Home Uncategorized தொழுகையின் குறிக்கப்பட்ட நேரங்கள்
Uncategorized - பொது - February 19, 2011

தொழுகையின் குறிக்கப்பட்ட நேரங்கள்

 

நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிப்பிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.
(ஆல்குர் ஆன் :4:103).

ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது அவசியமாகும்.
நாள்தோறும் நிறைவேற்றப்படும் வாஜிபான தொழுகை மொத்தமாக பதினேழு ரகஅத்துகளாகும்.
    
   சுபஹ்    –           இரண்டு ரகஅத்துகள்

   ளுஹர்  –           நான்கு ரகஅத்துகள்

   அஸர்    –           நான்கு ரகஅத்துகள்

    மஃரிப்     –           மூன்று ரகஅத்துகள்

     இஷா     –           நான்கு ரகஅத்துகள்

லுஹர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் (உச்சி) சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனுக்கு சமமாக ஆகி அஸருடைய நேரம் வராத வரையிலாகும். இன்னும் அஸர் (தொழுகை) உடைய நேரம் சூரியன் மஞ்சள் நிறத்தையடையாத வரையாகும். இன்னும் மஃரிப் (தொழுகை) உடைய நேரம் செவ்வானம் மறையாத வரையாகும். மேலும் இஷா (தொழுகை) உடைய நேரம் நள்ளிரவு வரையாகும். இன்னும் ஸுப்ஹ் (தொழுகை) உடைய நேரம் கிழக்கு வெளுத்ததிலிருந்து சூரியன் உதயமாகும் வரையிலாகும். என்று நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அம்ர் (ரலியல்லாஹு அன்ஹு ) நூல் : முஸ்லிம் (612)

சுப்ஹுடைய அதானின் நேரம்.

சுப்ஹுடைய அதானுக்கு நெருங்கிய போது கிழக்குப் பகுதியிலிருந்து வெள்ளை தோன்றி மேல்நோக்கி வரும். இதை பஜ்ருல் அவ்வல் எனப்படும். அது அங்குமிங்கும் பரவும் போது பஜ்ருத்தானி எனப்படும். அதுதான் சுப்ஹுடைய ஆரம்ப நேரமாகும்.

ளுஹர்.

கம்பையோ, அல்லது அது போன்றதையோ பூமியில் குத்தி வைத்தால் அதன் நிழல் மிகவும் குறைந்து மறுபக்கத்தில் தோன்ற ஆரம்பிக்கும் போது ளுஹருடைய நேரம் ஆரம்பமாகின்றது.

மஃரிப்.

சூரியன் மறைந்ததன் பின் கிழக்குப் பகுதியில் தெரியும் சிவந்த நிறம் மறைகின்ற போது மஃரிபுடைய நேரம் ஆரம்பமாகும்.

இரவின் அரைவாசி.

சூரியன் மறைவதற்கும் சுப்{ஹடைய அதானுக்குமிடையிலுள்ள நேரத்தை இரண்டால் பிரித்தால் வருபவை இரவின் அரைவாசியாகும். இஷாவுடைய கடைசி நேரமாகும். வேண்டுமென்றோ, அல்லது தங்கடங்களுக்காகவோ மஃரிபையும் இஷாவையும் தொழாது விட்டால் இஹ்தியாதே வாஜிபின்படி சுப்{ஹடைய அதானுக்கு முன்பு அதாவான, அல்லது கழாவான நிய்யத்து இல்லாது தொழ வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Check Also

நமது ஊரில் குளங்கள் எங்கே?

நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…