவது மக்ரூஹ் ஆகும். பள்ளியில் ஜமாஅத் நடைபெறப் போகிறது என்றால், அங்கு நின்று  கொண்டு பர்ளான தொழுகையை எதிர்பார்ப்பது சுன்னத்தாகும். ஏதாவது காரணத்தினால் பள்ளியினுள் சென்ற பிறகு தஹிய்யத்துல் மஸ்ஜித் தொழ விரும்பாதோர் மூன்றாம் கலிமாவை
 

سبحان الله والحمد لله ولا اله الا الله والله اكبر ولا حول ولاقوّة الاّ بالله العليّ العطيم.
  

நான்கு வை ஓதுவது சுன்னத்தாகும்.

இஸ்திகாராத் தொழுகை:

நன்மையை நாடித் தொழுதல் என்று இதற்குப் பெயர். ஒருவர் ஒரு செயலை செய்வதா அல்லது விடுவதா? அதன் விளைவு நன்மையா? தீமையா? எனத் தடுமாறினால் இஸ்திகாராவுடைய நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுவதும், முதலாவது ரக்அத்தில் ஃபாத்திஹா ஸூராவிற்குப் பின் குல்யாஅய்யுஹல் காபிரூன்' சூராவையும், இரண்டாவது ரக்அத்தில் 'குல்ஹுவல்லாஹு அஹது' சூராவையும் ஓதுவது சுன்னத்தாகும். ஒரு தெளிவான முடிவு தெ ரியும்வரை திருப்பித் திருப்பித் தொழுவது சுன்னத்தாகும்.இதை தொழுத பின்பு ஓத வேண்டிய துஆ:
 

الّلهمّ انّي اسْتخيرك بعلمك واستقدرك بقدرتك. واسالك من فضلك العضيم. فانّك تقدر ولا اقدر. وتعلم ولا اعلم. وانت علاّمالغيوب. الّلهمّ ان كنت تعلم انّ هذا الامر خيرلي في ديني ودنياي وعقبة امري وبجله وآجله فقدّره لي. وباركل لي فيه. ثمّ يسّره لي. وان كنت تعلم انّ هذا الامر شرّلي في ديني ودنياي وعاقبة امري وعاجله وآجله فاصرفني عنه. واصرفه عنّي. واقدر لي الخير اينما كان انّك علي كلّ شيئ قدير.

ஸலாத்துல் உளு:

உளுச் செய்த பின் தொழும் தொழுகை' என்று இதற்குப் பெயர். உளு செய்தபின் உளுவின் சுன்னத் என நிய்யத்  செய்து இரண்டு ரக்அத் தொழுவது சுன்னத்தாகும் முதலாவது ரக்அத்தில் பாத்திஹா சூராவிற்குப் பின்,

ولو انّهم اذ ظّلموا انفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرّسول لرجدوا الله توّابا رّحيم
 
என்ற ஆயத்தை ஓதி 'அஸ்தஃபிருல்லாஹ்' என மூன்று முறை கூறி 'குல் யா அய்யுஹல் காபிரூன்' சூராவை ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில்,

ومن يعمل سوءا او يظلم نفسه ثمّ يستغفر الله يجد الله غفورا رّحيما

என்ற ஆயத்தை ஓதி 'அஸ்தஃபிருல்லாஹ்' மூன்று முறை கூறி ;குல்ஹுவல்லாஹு அஹது சூராவை ஓதுவதும் சுன்னத்தாகும்.

ஸலாத்துல் அவ்வாபீன்: மதி மறக்கும் நேரத்தில் அல்லாஹ்வை நினைவு கொள்பவர்களின் தொழுகை என்று இதற்குப் பெயர். மஃரிபிற்கும் இஷாவிற்கும் இடைப்பட்ட நேரத்தில் வழமையான நபில் தொழுகைகள், தஸ்பீஹ்களை நிறைவு செய்தபின் மிக உச்ச அளவான இருபது ரக்அத்துகளை அல்லது மிகக் குறைந்த அளவான இரண்டு ரக்அத்துகளை அவ்வாபீனுடைய நிய்யத் செய்து தொழுவது சுன்னத்தாகும். அதன்பின் கீழ்வரும் துஆவை மூன்று முறை ஓதுவது விரும்பத்தக்கதாகும்.

اللهم اني أستودعك ايماني في حياتي وعند مماتي وبعد مماتي فاحفظه عليّ انّك علي كلّ شيئ قدير
 

தஸ்பீஹ் தொழுகை:
 

வாரத்தில் ஒரு முறை அல்லது மாதத்தில் ஒருமுறை அல்லது வருடத்தில் ஒரு முறையாவது இதைத் தொழுவது சுன்னத்தாகும்.
 

இதை இரண்டு இரண்டு ரக்அத்துகளாக இரண்டு ஸலாமில் அல்லது நான்கு ரக்அத்துகளாக ஒரு ஸலாமில் தொழ வேண்டும். இரண்டு இரண்டு ரக்அத்துகளாக பிரித்து தொழுவதுதான் சிறந்தது.
முதல் ரக்அத்தில் பர்திஹா ஸூராவிற்குப் பின் அல்ஹாக்கு முத்தகாதுரு சூராவும் இரண்டாவது ரக்அத்தில் வல்அஸ்ரி சூராவம் 3வது ரக்அத்தில் குல்யாஅய்யுஹல் காபிரூன சூராவும், நான்காவது ரக்அத்தில் அஹது சூராவும் ஓதுவது சுன்னத்தாகும்.'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' என்ற தஸ்பீஹை 4 ரக்அத்திலும் 300 தடவை ஓதுவது சுன்னத்தாகும்.

நின்ற நிலையில் சூராக்களை முடித்த பின்பு 15 விடுத்தம், ருகூவில் 10 விடுத்தம், இஃதிதாலில் 10 விடுத்தம், முதல் ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதின் நடுவில் 10 விடுத்தம், இரண்டாவது ஸுஜூதில் 10 விடுத்தம், இரு ஸுஜூதுகளை முடித்து எழுமுன் அமரும் இருப்பில் 10 விடுத்தம் இவ்வாறு ஒரு ரக்அத்தில் 75 வீதம் நான் கு ரக்அத்துகளில் 300 தஸ்பீஹ் ஓத வேண்டும்.
இரண்டாவது ரக்அத்தில் அத்தஹிய்யாத் ஓதி முடித்தபின் 10 தஸ்பீஹ் ஓதுவதுதான் சிறப்புடையதாகும்.

முதல் ரக்அத்தில் அல்ஹாகுமுத் தகாதுர் சூராவும், இரண்டாவது ரக்அத்தில் வல் அஸ்ரி சூராவம், மூன்றாவது ரக்அத்தில் சூரா காபிரூனும், நானகாவது ரக்அத்தில் சூரா இக்லாஸும் ஓதுவது சிறப்பானது. தொழுகை முடிந்த பிறகு கீழ்காணும் துஆவை ஓதுவது சிறப்பானதாகும்.

اَللّهُمَّ انيْ أسئلك توْفيق اهل الهداي واعمال اهل اليقين* ومناصحة اهل التوبة* وعزم اهل الصّبر* وجدّ اهل الخشبية* وطلب اهل الرّغبة* وتعبّد اهل الورع* وعرفان اهل العلم* حتي اخافك اَللّهُمَّ انّي أسئلك مخافة تحجزني عن معا صيك * حتي اعمل بطاعتك عملا استحقّ به رضاك* وحتي اناصحك بالّتوبة خوفا منك* وحتي  اخلص لك النصيحة حياء منك* وحتي اتوكال عليك في الامور حسن ظنّ بك سبحان خالق الناّر

ஸலாத்துல் ஈதைன்:

பொழுது உதயமானதிலிருந்து ளுஹரின் வக்து வரும் வரை நோன்புப் பெருநாள், ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகளின் நேரங்களாகும். இவ்விரு பெருநான் தொழுகைகளும் களாவாகிவிட்டால் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.  உளுஹிய்யாவை அறுக்க வேண்டியிருப்பதால் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை அதன் ஆரம்ப வக்திலும், ஃபித்ரு ஜகாத்தை கொடுத்து முடிப்பதற்காக நோன்புப் பெருநாள் தொழுகையை சற்றுக் காலம் தாழ்த்தியும் தொழுவது சுன்னத் ஆகும்.

ஈத் தொழுகையானது தொழுகையின் எல்லாவித ஃபர்ளு, ஷர்த்துகளைக் கொண்ட இரண்டு ரக்அத் தொழுகை ஆகும். எனினும் முதல் ரக்அத்தில் வஜ்ஹத்து ஓதிய பின் ஏழுமுறை  தக்பீர் கூறுவதும், இரண்டாவது ரக்அத்தில் நிலைக்கு வந்த பின்பு ஐந்து முறை தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும். ஒவ்வொரு தக்பீர் கூறும்போதும்  இரு கைகளையும் உயர்த்தி பின்பு அவைகளைக் கட்டிக் கொள்வதும் மற்றும் இந்த தக்பீர்களுக்கிடையில் 'ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர்' எனச் சொல்வதும் சுன்னத்துக்களாகும். ஃபாத்திஹா சூராவிற்குப் பின் 'காஃப்'; (50வது) சூரா  அல்லது 'ஸப்பிஹிஸ்ம ரப்பிகல்'; சூராவும் இரண்டாவது ரக்அத்தின் ஆரம்பத்தில் 'ஹல்அதாக' சூராவும் ஓதுவதும் சுன்னத்தாகும்.

இரு பெருநாட்களின் முதல் நாள் மாலை சூரியன் மறைந்தது முதல் பெருநாள் தொழுகை தொழத் தொடங்கும் வரை எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் தெருக்களிலும், வீதிகளிலும், வீடுகுளிலும் நின்ற, அமர்ந்த, படுத்த அமைப்புகளிளெல்லாம் தக்பீர் சொல்லிக் கொண்டே இருப்பது

சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முர்ஸல் என்று பெயர். ஹஜ்ஜுப் பெருநாளில் அரபா தினத்தின் ஸுப்ஹுத் தொழுகையிலிருந்து அய்யாமுத் தஷ்ரீக் (துல்ஹஜ் பிறை 13) அஸர் வரை எல்லாத் தொழுகைகளுக்கும் பின்பு மட்டும் தக்பீர் சொல்வது சுன்னத்தாகும். இதற்கு தக்பீர் முகய்யத்' என்று பெயர் மேலும் துல்ஹஜ் பிறை 1 முதல் 10 வரை ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய குர்பானிப் பிரயாணிகளைப் பார்க்ககும் போதோ, இவைகளின் சப்தங்களைக் கேட்கும்போதோ தக்பீர் சொல்வது சுன்னத்தாகும்.

தக்பீர்:

الله اكبر الله اكبر الله اكبر لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد.. (2)
الله اكبر الله اكبر الله اكبر كبيرا والحمد الله كثيرا وسبحان الله بكرة وّأصيلا لا اله الاّ الله ولا نعبد الاّ اياه مخلصين له الدّين ولو كره الكافرون لااله الاّ الله وحده وصدق وعده ونصر عبده وأعزّ جنده وهزم الاحزاب وحده لااله الاّ الله والله اكبر الله اكبر ولله الحمد

தொழுகைக்குப் பின்பு குத்பா ஓதுவது சுன்னத்தாகும். ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டும், இரண்டாவது குத்பாவை தொடர்ச்சியான ஏழு தக்பீர்களைக் கொண்டும் தொடங்குவதும் பெருநாள் குத்பாவின் சொற்றொடர்களுக்கு இடையே தக்பீர் கூறுவதும் சுன்னத்தாகும்.

ஸலாத்துல் குஸூபைன்: சந்திர, சூரிய கிரகணத் தொழுகைகைள்:

சந்திர, சூரிய கிரகணங்கள் பிடிக்கத் துவங்கியது முதல் அது நீங்கும் வரை அல்லது கிரகணம் பிடித்த நிலையிலேயே சூரியன் மேற்கில் மறையும் வரை அல்லது சந்திர கிரகணம் ஏற்பட்ட நிலையில் காலை பொழுது புலரும் வரை கிரகணத் தொழுகைகளைத் தொழுவது சுன்னத்துல் முஅக்கதாவாகும்.
சாதாரண சுன்னத் தொழுகையைப் போன்று கிரகணத் தொழுகைக்காக நிய்யத் செய்து இரண்டு ரக்அத் தொழுது முடிப்பது இதன் குறுகிய அமைப்பாகும்.

இரண்டாவது முறை முதல் ரக்அத்தில் பர்திஹாவிற்குப் பின் சூரா பகரா அல்லது அதே அளவில் வேறு சூரா ஓதி முடித்து ருகூவிற்கு சென்று சூரா பகராவின் நூறு ஆயத்துகள் அளவிற்கு அங்கு தஸ்பீஹ் ஓத வேண்டும். பின்பு அங்கிரு:ந்து நிலைக்கு வந்து திரும்பவும் பாத்திஹா சூராவையும் ஆலஇம்ரான் சூராவை அல்லது அதே அளவில் வேறு சூராவை ஓதிய பின் இரண்டாவது முறையாக ருகூவிற்கு செல்ல வேண்டும். அதில் சூரத்துல் பகராவின் எண்பது

ஆயத்துக்கள் அளவிற்கு தண்பீஹ்கள் ஓத வேண்டும்.

சூரத்துல் பகராவின் நூறு மற்றும் எண்பது ஆயத்துகள் அளவு தஸ்பீஹ்களை முதலாவது ஸுஜூதிலும் இரண்டாவது ஸுஜூதிலும் ஓத வேண்டும். இதே போல் அடுத்த ரக்அத்தில்பாத்திஹா சூராவிற்குப் பின் சூரத்துன் னிஸாவையோ அதே அளவுள்ள சூராக்களையோ ஓத வேண்டும்.இரண்டாவது நிலைகயில் பாத்திஹாவிற்குப் பின் சூரத்துல் மாயிதாவையோ அதே அளவுள்ள வேறு சூராவையோ ஓத வேண்டும். இரண்டாது ரக்அத்தின் முதல் ருகூஉ, ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் எழுபது ஆயத்துகள் அளவிற்கும், இரண்டாவது ருகூஉ, ஸுஜூதுகளில் சூரத்துல் பகராவின் ஐம்பது ஆயத்துகள் அளவிற்கும் தஸ்பீஹுகள் ஓதி தொழ வேண்டும். இதுவே கிரகணத் தொழுகையின் பரிபூரண அமைப்பாகும்.

தொழுகைக்குப் பின்பு ஜும்ஆ குத்பாவின் ஃபர்ளு, ஷர்த்துகளுடன் முதல் குத்பாவை ஒன்பது தக்பீர்களைக் கொண்டு குத்பா ஓதுவது சுன்னத்தாகும்.

ஸலாத்துல் இஸ்திஸ்கா: மழை தேடித் தொழுதல்.

தண்ணீர் அறவே இல்லாத போது அல்லது தேவையான அளவை விட குறைவாக கிடைக்கும் போது மழை தேடி தொழுவது சுன்னத்தாகும். தொடர்ந்து மூன்று நாட்கள் நோன்பு நோற்ற பின் நான்காவது நாளில் நோன்பு நோற்ற நிலையில் வயோதிகர்கள் சிறார்கள் அனைவரும் பழைய ஆடைகளை அணிந்து பெருநாள் தொழுகையைப் போன்று இரண்டு ரக்அத்துகள் தொழுவது இதன் அமைப்பாகும்.
முதல் ரக்அத்தில் ஏழு முறை தக்பீh கூறி கைகளைக் கட்டிக் கொண்ட பின் பாத்திஹா சூh ஓதி காப் அல்லது ஸப்பிஹிஸ்ம சூரா ஓதுவதும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து முறை தக்பீர் கூறிய பின் பாத்திஹா சூரா ஓதி முடித்து இக்தரபத்திஸ்ஸாஅத்து' அல்லது 'ஹல் அதாக' சூரா ஓதுவதும் ஸுன்னத்தாகும்.
பெருநாள் குத்பா போன்று இதிலும் இரண்டு குத்பாக்கள் ஓதுவதும் இதன் முதல் குத்பாவில் ஒன்பது தடவையும், இரண்டாவது குத்பாவில் ஏழு தடவையும் 'இஸ்திக்பார்' கொண்டு ஆரம்பிப்பதும் சுன்னத் ஆகும்.

இரண்டாவது குத்பாவின் இடையில் இமாம் கிப்லாவை நோக்கித் திரும்பியவாறு தனது மேனியிலுள்ள துண்டை-அதன் மேல் பகுதியைக் கீழ்ப் பகுதியாகவும் இடப் பகுதியை வலப் பகுதியாகவும் புறப்பகுதியை உட்பகுதியாகவும் மாற்றிக் கொள்ள வேண்டும். இதுபோன்று மக்களும் செய்வதோடு அனைவரும் சப்தமின்றி துஆ செய்வதும் சுன்னத்தாகும்.

தாவீஹ் தொழுகை:
 

'ஓய்வு கொள்ளும் தொழுகை' என்பது இதன் பொருள். தாவீஹ் தொழுகை நோன்பு காலங்களில் இஷாவிற்கு பின் இரண்டிரண்டு ரக்அத்துகளாக பத்து ஸலாமில் 20 ரக்அத்துகள் தொழ வேண்டும். இதை ஜமாஅத்தாக தொழுவது போன்று தனியாகவும் தொழுது கொள்ளலாம். ரமலான் 30 நாட்களுக்குள் குர்ஆன் ஷரீபை பரிபூரணமாக ஓதித் தொழுவது சுன்னத்தாகும். எனினும் அவரவர்களுக்குத் தெரிந்த சூராக்களை ஓதியும் தொழுது கொள்ளலாம்;.

தஹஜ்ஜுத்:

இரவுப் பொழுதில் சற்றேனும் உறங்கி விழித்பின்பு தொழும் சுன்னத்தான தொழுகையாகும். இதை வழமையாக தொழுபவர் காரணமின்றி இதை விடுவது மக்ரூஹ் ஆகும்.

இதன் குறைந்த அளவு இரண்டு ரக்அத்துகள். கூடிய அளவு பன்னிரண்டு ரக்அத்துகள். மிக விரிந்த அளவு கணக்கற்ற ரக்அத்துகள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…