Home Uncategorized தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு

தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு

       செய்கு அப்துல் காதிர் என்ற தைக்கா ஸாஹிபு வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஹஜ்ரத் உமர் வலி ரலியல்லாஹு அன்ஹு அவர்களின் மூத்த மகனாக காயல்பட்டணத்தில் ஹிஜ்ரி 1191 ல் பிறந்தார்கள். தமிழ்நாடு, கேரளா மற்றும் இலங்கை முழுவதும் சென்று இஸ்லாத்தை பரப்பினார்கள். இவர்கள் தமிழ் மற்றும் அரபி மொழிகளில் பாடல்கள் இயற்றியுள்ளார்கள். அதில் 'அஹ்மதுல்லா' என்ற பைத் மிகப் பிரபலமாக விளங்குகிறது. ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் மீ து பாடப்பட்ட புகழ்ப்பாவாகும். இதை பாடிக் கொண்டிருக்கும்போதுஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஆஜராகி இவர்களை கட்டித் தழுவி ஆசிர்வதித்தனர். அக் காலத்திய குத்பாக விளங்கினார்கள்.
       இவர்கள் இறை நேசச் செல்வராகவும் ஆசானாகவும் திகழ்ந்தார்கள். இவர்களிடம் நிறைய இறை நேசச் செல்வர்கள் இவர்களிடம் பாடம் பயின்றுள்ளனர். அவர்களில் முக்கியமான இலங்கையைச் சார்ந்தவர்கள் செய்கு முஸ்தபா ஆலிம் வலி,கசவத்தை முஹம்மது லெப்பை ஆலிம் வலி ஆகியோர். தங்கள் தகப்பனாரின் கலீபாவாகவும் கேரளம் காலிகட்டைச் சார்ந்த ஸெய்யிது செய்கு ஜிப்ரி தங்களின் கலீபாவாகவும் திகழ்ந்தார்கள்.    
      இவர்களின் மகன் செய்யிது முஹம்மது ஸாலிஹ் வலி மற்றும் அவர்களின் சகோதரர் ஆகியோரும் இறை நேசர்களே!
      இவர்களின் மறைவு ஹிஜ்ரி 1272 . இவர்களின் அடக்கஸ்தலம் காயல்பட்டணம் ஸாஹிபு அப்பா தைக்கா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…