தாழிப்பு
சமையலுக்கு கறி, மீன், காய்கறி சமைக்கும்போது தாழிப்பு என்று ஒன்று தேவைப்படுகிறது. இது சமைத்தப் பொருட்களை சுவையாக்குகிறது.
கறிக்கு தாழிப்பு: ஆடு, மாடு, கோழி, காடை, கவ்தாரி போன்றவற்றின் இறைச்சிகளுக்கு தாழிப்பு என்பது நல்ல எண்ணெய் அல்லது நெய்யை தேவையான அளவிற்கு எடுத்து சட்டியில் ஊற்றி நன்றாக சூடாக்க வேண்டும். சூடான எண்ணெயில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு வெங்காயம் நன்றாக பொன்னிறத்திற்கு வரும் வரை வதக்கவும். அதன் பின் இஞ்சி, பூண்டு கலவை(சமஅளவு) அரைத்தது தேவையான அளவிற்கு எடுத்து அத்துடன் தயிர் தேவையான அளவு, கிராம்பு 2 அல்லது 3, பட்டை கொஞ்சம், ஏலக்காய் 3 அல்லது 4, கறிவேப்பிலை கொஞ்சம், புதினா இலை ரம்பை இலை(தேவைப்படின்) சேர்த்து சட்டியில் போட்டு நன்றாக பொன்னிறம் வரும் வரை வதக்கவும். அதன்பிறகு அதில் மசாலாதூள் தேவையான அளவு போட்டு கறியை போடவேண்டும்.
காய்கறி, மீன், புளியானத்திற்கு தாழிப்பு: தேவையான அளவு எண்ணெய் அல்லது நெய் எடுத்து ஒரு சட்டியில் ஊற்றி நன்றாக சூடாக்கவும். அதில் நறுக்கிய வெங்காயத்தையும், கறிவேப்பிலையையும், கடுகு, நச்சீரகம் கொஞ்சம் போட்டு நன்றாக வதக்கவும்.
காய்கறி சமைக்க அத்துடன் மசாலா சேர்த்து காய்கறியை தாழிப்பில் கொட்டி சமைக்க வேண்டும். கஞ்சி, ரவை பசியாறங்களுக்கும் இதே மாதிரி செய்யவும்.
மீனுக்கும், புளியானத்திற்கும் மீனை சமைத்த பிறகும் புளியானத்தை காய்ச்சிய பிறகும் தாழிப்பை அதில் கொட்டி நன்றாக கலக்கிவிடவும்.
புக்கை சோறுக்கும் இதே மாதிரி செய்யவும்.
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…