Home செய்திகள் தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

தூத்துக்குடி ரயில்வே பராமரிப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்

தூத்துக்குடி ரயில்வே நிலையத்தில் நடைபெற உள்ள முக்கிய பராமரிப்பு பணிகள் காரணமாக, பல ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் மற்றும் ரத்துகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12694)
டிசம்பர் 21 முதல் 23 வரை தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும்.

முத்து நகர் எக்ஸ்பிரஸ் (12693)
டிசம்பர் 20 முதல் 22 வரை சென்னையில் இருந்து புறப்படும் ரயில், வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி
(56726 / 56723) ரயில்கள் டிசம்பர் 17 முதல் 23 வரை முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

திருநெல்வேலி – தூத்துக்குடி – திருநெல்வேலி
(56722 / 56721) ரயில்கள் டிசம்பர் 17, 18, 19, 20, 22, 23 ஆகிய நாட்களில் முழுமையாக ரத்து.

இரவு நேர வாஞ்சி மணியாச்சி – தூத்துக்குடி – வாஞ்சி மணியாச்சி
(56724 / 56725) ரயில்கள் டிசம்பர் 17 முதல் 22 வரை ரத்து செய்யப்படும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் (16792)
டிசம்பர் 14 முதல் ஜனவரி 27 வரை பாலக்காட்டில் இருந்து புறப்படும் ரயில், திருநெல்வேலி வரை மட்டும் இயக்கப்படும்.

பாலருவி எக்ஸ்பிரஸ் (16791)
டிசம்பர் 15 முதல் 28 வரை தூத்துக்குடியில் இருந்து இயக்கப்பட வேண்டிய ரயில், திருநெல்வேலியில் இருந்து இயக்கப்படும்.

மைசூர் – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (16235)
டிசம்பர் 21 முதல் ஜனவரி 23 வரை, தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து இயக்கப்படும்.

தூத்துக்குடி – மைசூர் எக்ஸ்பிரஸ் (16236)
டிசம்பர் 20 முதல் 22 வரை மைசூரில் இருந்து புறப்படும் ரயில், வாஞ்சி மணியாச்சி வரை மட்டும் இயக்கப்படும்.

ஓஹா – தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் (19568)
டிசம்பர் 19 அன்று குஜராத் ஓஹாவில் இருந்து புறப்படும் ரயில், கோவில்பட்டி வரை மட்டும் இயக்கப்படும்.

தூத்துக்குடி – ஓஹா எக்ஸ்பிரஸ் (19567)
டிசம்பர் 21 அன்று தூத்துக்குடியில் இருந்து புறப்பட வேண்டிய ரயில், கோவில்பட்டியில் இருந்து இயக்கப்படும்.

Check Also

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா?

நீங்கள் சமர்ப்பித்த SIR படிவம் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? உங்கள் பெயர் வந்துவிட்டதா? http://ele…