உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு
தமிழ்நாட்டில் அமைந்துள்ள காயல்பட்டணத்தில் உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ ஹிஜ்ரி 1163 (கி.பி.1751) மஹான் மாதிஹுர் ரஸூல் சதக்கத்துல்லாஹில் காஹிரி ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகளார் கதீஜா உம்மா ரலியல்லாஹு தஆலா அன்ஹா அவர்களின் மகனார் அப்துல் காதிர் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களின் மகனாக பிறந்தார்கள்.
தாயார் ஃபாத்திமா ரலியல்லாஹு தஆலா அன்ஹா
உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ முதலில் முஹம்மது நுஸ்கி என்ற பாலப்பா ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களிடம் கல்வி கற்றார்கள். அவர்களிடம் தீர்சை பெற்றார்கள்.
நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்களின் திருப் பேரரான ஸெய்யிது ஜிப்ரி தங்கள் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களிடமும் கிலாபத்தும் பெற்றார்கள்.
புனித ஹஜ் மற்றும் ஜியாரத்திற்காக மக்கா, மதினா ஷரீபிற்கு சென்றிருந்த சமயம் மான் அஸ்ஸெய்யிது முஹ்ஸின் அல் முகைபலி அவர்களை ரலியல்லாஹு தஆலா அன்ஹூ சந்தித்தார்கள். இவர்களிடம் மறைவான ஞானங்களை கற்று கிலாபத்தும் பெற்றார்கள்.
அவர்களது அன்புக் கட்டளைக்கு இணங்கி ஐந்து வருடங்கள் மதினாவில் மஸ்ஜிதுன் நபவியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்தார்கள் . பின்பு காயல்பட்டணம் திரும்பி வந்தார்கள்.
ஒரு நாள் காயல்பட்டணம் மொகுதூம் தெருவில் உள்ள மொகுதூம் பள்ளியில் தொழ வைத்துக் கொண்டிருந்தபோது அசரீரி அழைப்பை கேட்டார்கள். அப்போது மிஹ்ராப் பிளந்து வழிவிட்டது பின்னால் உள்ளவரிடம் இஷாரா செய்து மிஹ்ராப் உள்ளே சென்று மறைந்தார்கள் . அந்த கணப்பொழுதில் கண்ணூரில் நின்றார்கள். அங்கு ஸெய்யிது முஹம்மது புஹாரி தங்கள் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்களைத் தேடிச் சென்று அவர்களிடம் கிலாஃபத்தும் பெற்றார்கள். .
புகாரி தங்கள் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்கள் மறைய இருந்த காலத்தில் தனது சீடர்களிடம் உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டு வேண்டியதை கொடுத்தார்கள்.
உமர் வலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹு அவர்களிடம் உமக்கு என்ன வேண்டும் என்று கேட்ட பொழுது “தங்கள் தன்னே வேண்டும்” என்று கூறினார்கள். மிகவும் மகிழ்ந்து “நான் தான் நீர்” என்று முழங்கினார்கள் . மேலும் உங்களது பிள்ளைகளில் யாரும் விலாயத்தை அடையாமல் மரணிக்க மாட்டார்கள் என்று சுப சோகத்தையும் கூறினார்கள்
இவர்களுக்கு ஆறு மகன்களும் ஒரு மகளும் இருந்தார்கள். அனைவர்களும் வலியுல்லாக்களாக திகழ்கிறார்கள்.
அஷ்ஷைகு அப்துல் காதிர் தைக்கா ஸாஹிபு வொலிநாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
அஸ்ஸெய்யிது அஹ்மது வொலிநாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
அஸ்ஸெய்யிது முஹம்மது வொலிநாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
அஹ்மது கண்டு வொலி நாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
மஹ்மூது வொலிநாயகம்
ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
முஹ்யித்தீன் வொலிநாயகம் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ
ஸெய்யிது பாத்திமா வொலிய்யா நாயகி ரலியல்லாஹு தஆலா அன்ஹா ஆகிய இவ்வேழு வொலிமார்களும் ஹஸ்ரத் உம் றொலி நாயகத்தின் மகவுகளாவர்.
இன்னவர்கள் யாவரையும் ஈன்றெடுத்த உமறொலி நாயகத்தின் மனைவி பெயர் ஸெய்யிது மீரா உம்மாள் ரலியல்லாஹு தஆலா அன்ஹா.
ஹஸ்ரத் அஷ்ஷைகு முஹம்மது ஸாலிஹ் வொலியுல்லாஹ் ரலியல்லாஹு தஆலா அன்ஹூ வெனும் புகழ் மிக்க நாமம் பெற்ற உலகப் பிர சித்தி பெற்ற இவ்வொலி நாயகம் , ஹஸ்ரத் உமறொலி நாயகத்தின் திருப்பேரராவார்கள்
உமர் வலி ரலியல்லாஹு தஆலா அன்ஹூ அவர்கள் பெரும்பாலும் காடுகளில் சென்று தியானம் புரிந்தார்கள் மளையா அச்சக்கரையிலுள்ள ஸாலிஹ் மலையில் கடும் தவம் புரிந்தார்கள் இந்தோனிசியாவிலும் ஞானத்தை பரப்பினார்கள்.
இவர்கள் பல ஞானப் பாடல்கள் இயற்றி உள்ளார்கள். அரபி அகர வரிசைப் படி அல்லஃபுல் அலிஃப் எனும் அரபி கவிதையை இயற்றியுள்ளார்கள். இந்தக் கவிதை உலக அளவில் மிகவும் பிரபலமானது. கேரளா மத்ரஸாகளில் பாடமாக போதிக்கப்படுகிறது.
இவர்கள் இயற்றிய ‘இலாஹி கம்து பக்கினி’ எனும் பைத் தமிழகம் மற்றும் இலங்கையில் பிரபலமானது.
இவர்கள் ஹிஜ்ரி 1216 துல்கஃதா பிறை 14 (கி.பி.1804). வெள்ளிக்கிழமை இரவு இஷா நேரத்தில் தமது 51வது வயதில் மறைந்தார்கள்.
காயல்பட்டணம் ஸாஹிபு அப்பா தைக்கா என்று அழைக்கப்படுகின்ற அவர்களின் தைக்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்
கந்தூரி மாதத்தில் கொடியேற்றப்பட்டு தினமும் அதிகாலை சுபுஹுக்குப் பிறகு குர்ஆன் ஷரீஃப் ஓதப்பட்டு
கந்தூரி அன்று மௌலித் மற்றும் ராத்திப் மஜ்லீஸ் வெகு விமர்சையாக நடைபெறுகின்றது
நமது ஊரில் குளங்கள் எங்கே?
நமது ஊரில் குளங்கள் எங்கே ? மாயமாய் மறைந்து விட்ட குளங்களால் இன்று ஊரே குளம் ஆகிவிட்டது நா…